டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : தனியார் துறை வங்கியான டி.சி.பி பேங்க் கடந்த நான் காவது காலாண்டில் நிகர லாபம் 50 சதவிகிதம் அதிகரித்து, 96.33 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த 2018 - 2019- ம் நிதியாண்டில் 4 வது காலாண்டில் 50 சதவிகிதம் லாபம் அதிகரித்தும் உள்ளது.

 

இதுவே கடந்த 2017 - 2018ல் நிகர லாபம் 64.21 கோடியாக இருந்தது. கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் வட்டி செலவு உள்ளிட்டவைகளோடு சேர்ந்த வருமானம் 14 சதவிகிதம் அதிகரித்து 301 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் 264 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு

பரவாயில்லையே இப்பதான் புரிசிருக்கோ..வியாபார யுக்தியை கையாளும் ஐ.ஆர்.சி.டி.சி..என் ஜாய் த ஆஃபர்

கடந்த 2018- 2019 வருடத்திற்கான நிகர லாபம் 32.62 சதவிகிதம் அதிகரித்து, 325.37 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் 245.34 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்க தக்கது.

டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு


அதிகரிக்கும் வாராக்கடன்
கடந்த நான் காம் காலாண்டில் மட்டும் வங்கியின் கணக்கிடப்படாத செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 438.48 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 369.03கோடி ரூபாயாக இருந்தது. அதேசமயம் வாராக்கடனும் அதிகரித்துள்ளது. மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிகர செயலபடாத சொத்துக்களின் மதிப்பு 153.77 கோடியாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் 146.72கோடி ரூபாயாக இருந்தது.

சீரான வளர்ச்சியே நோக்கம்
இது குறித்து இந்த வங்கியின் தலைமை செயல் அதிகாரி முரளி நடராஜன் கூறுகையில், எங்களது நோக்கம் இன்னும் அதிகப்படியான வளர்ச்சியை காண்பது, செயல்பாடாத சொத்துகளின் மீதுள்ள கடன் களை வசூல் செய்வதும், பங்கு சந்தையிலும் ஒரு தர வேண்டும் என்பதே. மேலும் எங்களால் முடிந்த அளவு சீரான வளர்ச்சி, மூலதனத்தை அதிகரிப்பதும், செயல் திறனிலும் இன்னும் அதிகமாக ஈடுபாடு காட்டுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

ஆராய்ந்து முதலீடு செய்யலாம்
தனியார் துறைகளில் அதிகரித்து வரும் வாராக் கடனால் பல வங்கிகள் மற்ற வங்கிகளோடு இனைந்து செயல்பட்டு வருகின்றன. ஒரு வங்க்கியின் செயலபாடுகளை அந்த வங்கியின் வாராக் கடனை வைத்து ஒப்பிட்டு பார்த்து தான் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வார்கள். அவ்வகையில் இந்த வங்கியின் வாராகடன் அதாவது அசையா சொத்துக்களின் மீதான வாராக்கடன் அதிகரித்துள்ளது. இது வங்கியின் வளர்ச்சிக்கு சரியான வழியே அல்ல என்றாலும் முதலீட்டாளர்கள் அலசி ஆராய்ந்து முதலீடு செய்வது நல்லதே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: bank பேங்க்
English summary

DCB Bank posts q4 net profit of 50% rised

Private sector lender DCB Bank, on Thursday, announced a 50 per cent increase in net profit to ₹96.33 crore for the fourth quarter of 2018-19, with a robust growth in core income and stable asset quality.
Story first published: Friday, April 19, 2019, 18:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X