2015-ம் ஆண்டில் உலகையே உலுக்கும் அளவுக்கு ஒரு பெரிய ஊழலைக் கண்டு பிடித்தார்கள். அதுவும் ஏனோ தானொ என்கிற உப்புமா கம்பெனி செய்த ஊழல் அல்ல... நல்ல பெயர் எடுத்துள்ள நாணயமான நிறுவனம். அது தான் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டீசல் எமிஷன் ஊழல்.
ஒரு கார் வெளியிடும் மாசு மற்றும் புகையின் அளவு, அரசு நிர்ணயிக்குன் அளவுக்குள் தான் இருக்க வேண்டும். அப்போது கார்களை விற்பனைக்கு கொண்டு போக முடியும். அந்த அளவுகளைத் தாண்டி இருந்தால் விற்க அனுமதிக்கமாட்டார்கள். ஃபோக்ஸ்ஏகன் சிம்பிளாக அந்த அளவீட்டைக் காட்டும் கருவியை மாற்றிவிட்டார்கள்.
இதனால் அரசு நிர்ணயித்திருக்கும் அளவை விட குறைவாகவே ஃபோக்ஸ்வேகன் கார்கள் புகை மற்றும் நச்சுக்களை வெளியிடுகிறது எனத் அரசும் ஒப்புதல் அளித்துவிட்டது. அப்படியே ஒரு மாதிரி விஷயம் அரசுக்கு தெரிய வந்து வழக்கு பதிந்து விசாரிக்கத் தொடங்கினார்கள்.
திரும்ப அழை
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தயாரித்த பல கோடி டீசல் கார்களில், எமிஷன் டெஸ்ட்டை ஏமாற்றும் கருவியை பொருத்தியதாக 2015-ம் ஆண்டு பகிரங்கமாக ஒப்புக்கொண்டது. அது நாள் வரை பொய் சொல்லி விற்ற அனைத்து ரக கார்களையும் இந்நிறுவனம் திரும்ப அழைத்து சரி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது.
அபராதம்
அதோடு அமெரிக்காவில் பல மில்லியன் டாலர் அபராதம், நஷ்ட ஈடு என வரிசையாக தண்டம் அழ வேண்டி இருந்தது. இதனால் இந்தியப் பங்குச் சந்தைகள் வரை நேரடியாக பாதித்தது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு அதிக சப்ளை செய்து கொண்டிருந்த பல நிறுவனப் பங்குகளின் விலை தாறுமாறாக இறங்கத் தொடங்கியது. அப்படி அதிகம் பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்று மதர்சன் சுமி.
இயக்குநர் மீது வழக்கு
சரி அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்த மோசடி வழக்கு இன்னும் ஜெர்மனி நீதிமன்றங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த வழக்கின் ஒரு பகுதியாக, ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் முன்னாள் முதன்மைச் செயல் அதிகாரி வின்டர் கோர்ன் (Martin Winterkorn) மீது மோசடி வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். என்ன குற்றம் எனக் கேட்டால் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் என்கிற முறையில் மார்ட்டின் வின்டர்கோர்ன் நடந்த மோசடிச் சம்பவத்தை மறைத்த குற்றத்துக்காக இந்த மோசடி வழக்கைப் பதிவு செய்திருக்கிறார்களாம்.
10 ஆண்டுகள் வரை சிறை
டீசல் இன்ஜின்களில் பொருத்தப்பட்ட கருவியின் மென்பொருளை அப்டேட் செய்ய, 'சுமார் 23 மில்லியன் யூரோ தொகையை அளிப்பதற்கு வின்டர்கோர்ன் ஒப்புக் கொண்டாராம். இந்த ஆதாரத்தின் அடிப்படையில் தான் மோசடி வழக்கைப் பதிவு செய்திருக்கிறார்களாம். இந்த குற்றம் மட்டும் ஜெமானிய நீதிமன்றங்களில் நிரூபிக்கப்பட்டால், 6 மாதம் முதல் 10 ஆண்டுகள் வரை ஜெயில் வாழ்கை உறுதியாம்.


Click it and Unblock the Notifications