அதிகரிக்கும் வேலையின்மை..வாடி வதங்கும் பட்டதாரிகள்..வேலைக்கு மாற்றாக தொழிற்துறையை தேர்ந்தெடுங்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரு : இரண்டு ஆண்டுகளில் மட்டும் 5 மில்லியன் ஆண்கள் தங்களது வேலையினை இழந்துள்ளனர் என்று பெங்களுரைச் சேர்ந்த அசிம் பிரேம்ஜி பல்கழைக் கழகம் அறிக்கையில் வெளியிட்டுள்ளது. நவம்பர் 2016 ஆரம்பத்தில் இந்த வேலை இழப்பு சாதாரணமாக இருந்தாலும், பின்னர், சுமூகமான உறவின்மை, இதன் மூலம் பல பிரச்சனைகள் ஆர்பாட்டங்கள் இதுபோன்ற பல காரணங்களால் வேலையை வீட்டு வந்துள்ளனர் என்று இந்த பல்கழைக்கலகம் வெயிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

 

உயர் கல்வி மற்றும் குறைந்த கல்வியுற்ற தொழிலாளர்கள் மத்தியிலும் வேலையின்மை அதிகரித்து வருகிறது. உயர் கல்வி உடையோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்த நிலையில் குறைந்த கல்வி உடையோர் வேலை இழக்கும் அபாயம் நிலவி வருகிறது. அதிலும் கடந்த 2016ஆண்டுமுதல் குறைந்த கல்வியுற்றவர்களுக்கான வேலையிழப்பு அதிகரித்து வருகிறது.

இந்த வேலையின்மை என்பது 2011-க்கு மேல் நிலையான ஒரு விஷயமாகி விட்டது. கடந்த 2018ல் மட்டும் மொத்த வேலயின்மை 6 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இது கடந்த 2010 - 2011-ல் இருந்ததைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். இதற்கு காரணம் அதிகம் படுத்தோரில் அதிகம் வேலையின்மை, குறைந்த கல்வி, முறைசாரா கல்வியினால் வேலையிழக்கும் தொழிலாளர்கள் இது போன்ற பல காரணங்களினால் அதிகபட்சம் வேலையிழந்துள்ளனர்.

நீரவ் மோடி வழக்கை விசாரிக்கும் ED அதிகாரி பணிமாற்றல்..! பணிமாற்றல் செய்த IPS அதிகாரிக்கு தண்டனை..!

பெண்கள் மத்தியிலும் வேலையில்லை

பெண்கள் மத்தியிலும் வேலையில்லை

நகர்புறங்களிலும் அதுவும் பெண்கள் மத்தியிலும் இந்த வேலையின்மை காணப்படுகிறது. நகர் புறங்களில் உள்ள பெண்களில் 10% பட்டதாரிகள் வேலை செய்யும் வயதில் உள்ளனர். ஆனால் அதிலும் 34 சதவிகிதம் மக்கள் வேலையில்லாதவர்களாக உள்ளனர். இதனால் 20 - 24 வயதுள்ளவர்களே அதிகம் வேலை இல்லாமல் இருக்கின்றனர்.

நகரத்தில்  60% பேருக்கு வேலையில்லை

நகரத்தில் 60% பேருக்கு வேலையில்லை

ஆண்களும் இதே நகரங்களில் இதே வயதுடையவர்களில் 13.5சதவிகிதம் பேர் வேலை இல்லாதவர்களாக இருக்கின்றனர். ஆனால் மொத்தம் 60 சதவிகிதம் வேலையில்லாதவர்களாக இருக்கின்றனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் குறைந்த சம்பளத்தில் அதிக பெண்கள் வேலை சூழ்னிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

பூதகரமான பிரச்சனை
 

பூதகரமான பிரச்சனை

வேலையின்மை என்பது இன்று மிகப்பெரிய அளவில் பூதாகரமான பிரச்சனையாக உருவாகி வருகிறது. அதேசமயம் தொழிலில் மந்தம், வறட்சிகாராணமாக விவசாயத்தின் வீழ்ச்சி ஆகியவை வேலையின்மை பிரச்சனையை மேலும் கடுமையாக்கியுள்ளன. இது நமது பொருளாதாரப் பாதை இன்னும் சீரழிக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

உத்திரவாதமான வேலை இல்லை

உத்திரவாதமான வேலை இல்லை

கிடைக்கின்ற வேலையும் குறைந்த பட்ச ஊதியத்தை உத்தரவாதப்படுத்துவதாக இல்லை. நமது தேசத்தில் சுமார் 42 கோடிபேர் தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களில் 85% பேர் அதாவது சுமார் 36 கோடிபேர் முறைசாரா தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு பணிப்பாதுகாப்போ அல்லது சமூக பாதுகாப்போ இல்லை.

தொழில் துறையில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்

தொழில் துறையில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்

தொழில் மற்றும் விவசாயத்தில் அரசாங்கம் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்தால்தான் ஓரளவு பிரச்சனை தீரும். எனினும் அரசாங்கம் இதற்கு தயாராக இல்லை. அன்னிய நிறுவனங்களுக்கு கொடுக்கும் முக்கிய துவத்தை இந்திய அரசு இந்தியாவில் உள்ள சிறு குறு தொழிலாளர்களுக்கு கொடுத்தால் தொழில் வளர்சீயும் மேண்மையடையும். இதனால் பணப்புழக்கமும் அதிகரிக்கும்.

இளைஞர்கள் தொழிலை தேர்தெடுக்க வேண்டும்

இளைஞர்கள் தொழிலை தேர்தெடுக்க வேண்டும்

வேலையில்லாத இளைஞர்களும் ஏதாவது ஒரு தொழிற்துறையை தேர்தெடுத்து தொழில் செய்யலாம். அப்படி செய்தால் மட்டுமே இது போன்ற இக்கட்டான பிரச்சனையை சமாளிக்க முடியும். இவ்வாறு இளைஞர்கள் இணைந்தால் மட்டுமே இதற்கு ஓரளவிற்காவது தீர்வு கிடைக்கும்.வேலையின்மையை குறைத்து அவரவர் இன்னும் பலருக்கு வேலை வாய்ப்பினை கொடுக்க முடியும். இதன் மூலம் பொருளாதாரமும் அதிகரிக்கும். பணவீக்கமும் குறையும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: jobs வேலை
English summary

5 Million mens lost their jobs since 2016

Among urban women, graduates are 10% of the working age population but 34% of the unemployed. The age group 20-24 years is over-represented among the unemployed. Among urban men, this age group accounts for 13.5% of the working age population but 60% of the unemployed.
Story first published: Wednesday, April 17, 2019, 15:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X