டெல்லி: ஐ.டி துறையில் முன்னனி நிறுவனமான விப்ரோ நிறுவனம் கடந்த செவ்வாய் கிழமையன்று தனது நான் காவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் மார்ச்சுடன் முடிவடைந்த 4-வது காலாண்டில் இதன் நிகர லாபம் 38.4 சதவிகிதம் அதிகரித்து, 2493.9கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்றும், மேலும் 10,500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப வாங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் இதன் வளர்ச்சி 8.9 சதவிகிதம் அதிகரித்து 15,006.3 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் 13,768.6 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் பங்குதாரர்களின் இலாபம் மட்டும் 1803 கோடி ரூபாயாக தரப்பட்டது.
விப்ரோ நிறுவனத்தின் ஊழியர்களின் கம்ப்யூட்டரிலேயே ஊடுருவல் நடந்துள்ளது. ஹாக்கர்ஸ் எனப்படும் இணையதள திருடர்கள், ஊழியர்கள் சிலரின் தகவல் தொகுப்பில் ஊடுருவி தகவல்கள் திருடப்பட்டதாகவும் இதனால் நிறுவனத்தின் பல தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என்ற நிலையிலும் விசாரித்து வருகிறதாம். இதனால் பங்கு சந்தையில் இதன் எதிரொலியாக விலை சரிந்தே காணப்பட்டது.
பங்குகளை திரும்ப பெறும் உத்தேசம்
இந்த விப்ரோ நிறுவனம் 10,500 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை திரும்ப வாங்க திட்டமிட்டுள்ளது. 325 ரூபாய் மதிப்புள்ள , 32.3 கோடி பங்கினை வாங்க திட்டமிட்டுள்ளதாம் இந்த நிறுவனம். மேலும் இந்த காலகட்டத்தில் வருமானத்தை அதிகரிக்க மார்ஜின் தொகையை 1.8 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் கடந்த 2017-ம் ஆண்டு இந்நிறுவனம் ரூ. 11 ஆயிரம் கோடிக்கு பங்குகளை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
திருட்டுப் போன தகவல்கள்
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னணியில் விளங்கும் விப்ரோ நிறுவனத்தின் ஊழியர்களின் கம்ப்யூட்டரிலேயே ஊடுருவல் நடந்துள்ளது. ஹாக்கர்ஸ் எனப்படும் இணையதள திருடர்கள், ஊழியர்கள் சிலரின் தகவல் தொகுப்பில் ஊடுருவி தகவல்களை எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
ஊழியர்களின் கணக்குகளின் மூலம் ஊடுருவல்
தங்கள் நிறுவன ஊழியர்கள் சிலரின் கணக்குகளில் இத்தகைய ஊடுருவல் நடந்துள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடுகளை துரிதகதியில் மேற்கொண்டதாகவும், இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பங்கு சந்தையில் 3% சதவிகிதம் சரிவு
விப்ரோ நிறுவனத்தின்ஊழியர்களின் கம்ப்யூட்டரில் நடந்த ஊடுருவல் குறித்த தகவல் வெளியானது. இதனால் இந்நிறுவன பங்குகள் 3 சதவீதம் வரை நேற்று (16ஏப்ரல் 2019) காலையில் சரிந்தன. இது குறித்து சைபர் செக்யூரிடி நிறுவனமான கிரெப்ஸ்ஆன் செக்யூரிடி யின் இணையபக்கத்தில் விப்ரோ நிறுவனத் தின் ஊழியர்கள் இணையதளம் ஊடுருவப்பட்டுள்ளது. அதேபோல விப்ரோ நிறுவனம் நிர்வகிக்கும் வாடிக்கையாளர்களின் சாஃப்ட் வேர் மூலம் அந்நிறுவனத்திலும் ஊடு ருவல் நடைபெற்றிருக்கலாம் என கருதப் படுகிறது. இதையடுத்து இந்த பிரச்சினையை துரித கதியில் அணுகி தீர்வு கண்டு வருவதாக விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications