எச்சரிக்கை வளர்ந்து வரும் தொழினுட்பங்கள் பாதுகாப்புக்காகவே.. அது மக்களை அழிக்க அல்ல..மைசர்க்கிள் ஆப்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியாவில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகள், அதிலும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் சொல்ல வேண்டியதில்லை. அதிலும் தமிழ் நாட்டில் பொள்ளாச்சி சம்பவம் அனைவரின் மனைதையுல் உலுக்கியது. பெண்கள் பொதுவாகவே ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிலும் பெண்களின் பயன்பாடும் மிக அதிகமாகவே உள்ளது. இதன் மூலம் பல நன்மைகள் இருந்தாலும், சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அதுவும் நாமாக ஏற்படுத்திக் கொள்வது தான்.

 

இதையடுத்து ஏர்டெல் மொபைல் சேவை நிறுவனம், தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பான ஃபிக்கியுடன் இணைந்து பெண்களின் பாதுகாப்புக்காக பிரத்யேக செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது பெண்களின் பாதுகாப்புக்காக சிறிதேனும் உதவியாக என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

மை சர்க்கிள் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி பெண்கள் எதிர்பாராத ஆபத்தான தருணங்களின் போது உதவிக்கு அழைக்க உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி ஏர்டெல் மட்டுமல்லாமல் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவன நெட்வொர்க்கிலும் இயங்கக்கூடியது என ஏர்டெல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகாலங்களில் உதவும் ஆப்

அவசரகாலங்களில் உதவும் ஆப்

இந்தச் செயலி மூலம் பெண்கள் ஆபத்தான தருணங்களில் தங்கள் உறவினர்கள் நண்பர்கள் ஐந்து பேருக்கு எஸ்ஓஎஸ் அவசர செய்தியை அனுப்பலாம். இது 13 மொழிகளில் உள்ளது. குறிப்பாக ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, கன்னடம் மராத்தி, உருது, பெங்காலி அஸ்ஸாமி, ஒரியா உள்ளிட்ட 13 மொழிகளில் அனுப்பலாம். அவசர செய்தி அனுப்பப்படும் போது ஆபத்தில் இருப்பவரின் இடம் குறித்த தகவல்களும் சேர்த்து அனுப்பப்படும்.

இருக்கும் இடத்தை அறியலாம்

இருக்கும் இடத்தை அறியலாம்

செய்தியில் அனுப்பப்படும் லிங்க் மூலம் ஆபத்தில் இருப்பவரின் இருப்பிடத்தை ரியல்டைமில் பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆபத்தில் இருப்பவருக்கு விரைவில் உதவிகளை செய்ய முடியும் என்றும் இந்த அமைப்பு கூறியுள்ளது. இது போன்ற பல பாதுகாப்பு செயலிகள் இருந்தும் பிரச்சனைகள் பலவாறு பல இடங்களில் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்
 

விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்

பொருளாதாரமும் தொழில்னுட்பமும் வளரும் இதே நேரத்தில் மக்களிடம் விழிப்புணர்வு இருப்பதில்லை. இதனாலேயே குற்றங்கள் அதிகரித்துள்ளன. இத்தகைய விழிப்புணர்வற்ற நிலையை சமூக விரோதிகள் பலவாறு அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இதன் மூலம் பொருளாதாரம் எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அந்த அளவுக்கு சமூக விரோத செயலகளும் அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றன.

மக்களுக்கு உதவத்தான் டெக்னாலஜி

மக்களுக்கு உதவத்தான் டெக்னாலஜி

வளர்ந்து வரும் பொருளாதாரத்தையும், டெக்னாலஜியையும் மக்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மக்கள் பயனடைய வேண்டுமே தவிர யாரும் இடையூறுகளை சந்திக்க கூடாது. எது எப்படியோ இந்த இரு அமைப்புகளும் சேர்ந்து உருவாக்கியுள்ள இந்த பாதுக்காப்பு செயலியை உபயோகமுள்ளதாக இருந்தால் சரியே என்று கூறிவருகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

பிரச்சனைகளை தவிருங்கள்

பிரச்சனைகளை தவிருங்கள்

பெண்களோ, ஆண்களோ தங்களது செல்போன்களில் என்னென்ன ஆப்கள் உள்ளது என்பதை அவ்வப்போது பார்த்துக்கொள்ள வேண்டும். சந்தேகப்படும்படியாக, தேவையற்ற ஆப் என்று எதையாவது பார்த்தால் உடனே அன் இன்ஸ்ட்டால் செய்யுங்கள். முடிந்தால் பேக்டரி ரீசெட் செய்துவிடலாம். யாரை நம்பியும் செல்போனை கொடுத்து விடாதீர்கள். அல்லது செல்போன்களில் எந்த அந்தரங்கத்தையும் பாதுகாக்காதீர்கள். சிலர் வங்கிக் கணக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அதில் வைத்திருப்பர். இதன் மூலம் அவர்களது பணம் பறிபோகும் வாய்ப்பும் உள்ளது.

நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்

நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்

இப்படியாக பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு செயலியை அவர்களின் பாதுகாப்புக்காக பயன்படுத்த வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். ஒரு ஊசியை வைத்து வைத்து ஆபரேஷன் செய்யலாம், ஒரு உயிரையும் எடுக்க முடியும். அதுபோலத்தான் நவீன கண்டுபிடிப்புகள் புதிதாக வரும்போது அதன் இரு பக்க விளைவுகளையும் பார்க்க வேண்டும். இதன் மூலம் தங்களை யாராவது உளவு பார்க்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள இந்த ஆப் அவர்களுக்கு இது உதவும். இதன் மூலம் தங்களுக்கு வரும் ஆபத்துக்களை பெண்கள் முன்னரே கண்டுபிடிக்க முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: app safety
English summary

Airtel and FICCI Ladies Organisation Launch Women’s Safety App

Bharti Airtel and the FICCI Ladies Organisation launched a carrier agnostic safety app – My Circle which has been is designed to empower women in the event of any distress or panic situation. My Circle app enables women to send SOS alerts to any five of their family or friends in 13 languages including English, Hindi, Tamil, Telugu, Malayalam, Kannada, Marathi, Punjabi, Bangla, Urdu, Assamese, Oriya, and Gujarati.
Story first published: Tuesday, April 16, 2019, 8:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X