நியூயார்க் : உலகில் உள்ள அனைத்து நாடுகளும் உள் நாட்டுப் போர் நடந்து வருகிற பல நாடுகளுக்கு ஐ.நா அமைதிப்படைகளை அனுப்பி வைத்து வருகிறது. இந்த ஐ.நா அமைதிப்படையில் பல நாட்டின் வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்திய வீரர்கள் இடம் பெற்றிருப்பதற்கு இந்தியாவுக்கு ஐ.நா. சபை 38 மில்லியன் டாலர்களை அதாவது சுமார் ரூ.266 கோடி பாக்கி வைத்துள்ளதாம்.
ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கூறுகையில், ஐ.நா.சபையின் நிதி நிலைமை குறித்து கவலை தெரிவித்த ஆண்டனி கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி படை வீரர்களையும், போலீசாரையும் அனுப்பி ஐ.நா. அமைதி நடவடிக்கையில் பங்களிப்பு செய்துள்ள நாடுகளுக்கு சுமார் 265 மில்லியன் டாலர் அதாவது சுமார் ரூ.1,855 கோடி செலுத்த வேண்டியது உள்ளது என்றும். இதில் அதிகபட்சமாக இந்தியாவுக்கு 38 மில்லியன் டாலர் சுமார் ரூ.266 கோடி செலுத்த வேண்டியது இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு மட்டும் அல்ல பாகிஸ்தான் 28 மில்லியன் டாலர்களையும், பங்களாதேசுக்கு 25 மில்லியன் டாலர்களையும், நேபாள் 23 மில்லியன் டாலர்களையும் தர வேண்டியுள்ளது. ஐ நா சபையில் நிலவி வரும் மோசமான பொருளாதார நிலை காரணமாக இந்த பணத்தை கொடுக்க முடியாமல் போனதாகவும் ஐ நா கூறியுள்ளது.
70 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது?
யாரு இந்த ஐ.நா அமைதிப்படை? எதுக்காக இப்படி செய்கிறது. ஐ. நா சபை சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது இந்த அமைப்பு. இந்த அமைதிப்படைக்கு அதிகமான வீரர்களை அனுப்பி வைத்திருக்கும் நாடுகளில் இந்தியாவும் முக்கிய இடம் வகித்து வருகிறது. தற்போது ஐ.நா அமைதிப்படையில் சுமார் 96,000 வீரர்கள் உள்ளனர். மேலும் 15,000 அதிகாரிகளும், 1,600 தன்னார்வலர்களும் சேவையாற்றி வருகின்றனர்.
என்ன செய்கிறது.
சர்வதேச விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் முக்கிய அதிகாரம் பெற்ற அமைப்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இயங்கி வருகிறது. சர்வதேச நாடுகளில் ஏற்படும் முக்கிய பிரச்சனைகளில் தலையிட்டு அதை தீர்த்து வைப்பது, உள் நாட்டு போர்காலங்களில், அந்தந்த நாடுகளுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறது.
எந்தெந்த நாடுகள் உள்ளன?
இந்த அமைப்பில் வீட்டோ அதிகாரம் படைத்த வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. 15 உறுப்பினர்களை கொண்ட இந்த அமைப்பில் ஓராண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தற்காலிக உறுப்பினர்களாக ஐந்து நாடுகளை தேர்வு செய்வது வழக்கம். 10 தற்காலிக உறுப்பினர்களில் 5 நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியேறி, புதிய நாடுகள் இணைவது மரபாக இருந்து வருகிறது.


Click it and Unblock the Notifications