துவண்டுபோன நிறுவனங்களில் துளிர்..அதிகரித்திருக்கும் வேலை வாய்ப்புகள்.. ஐ.டி நிறுவனங்கள் அறிக்கை

டெல்லி : இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன் ஐ.டி துறை ஊழியர்களுக்கு வேலை இல்லை என வெளியே அனுப்பிய நிறுவனங்கள் தற்போது மீண்டும் பணியில் அமர்த்த தொடங்கி விட்டன. இதற்கு சாட்சியமே தற்போது வெளிவந்துள்ள அறிக்கை. கடந்த 2018 - 2019 ஆம் நிதியாண்டில் ஐ.டி துறையில் சுமார் 1,04,820 வேலை வாய்ப்பினை உருவாக்கியுள்ளன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த வேலைவாய்ப்பு அதிகரிப்பு கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவு அதிகமாகும்.

ஐ.டி துறையில் முதல் இரண்டு நிறுவனங்களான டி.சி.எஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்கள் கடந்த 2018 - 2019 ஆம் ஆண்டில் மட்டும் 53,303 வேலைகளை உருவாக்கியுள்ளன. இது குறித்து டி.சி.எஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2019ம் நிதியாண்டில் வெளியிட்டுள்ள வருடாந்திர கணக்கில் புதிதாக 29,287 ஊழியர்களை சேர்த்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது. அதுவே மார்ச்31,2019வுடன் முடிவடைந்த காலத்தில் அந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 4,24,285 பேர் எனவும் வெளியிட்டிருந்தது.

இதுவே இன்ஃபோசிஸ் நிறுவனம் கடந்த 2018 - 2019 ஆம் நிதியாண்டில் புதிதாக 24,016 ஊழியர்களை சேர்த்துள்ளதாகவும், இதுவே அந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2,28,123 ஆகவும் உள்ளது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அதிகரித்துள்ள வேலை வாய்ப்புகள்

அதிகரித்துள்ள வேலை வாய்ப்புகள்

ஐ.டி துறையில் இத்தகைய வேலை வாய்ப்புகள் கடந்த ஆண்டில் மட்டுமே மிக அதிகரித்துள்ளன. இதுவே கடந்த 2018 ஆம் நிதியாண்டில் 30.181 வேலை வாய்ப்புகளும், இதுவே 2017 ஆம் ஆண்டு 82,919 வேலை வாய்ப்புகளும் மட்டுமே இருந்தன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் கடந்த 2018ம் நிதியாண்டில் டி.சி.எஸ் 7770 ஊழியர்களையும், இன்ஃபோசிஸ் 3740 ஊழியர்களை மட்டுமே பணியமர்த்தியது.

HCL, WIPRO காலாண்டு முடிவுகள் இன்னும் வரவில்லை

HCL, WIPRO காலாண்டு முடிவுகள் இன்னும் வரவில்லை

மேலும் ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ் மற்றும் விப்ரோ நிறுவனத்தின் 4 வது காலாண்டு அறிக்கைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும் ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ், கடந்த 2018ம் நிதியாண்டில் மூன்றாவது காலாண்டில் மட்டும் 12,328 ஊழியர்களை புதிதாக பணிகளுக்கு சேர்த்தாகவும், இதுவே விப்ரோ நிறுவனத்தில் மூன்றாவது காலாண்டில் மட்டும் ஊதியத்துடன் 8559 ஊழியர்கள் வேலைக்கு சேர்க்கப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் விப்ரோவின் வருடாந்திர அறிக்கை ஏப்ரல் 16 அன்று வெளியிடப்படலாம் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

வேலைவாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கலாம்

வேலைவாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கலாம்

2019- ஆம் நிதியாண்டில் மட்டும் 1,04,820 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவும் விப்ரோ மற்றும் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் வருட அறிக்கைகள் வெளியிட்ட பின்னர் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம். 2019ம் நிதியாண்டில் பணியமர்த்துதல், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2.90 சதவிகிதம் அதிகமாகும், இதுவே 2018 ஆம் நிதியாண்டில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 1.59 சதவிகிதம் அதிகமாகும்.

ஊழியர்களின் சராசரி விகிதம்

ஊழியர்களின் சராசரி விகிதம்

நிறுவனங்களின் வருடாந்திர அறிக்கையிலிருந்து தொகுக்கப்பட்ட தரவுப்படி, மொத்த பணியாளர்களின் நிகர கூடுதல் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 12 மாதங்களில் ஊழியர்களின் சராசரி விகிதம் இன்ஃபோசிஸ் நிறுவனத்துடன் ஒப்பிடும்போது டி.சி.எஸ் நிறுவனம் 11.3 சதவிகிதம் குறைந்து 20.4 சதவிகிதமாக இருந்தது. இதுவே இன்ஃபோசிஸ் ஊழியர்களின் சராசரி ஊதிய விகிதம் 8.18 சதவிகிதம் எனவும் வெளியிடப்பட்டுள்ளன.

வேலைக்கு பெண்களின் விகிதம் அதிகம்

வேலைக்கு பெண்களின் விகிதம் அதிகம்

கடந்த 11 நிதியாண்டுகளாக இன்ஃபோசிஸ் நிறுவனம் சராசரியாக வருடத்திற்கு 12,320 ஊழியர்களை வேலைக்கு சேர்த்து வருகிறது. இதுவே டி.சி.எஸ் வருடத்திற்கு சராசரியாக 28,052 ஊழியர்களையும் சேர்த்து வருகிறது. இதுவே இன்ஃபோசிஸ் நிறுவனம் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகர லாபத்தையும் அதிகரித்துள்ளது. இதன் ஊழியர்களின் எண்ணிக்கையும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போதும் 11.77 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும் டி.சி.எஸ் ஊழியர்களின் எண்ணிக்கை 23.8 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. இது கடந்த 2010, 2011- வுடன் ஒப்பிடும் போது ஆகும். அதிலும் டி.சி.எஸ் நிறுவனத்தில் பெண்களின் விகிதம் 35.9 சதவிகிதம் அதிகமாகும்.

ஒருங்கினைந்த  ஊதிய முறை

ஒருங்கினைந்த ஊதிய முறை

மேலும் முதல் 6 இடத்தில் உள்ள ஐ.டி நிறுவனங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த ஊதிய முறையை பின்பற்றுகின்றன. இதில் டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல், விப்ரோ, டெக் மஹிந்திரா மற்றும் காக்னிசண்ட் நிறுவனங்களும் அடங்கும். நாட்டின் வளர்ச்சி அடைந்து வரும் தற்போதைய சூழலில் வரும் காலங்களில் வேலைவாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கும் என்றும் தெரிகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+