என்ன செய்ய போகிறது ஜெட் ஏர்வேஸ்.. பங்கு சந்தையில் கடுமையான வீழ்ச்சி..பரிதவிப்பில் நிறுவனம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : கடனில் தத்தளித்து வந்த ஜெட் ஏர்வேஸ்ஸூக்கு யாரும் கடன் கொடுக்க முன்வராததால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவையை கடந்த ஏப்ரல் 17-ம் தேதி முழுமையாக நிறுத்தி விட்டது. இந்த நிலையில் ஜெட் ஏற்வேஸ் நிறுவனத்தி பங்குகள் விலை இந்திய பங்கு சந்தையில் 26 சதவிகிதம் விலை குறைந்து 177 ரூபாயாக குறைந்துள்ளது. சுமார் 63 ரூபாய் ஒரே நாளில் குறைந்துள்ளது.

மேலும் இந்த கடனுக்காக முழுமையான தீர்வு இதுவரை காணப்படவில்லை. இதன் காரணமாக பங்கு சந்தையில் விலை இன்னும் குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வந்தாலும் பங்கு சந்தையில் பெரிதாக மாற்றம் இல்லை. ஆனால் தற்போது முழுக்க முழுக்க தனது சேவை குறைத்துள்ளது வாடிக்கையாளர் மத்தியில் நம்பிக்கை இழந்துள்ளது ஜெட் ஏர்வேஸ்.

என்ன செய்ய போகிறது ஜெட் ஏர்வேஸ்.. பங்கு சந்தையில் கடுமையான வீழ்ச்சி..பரிதவிப்பில் நிறுவனம்

இந்த நிலையில் பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமலும், வாடகை விமானங்களுக்கு குத்தகை பாக்கி தர முடியாமலும், இந்திய ஆயில் நிறுவனத்திற்கு எரிபொருளுக்கான கட்டணமும் தராமல் போகவே இதற்கெல்லாம் தீர்வாக வங்கிகளிடம் கடன் கேட்டிருந்தது. இந்த நிலையில் கடன் கொடுக்கிறோம் என்று கூறியே பல வாரங்களாக நேரத்தை மட்டுமே கடத்தி வந்த நிலையில், தற்போது அதை நம்பிக்கையின்மை காரணமாக கொடுக்க முடியாது என்றும் வங்கிகள் அறிவித்துள்ளன. இதன் காரணமாக நிறுவனத்தை இதற்கு மேலும் நடத்த இயலாது என ஜெட் ஏர்வேஸ் முடிவெடுத்துள்ளது.

Agusta Westland தரகர் சுஷென் மோகன் குப்தா இந்தியாவில் இருந்து ஓடிப் போக வாய்ப்பு..! Agusta Westland தரகர் சுஷென் மோகன் குப்தா இந்தியாவில் இருந்து ஓடிப் போக வாய்ப்பு..!

யாரும் முன் வரவில்லை?

இதன் முதல் கட்ட முடிவாகவே விமான சேவைகள் முற்றிலுமாக முழுவதும் தடை செய்யப்பட்டன. மேலும் நிறுவனத்தை வாங்கவே யாரும் வரவில்லை என்பதே மிக கொடுமையான விஷயமாக உள்ளது, இதனால் தான் இந்த நிறுவனத்தை வாங்கவே யாரும் முன் வராத போது கடன் கொடுத்தால் மட்டும் திரும்ப கிடைக்குமா? என்ற சந்தேகத்திலேயே பங்குகளின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

நிராகரிக்கப்பட்ட கடன்?

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கேட்ட கடனில் முதல் கட்டமாக 400 கோடி ரூபாய் கடன் கோரிக்கை தற்போது நிராகரிக்கப்பட்ட நிலையில் இனி என்ன செய்யும் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. இதனாலேயே ஜெட் ஏர்வேஸ் வாங்க யாரும் முன் வர வில்லை என்றும் கருதப்படுகிறது.

என்ன செய்ய போகிறது ஜெட் ஏர்வேஸ்.. பங்கு சந்தையில் கடுமையான வீழ்ச்சி..பரிதவிப்பில் நிறுவனம்

எந்த சாத்தியகூறும் சாதகமாக இல்லை
அனைத்து விதமான சாத்தியங்களையும் பரிசீலித்த பிறகே இப்படியொரு வேதனையான முடிவை எடுத்துள்ளதாக ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தது. இதில் வேதனையான விஷயம் என்னவெனில் நூற்றுக்கும் அதிகமான விமானங்களை வைத்திருந்த ஜெட் ஏர்வேஸ் விமானங்களை இயக்காமல் நிறுத்தியே விட்டது.

என்ன செய்ய போகிறது ஜெட் ஏர்வேஸ்.. பங்கு சந்தையில் கடுமையான வீழ்ச்சி..பரிதவிப்பில் நிறுவனம்

சுமார் ரூ.10,000 கோடி வேண்டுமே
தற்போது சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கித்தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், மீண்டும் பழைய சூழ்னிலைக்கு வரவேண்டுமெனில், புத்துயிர் பெற 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது என்றும் விமானத்துறை வட்டாரங்கள் அறிவித்துள்ளன. எது எப்படியோ ஜெட் ஏர்வேஸ்ஸூக்கு ஏதேனும் விடிவுகாலம் கிடைத்தால் சரியே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jet airways stock rate down around 30% for shut down all services

shares of jet airways prises crased more 30 % around on thursday. a day after the crisis hit airline temporarily halted its operations
Story first published: Thursday, April 18, 2019, 13:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X