பயிற்சி விமானிகளிடம் 88 லட்சம் வாங்கிய Jet Airways, அதையாவது திருப்பி தருமா,ஏக்கத்தில் மாணவர்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் ஜெட் ஏர்வேல் நிறுவனத்தின் பிரச்னைகள் வொவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. முதலில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கி இருந்த 8,500 கோடி ரூபாய் கடன் செலுத்தவில்லை எனத் தொடங்கிய பிரச்னை படிப்படியாக இன்று வரை வளர்ந்து கொண்டிருக்கிறது.

 

அதன் பின் சம்பளப் பிரச்னை, விமான எரிபொருளுக்கு கடன் பாக்கி இருப்பதால் எரிபொருள் நிரப்பப்படாது என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முகத்தைக் காட்டியது.

அதன் பின் ஹெச் எஸ் பி சி (HSBC) வங்கியிடம் வாங்கிய 140 மில்லியன் டாலரை திருப்பிச் செலுத்தாதது, விமானங்களுக்கான குத்தகைத் தொகை திருப்பிச் செலுத்தாதது எனப் பட்டியல் நீள்கிறது.

பயணிகளுக்கு பாக்கி

பயணிகளுக்கு பாக்கி

விமான பயணிகளுக்கான பேமெண்ட் பாக்கி. ஒவ்வொரு நாளும் ஏகப்பட்ட விமானங்களை ரத்து செய்த ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை ரத்து செய்ததற்காக விமானப் பயணிகள் செலுத்திய அவர்களின் பயணக் கட்டணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டுமே அந்த பாக்கி தான். இப்படி ரத்து செய்யப்பட்ட விமானப் பயணங்களின் பயணிகளுக்கு மட்டும் சுமார் 3,500 கோடி ரூபாய் திருப்பிக் கொடுக்க வேண்டுமாம். இவர்களுக்கும் இன்னும் பணத்தைக் கொடுக்கவில்லை.

சம்பள பாக்கி

சம்பள பாக்கி

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் நேரடியாக பணியாளர்களாக இருப்பவர்களுக்கு மட்டும் தான் சம்பளம் கொடுக்கவில்லை என்கிற செய்தி பரவி வருகிறது. ஆனால் உண்மையில் ஜெட் ஏர்வேஸ் பல்வேறு ஒப்பந்த ஊழியர்களுக்கும், ஒப்பந்த நிறுவனங்களுக்கும் கூட சம்பள பாக்கிகளைக் கொடுக்கவில்லை. ஜெட் ஏர்வேஸில் நேரடியாக பணியில் இருப்பவர்களுக்கு லட்சங்களில் சம்பளம் என்றால் இந்த ஒப்பந்த பணியாளர்களுக்கு வேலை கொடுக்கும் நிறுவனங்கள் லாபம் பார்த்துவிட்டு கொடுப்பது தான் சம்பளம்.

உதாரணம்
 

உதாரணம்

Target Hospitality என்கிற நிறுவனம் தான் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பல்வேறு கீழ் நிலைப் பணிகளைச் செய்வதற்கு 1,200 ஊழியர்களை சப்ளை செய்கிறார்கள். இவர்கள் இந்தியாவின் பல்வேறு முக்கியமான விமான நிலையங்களில் ஜெட் ஏர்வேஸுக்காக வேலை பார்க்கிறார்கள். ஜெட் ஏர்வேஸ் மாதம் இத்தனை கோடி எனக் கொடுத்துவிடும். அதில் நிர்வாகச் செலவு, சம்பளம் போக மீதம் தான் நிறுவனத்துக்கு லாபம். இவர்களுக்கு கூட இன்னும் சம்பளம் கொடுக்கவில்லை.

ஜெட் ஏர்வேஸ் வேண்டாம்

ஜெட் ஏர்வேஸ் வேண்டாம்

எங்கள் Target Hospitality நிறுவனத்தில் வேலை பார்க்கும் நபர்களில் 90%-க்கு மேல் சேரிகளில் வாழும் ஏழை மக்கள். இவர்களின் அதிகபட்ச சம்பளமே 15,000 ரூபாய் தான். இவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்றால் கூட ஜெட் ஏர்வேஸ்ல் எங்களுக்கு முதலில் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்க வேண்டும். ஆனால் கடந்த சில மாதங்களாக பணத்தைக் கொடுக்கவில்லை. எங்கள் ஊழியர்களில் பலரும் தற்போது ஜெட் ஏர்வேஸுக்கு வேலைக்கு போக மறுக்கிறார்கள். இது தான் சூழ்நிலை என்கிறார் Target Hospitality நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் கெய்க்வாட்.

விமான ஓட்டுநர் உரிமம்

விமான ஓட்டுநர் உரிமம்

கமர்ஷியல் விமானிகள் உரிமத்தைப் பெற்றால் தான் ஒருவர் முழு விமானியாக முடியும். அதற்கு ஒவ்வொரு விமானப் பயணச் சேவை நிறுவனங்களும் ஒரு தனி திட்டத்தை வைத்திருப்பார்கள். அந்த திட்டத்துக்கு முதலில் ஒரு பெரிய தொகையைக் கொடுத்து விமானியாக பயிற்சியில் ஈடுபட வேண்டும். இப்படி 1500 மணி நேரம் பறந்த பின் தான் ஒருவர் இந்தியாவில் விமானியாக முடியும். அதாவது முறையாக கமர்ஷியல் விமானிகள் உரிமத்தைப் பெற முடியும்.

ஜெட் ஏர்வேஸ் திட்டம்

ஜெட் ஏர்வேஸ் திட்டம்

அப்படி கமர்ஷியல் விமானிகள் உரிமத்தை வழங்க ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடந்த ஜூன் 2017-ல் "ஜெட் ஏர்வேஸ் கேடட் ப்ரோகிராம் (Jet airways Caded programme)" தொடங்கியது. அதில் ஒரு விமானிக்கு சுமார் 88 லட்சம் ரூபாய் என விலை நிர்ணயித்தார்கள். இத்தனை பெரிய தொகையைக் கொடுத்து பல மாணவர்கள் சேர்ந்தார்கள். இதில் பல்வேறு விமானிகள் தங்களின் மொத்த குடும்ப சம்பாத்தியம், சேமிப்பு எல்லாவற்றையும் கொடுத்து சேர்ந்திருக்கிறார்கள். ஒரு படி மேலே போய் கடன் வாங்கி சேர்ந்தவர்களும் உண்டு.

1500 மணி நேரம்

1500 மணி நேரம்

இப்போது விமானங்களை ஓட்டவும் முடியாது, அவர்களுக்கான 88 லட்சம் ரூபாயை திரும்பக் கொடுக்கவும் முடியாத நிலையில் இருக்கிறது ஜெட் ஏர்வேஸ். இதை எல்லாம் விடக் கொடுமையான விஷயம் கடந்த 2 ஆண்டுகளில் கமர்ஷியல் விமானிகள் உரிமத்துக்காக 88 லட்சம் ரூபாய் கொடுத்து சேர்ந்தவர்களின் பயிற்சி ஏறக் குறைய 800 - 1000 மணி நேரங்கள் மட்டுமே முடிந்திருக்கிறது. இன்னும் 500 - 700 மணி நேரங்கள் விமானம் ஓட்டிய அனுபவம் இருந்தால் தான் கமர்ஷியல் விமானிகள் உரிமத்தைப் பெற முடியும். இந்த விமானிகள் உரிமம் இருந்தால் தான் வேறு ஏதாவது நிறுவனத்தில் வேலை பற்றிப் பேசவே முடியும்.

தவிப்பு

தவிப்பு

கமர்ஷியல் விமானிகள் உரிமத்தைப் போல குறிப்பிட்ட ரக விமானங்களை ஓட்டுவதில் நிபுணத்துவம் பெறுவதற்கும் பல்வேறு விமானிகள் 35 லட்சம் ரூபாயைக் கட்டணமாக ஜெட் ஏர்வேஸிடம் செலுத்தி இருக்கிறார்கள். இப்போது இவர்களுக்கும் முறையாக விமானங்களில் பறக்க முடியவில்லை, பணத்தையும் திரும்பக் கேட்க முடியவில்லை என வருத்தத்தில் இருக்கிறார்கள். இந்த இக்கட்டில் 88 லட்சம் கட்டிய புதிய விமானிகளும் சரி, 35 லட்சம் செலுத்திய அனுபவஸ்தர்களும் சரி, நிறுவனத்தை விட்டுப் போகவும் முடியாமல் மேற் கொண்டு பறக்கவும் முடியாமல், நிம்மதியாக தங்களின் குடும்ப செலவுகளைக் கூட மேற்கொள்ள முடியாமல் EMI, கடன், செலவுகள் பிரச்னையில் தவித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

ஆனால் சில விமானிகள் தங்களுக்கான சம்பளத்துக்கு பதிலாக தாங்கள் செலுத்திய 88 லட்சம் ரூபாய் உடன் பறந்த அனுபவச் சான்றாவது கிடைக்குமா..? என ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஜெட் ஏர்வேஸ் இருக்கும் சூழலில் இது நடக்கவே நடக்காது என பல மூத்த விமானிகள் வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

jet airways collected 88 lakh rupees from training pilots for commercial pilot licence

jet airways collected 88 lakh rupees from training pilots for commercial pilot licence
Story first published: Tuesday, April 16, 2019, 15:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X