பெங்களுரு : தகவல் தொழில் நுட்ப துறையில் சமீபத்திய சர்ச்சைகளில் சிக்கியிருந்த மைண்ட்ட்ரீ நிறுவனத்துக்கு அறிமுகமே தேவையில்லை. ஏனெனில், இந்நிறுவனத்தின் 20 ஆண்டுகாலப் பயணம் என்பது ஒரு அழகான குடும்பத்தின் கதை போன்றது. தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியின் உச்சகட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த சுமார் 20 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில், விப்ரோ, லுசென்ட் மற்றும் கேம்ப்ரிட்ஜ் டெக்னாலஜி உள்ளிட்ட முன்னணி ஐடி நிறுவனங்களில் அனுபவம் பெற்ற 10 சிறப்பான தொழில் வல்லுநர்களால் உருவாக்கப்பட்டது தான் மைண்ட்ட்ரீ நிறுவனம். அதுவும் வெறும் 10 கோடி ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் இன்றைய மதிப்பு என்ன தெரியுமா?

இதுபோன்ற பல்வேறு குழப்பங்கள் நிலவிவந்தாலும் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அதன் நிகர லாபம் 3.77 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 8.89 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும் ஒருங்கினைந்த லாபாமாக 198.40 கோடி ரூபாயாகவும், இதுவே இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 182.20 கோடி ரூபாயாகவும் இருந்தது எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அதோடு வருமானம் காந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 25.64 சதவிகிதம் அதிகரித்து 1839.40 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே டாலரில் 4.2 சதவிகிதம் அதிகரித்து 262 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதுவே முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது 15.80 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

தணித்துவமான வேலைப் பண்பாடு
மைண்ட்ட்ரீ நிறுவனம் கடந்த காலாண்டாகட்டும், கடந்த நிதியாண்டாகட்டும் அதன் செயல்திறன் ஒரு பில்லியன் டாலர்களை கடந்து போகும் என்று எதிர்பார்த்திருந்தது. மேலும் கடந்த இரண்டு சகாப்தங்களாக நிபுணத்துவம் வாய்ந்த மூலோபாயம், தணித்துவமான வேலைப் பண்பாடின் மூலம் வழி நடத்தப்படுகிறது. இதன் மூலம் உலக மக்களை ஈர்க்கவும், இதன் மூலம் வெற்றியை பெறவும் இது உதவுகிறது.
துறையை விட வேகமாக இருக்கும் ஊழியர்களின் திறன்
தகவல் தொழிற்துறையை விட வேகமாக வளர்ந்து வரும் நமது திறன், நமது முதலீடுகளிலும் எதிரொலிக்கிறது. அதேசமயம் தொழில் நுட்பங்களை தொழிற்துறைக்கு ஏற்ற வகையில் இனைத்திருக்கிறோம். அதோடு எங்களின் பங்குதாரர்கள் அனைவருக்கும் அதிகப்படியான வருமானத்தை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதோடு இந்த லாபத்தை கொண்டாட பங்குதாரர்களுக்கு 20 ரூபாய் டிவிடென்ட் எனவும் அறிவித்துள்ளது. இது வரும் ஆண்டுகளில் பில்லியன் கணக்கில் வருமானத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதிகரித்துள்ளது.இதன் மூலம் தகவல் தொழில் னுட்ப துறையில் தனித்துவம் மிக்க நிறுவனமாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications