தொடர்ந்து அதிகரிக்கும் எண்ணெய் இறக்குமதிகள்..விலை மட்டும் குறைவதில்லை..மக்கள் பொறுமல்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அகமதாபாத் : இந்தியாவில் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த பருவத்தில் (நவம்பர் 2018 - அக்டோபர் 2019) தான் அதிகரித்தது. அதிலும் கடந்த மார்ச் 2019 வரையிலான காலத்தில் 1.44 மில்லியன் டன்னாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது கவனிக்கதக்க விஷயமாகும்.

 

கடந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் தாவர எண்ணெய்களின் மொத்த இறக்குமதி 6.3 மில்லியன் டன்னாக இருந்தது.இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 6 சதவிகிதம் அதிகமாகும். இதுவே முந்தைய ஆண்டு இதே காலத்தில் 5.9 மில்லியன் டன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சோயாபீன், சூரியகாந்தி மற்றும் கடுகு எண்ணெய்கள் உள்ளிட்ட எண்ணெய்களின் இறக்குமதி கடந்த ஆண்டின் இதே காலத்தில் 7.5 சதவிகிதம் அதிகரித்து 2.13 மில்லியன் டன்னாக உள்ளது. இதுவே இதற்கு முந்தைய மாதத்தில் 1.98 மில்லியன் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மொத்த பணவீக்கக் குறியீடு 3.18 சதவிகிதமாக அதிகரிப்பு..!

பால்மோலின் (Palmolein) இறக்குமதி

பால்மோலின் (Palmolein) இறக்குமதி

அதே நேரத்தில் பால்மோலின் எண்ணெய்கள் (கச்சா எண்ணெய் மற்றும் RBD பால்மோலின் உட்பட) இறக்குமதி 2 சதவிகிதம் அதிகரித்து கடந்த ஆண்டு 3.87 மில்லியன் டன்னாக இறக்குமதி செய்யப்பட்டது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தில் 3.79 மில்லியன் டன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி

சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி

மேலும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 7 சதவிகிதம் அதிகரித்து 1.09 மில்லியன் டன்னாக இறக்குமதி செய்யப்பட்டது. அதே நேரத்தில் சோயா எண்ணெய் இறக்குமதி முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 19.5 சதவிகிதம் அதிகரித்து 988,345 டன்னாக அதிகரித்தது.

ரீபைன்ட் ஆயில் இறக்குமதி
 

ரீபைன்ட் ஆயில் இறக்குமதி

இந்த அறிக்கைக்கான காலத்தில், சுத்திகரிக்கப்பட்ட ரீ பைன்ட் எண்ணெய் இறக்குமதி (RBD Palmolein) 960,573 டன்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 770,581 டன்னாக இருந்தது. கடந்த ஆண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி 5,044,494 டன்னாக இருந்தது. இதுவே இதற்கு முந்தைய காலாண்டில் 5,007,554 டன்னாக இருந்தது.

அதிகப்படியான இறக்குமதி காரணமாக விலை குறைவு

அதிகப்படியான இறக்குமதி காரணமாக விலை குறைவு

மொத்த பால்மோலின் இறக்குமதியில் 10 முதல் 12 சதவிகிதம் வரை பால்மோலின் இறக்குமதியில், பால்மோலின் பங்கு, மார்ச் 2019 ல் 22 சதவிகிதமாக அதிகரித்தது. கடந்த ஆண்டு சர்வதேச சந்தைகளில் பல சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் விலை அதிகப்படியான விநியோக காரணமாக 11 - 22 சதவிகிதமாக விலை குறைந்தது. அதேசமயம் கடந்த ஒரு வருட காலத்தில் மட்டும் ரூபாயின் மதிப்பு 7 சதவிகிதம் குறைந்துள்ளது.

98% சுத்திகரிக்கப்படாத எண்ணெய் இறக்குமதி

98% சுத்திகரிக்கப்படாத எண்ணெய் இறக்குமதி

கடந்த் மார்ச் 2019 ஆம் ஆண்டு சுத்திகரிக்கப்படாத எண்ணெய் இறக்குமதி 53,302 டன்னாக செய்யப்பட்டுள்ளது. இதுவே கடந்த மார்ச் 2018ல் 23,366 டன்களாக இறக்குமதி செய்யப்படிருந்தது. ஐந்து மாத காலப்பகுதியில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் மொத்த இறக்குமதி 304,339 டன்களாக இருந்தது. இது முந்தைய ஆண்டில் 153,694 டன்னாக இறக்குமதி செய்யப்படிருந்தது. இது சுமார் 98 சதவிகிதம் அதிகமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

veg oil imports in march touch highest in this year

India's vegetable oil imports hit the highest levels so far for the season (November 2018-October 2019) with imports hitting 1.44 million tonnes for March 2019. The data compiled by the Solvent Extractors' Association of India shows that the overall imports of the vegetable oils for the first five months of the year stood at 6.3 million tonnes against 5.9 million tonnes recorded for the same period last year, showing an increase of about 6 per cent.
Story first published: Monday, April 15, 2019, 22:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X