ஒப்பந்தத்தின் ஒரு சரத்து மீறப்பட்டதால் 2018-ம் ஆண்டில் பெற்ற Miss Bolivia Universe பட்டத்தை இழந்திருக்கிறார் 22 வயது மாடல் அழகி ஜாய்ஸ் ப்ராடோ (Joyce Prado).
இந்த பொலீவிய அழகிப் போட்டியில் பங்கு பெறுபவர்கள் திருமணம் செய்திருக்கக் கூடாது, கர்பமாக இருக்கக் கூடாது, இதற்கு முன் திருமணம் செய்து விவாகரத்து செய்திருக்கக் கூடாது, இதுவரை குழந்தை பெற்று எடுத்திருக்கக் கூடாது என பல சட்ட திட்டங்களைச் சொல்லி இருக்கிறார்கள்.
மிக முக்கியமாக இந்த மிஸ் பொலீவியா அழகிப் பட்டத்தை, அடுத்த அழகி தட்டிச் செல்லும் வரை மேலே சொன்ன எந்த ஒரு விதிமுறைகளையும் மீறக் கூடாது. அப்படி மீறினால் பட்டத்தை பறித்து விடுவார்கள். அது தான் நம் Joyce Prado-க்கும் நடந்திருக்கிறது.
விதிகள்
நம் Joyce Prado-வோ அவைகளை தெளிவாகவும் விரிவாகவும் படிக்கவில்லை போல. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய நீண்ட நாள் காதலர் ராட்ரிக்ஸ் கிம்மென்ஸ் உடன் ஒரு குழந்தையின் ஆடையை கையில் வைத்துக் கொண்டு ஒரு போட்டோ பதிவேற்றி இருக்கிறார்.
குழந்தை பிறப்பு
அதோடு அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகிறது என்பதையும் அந்தப் பதிவிலேயே உறுதி செய்திருக்கிறார். "நாங்கள் எங்கள் வாழ்கையின் அழகான கட்டத்தை எட்டியுள்ளோம். இன்று உலகிலேயே மகிழ்ச்சியான பெண்ணாக இருக்கிறேன். என் அருகில் இருப்பவரால் என் வாழ்கை அன்பால் நிறைந்திருக்கிறது. நாங்கள் எங்கள் வாழ்கையின் மிக அழகான தருணங்களை வாழப் போகிறோம்"என உருக்கமாக சந்தோஷமாக பதிவிட்டிருந்தார்.
பட்டம் பறிப்பு
அடுத்த சில மணி நேரங்களிலேயே Joyce Prado-வின் மாடல் ஏஜென்சி "Joyce Prado-க்கு வழங்கப்பட்டிருந்த மிஸ் பொலீவியா அழகிப் பட்டம் திரும்ப பெறப்பட்டது. போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தை மீறி கர்பமாக இருப்பதால், Joyce Prado-க்கு வழங்கிய பட்டத்தை திரும்பப் பெறுகிறார்கள்" என உறுதி
நெட்டிசன்கள்
இந்த செய்தி வெளியானதும் "பட்டம் வென்ற அழகிகள் ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது, குழந்தைகளுக்கு தாயாகக் கூடாது. இதெல்லாம் முட்டாள் தனமான விதிகள். ஒர் அழகி தயாவதால் அவள் பொலீவிய அழகி பட்டத்துக்கு தகுதி குறைவானவளாகி விடுவாளா..? இது நியாயமில்லை" என பொறித்துத் தள்ளத் தொடங்கிவிட்டார்கள் ட்விட்டர் வாசிகள்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications