இந்தியாவின் ஆடை கதர் ஆடை.. என்னைக்குமே மவுசு குறையாது..குதூகலத்தில் உற்பத்தியாளர்கள்

டெல்லி : இந்தியாவில் கதர் என்றாலே அதற்கு தனி மவுசு உண்டு. அதிலும் வெள்ளை கதர் ஆடைக்களுக்கு தனி இடம் உண்டு. இது வெறும் ஆடை என்பதோடு மட்டும் அல்லாமல் அது நம் விடுதலை இயக்கத்தின் ஒரு நினைவுச் சின்னமாக திகழ்ந்து வருகிறது. இத்தகைய கதர் ஆடையின் உபயோகம் கடந்த 2018 -2019 ஆண்டில் உயர்ந்துள்ளதோடு, அதன் விற்பனையும் 28% சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், அதன் மதிப்பு 3215 கோடி ரூபாயாவும் அதிகரித்துள்ளது.

நாட்டில் இந்த கதர் ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், அதோடு ரெடிமேடு ஆடைகளுக்கான நிறுவனங்களிலும் இதற்கான வரவேற்பு மிக அதிகரித்துள்ளது. மேலும் தற்போதைய காலத்தில் தூய கதராடைகளின் மதிப்பே தனி தான் என் கிறது இந்த நிறுவனம். அதிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதன் தேவையும் அதிகரித்துள்ளதோடு விற்பனையும் அதிகரித்துள்ளது என்று காதி அன்ட் வில்லேஜ் இண்டஸ்டிரீஸ் கமிசன் (KVIC) தலைவர் வி.கே சக்சேனா கூறியுள்ளார்.

அதிலும் கடந்த 2013 -2014ல் வெறும் 6 சதவிகிதம் மட்டுமே இருந்த வளார்ச்சி, 2014 -2015ல் 8 சதவிகிதமாக வளர்ச்சியடைந்தது. இதுவே கடந்த 2015 - 2016 27% சதவிகதமாக விற்பனை அதிகரித்தது. இதன் மதிப்பு 1664 கோடி ரூபாயாக அதிகரித்தது. இதுவே கடந்த 2016 - 2017ல் 29 சதவிகிதம் விற்பனை அதிகரித்து 2147 கோடி ரூபாயாக அதிகரித்தது.

ஆனால் 2017 - 2018ல் 17 சதவிகிதமாக விற்பனை குறைந்தது, எனினும் இதன் மதிப்பு 2510கோடி ரூபாயாக அதிகரித்தது. இதுவே கடந்த 2018 - 2019ல் விற்பனை 28 சதவிகிதம் அதிகரித்து 3215 கோடி ரூபாயாக அதன் மதிப்பு உள்ளது என்று காதி அன்ட் வில்லேஜ் இண்டஸ்டிரீஸ் கமிசன் (KVIC) தெரிவித்துள்ளது.

உற்பத்தி அதிகரிப்பு

உற்பத்தி அதிகரிப்பு

விற்பனை ஒரு புறம் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும் உற்பத்தி 2018 -2019 ல் 17 சதவிகிதம் அதிகரித்து, அதன் மதிப்பு 1900 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டை விட 7 சதவிகிதம் அதிகமாகும்.

உணவு மற்றும் காஸ்மெடிக்ஸுக்கும் மவுசு உண்டு

உணவு மற்றும் காஸ்மெடிக்ஸுக்கும் மவுசு உண்டு

காதி அன்ட் வில்லேஜ் இண்டஸ்டிரீஸ் கமிசன் (KVIC)ல் தயாரிக்கப்படும் காதி பொருட்கள் மட்டும் அல்லாது, இதன் மூலம் தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் மற்றும் காஸ்மெடிக்ஸ் பொருட்கள் அதிக அளவில் விற்பனை ஆகி வருகின்றது. இதுவும் காதி நிறுவனத்தின் அதிக வருவாய்க்கு வழி வகுத்துள்ளது.

மற்ற நிறுவனங்களோடுஒப்பிடும்போது அதிகம்

மற்ற நிறுவனங்களோடுஒப்பிடும்போது அதிகம்

இது விற்பனை அதிகரிப்பு மற்ற கார்மென்ட்ஸ் நிறுவனங்களோடு ஒப்பிடும் போது குறியவானதாகவே இருந்தாலும், இதன் வளர்ச்சி இன்னும் சில வருடத்தில் அதை மிஞ்சும் அளவுக்கு இருக்கும் என்றும் கூறியுள்ளது காதி அமைப்பு.
கடந்த 2017 - 2018 ஆம் ஆண்டு ஆதித்யா பிர்லா பேஷன் மற்றும் ரீடெல் நிறுவனத்தின் விற்பனை 7181 கோடி ரூபாயாகும். அதே சமயம் ரேமாண்ட் நிறுவனத்தின் வருவாய் 6000 கோடி ரூபாயாகும். இந்த இரு நிறுவனங்களின் வளர்ச்சி 10 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது கவனிக்க தக்கது.

ரூ.5000 கோடி இலக்கு

ரூ.5000 கோடி இலக்கு

இதோடு மட்டும் அல்லாமல் கடந்த ஆண்டில் மட்டும் காதி நிறுவனம் 1000 கோடிக்கு மேல் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளது என்றும், இது நடப்பு ஆண்டில் 2019 - 2020 5000 கோடி ரூபாயாக இதன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் சுக்சேனா கூறியுள்ளார். இது கடந்த 2004 - 2005ம் ஆண்டில் இருந்ததை விட 55 சதவிகிதம் அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+