பறிபோகும் விமான சேவைகள்.. செய்வதறியாது தவிக்கும் ஜெட் ஏர்வேஸ்..ஊடுருவும் மற்ற நிறுவனங்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : கடன் பிரச்சனையால் தனது சேவைகளை முடக்கியுள்ள நிலையில், ஜெட் ஏர்வேஸ்ஸிக்கு வழங்கப்பட்ட சேவைகளை மற்ற விமானங்களுக்கு தற்காலிகமாக வழங்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்து செயலர் பிரதீப் சிங்க் கரோலா அறிவித்துள்ளார்.

 

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடன் பிரச்சனையால் தனது அனைத்து சேவைகளையும் முடக்கியுள்ளது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே. இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களும் தங்களது பணியினை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் சேவைகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று போட்டி விமான சேவை நிறுவனங்கள் அரசுக்கு வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில் மத்திய விமானத் துறை செயலர் பிரதீப் சிங்க் கரோலா ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தால் நிறுத்தப்பட்ட 440 சேவைகள் காலியாக உள்ளன. இதில் மும்பையிலிருந்து இயக்கப்படும் 280 சேவைகளும், டெல்லியிலிருந்து இயக்கப்பட்ட 160 சேவைகளும் காலியாக உள்ளன.

பிராட்பேண்ட் சேவையில் அதிகரிக்கும் ஏர்டெல் ஜியோ.. 1 லட்சம்பேர் வெளியேற்றம் பி.எஸ்.என்.எல்

30விமானங்கள் சேவையை தொடரும்

30விமானங்கள் சேவையை தொடரும்

தற்போது இந்த காலியாக உள்ள சேவைகள் அடுத்த மூன்று மாதங்களுக்கும் மட்டும் 30 க்கும் மேற்பட்ட விமானங்கள் பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் மூலம் புதிதாக இயக்கப்படும் என்றும், மற்றவை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

விமானிகள் வேறு விமான நிறுவனங்களை நாடியுள்ளனர்

விமானிகள் வேறு விமான நிறுவனங்களை நாடியுள்ளனர்

கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 75 உள் நாட்டு விமானங்கள் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டு வெளியே நிறுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் 58 விமானிகள் வேறு விமான நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர் என்றும் விமான துறை வட்டாரங்கள் மூலம் தெரிகிறது. மேலும் பிரதீப் சிங்க் கரோலா மற்ற விமான நிறுவனங்களுடன் இணைந்து பரந்து விரிந்த ஜெட் ஏர்வேஸ் விமானங்களை வாங்க வங்கியுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

டிக்கெட் பணம் தரப்பட்டதா?
 

டிக்கெட் பணம் தரப்பட்டதா?

மேலும் ஜெட் ஏர்வேஸ்ஸில் தங்களது டிக்கெட்களை பதிவு செய்திருந்தவர்களுக்கு, பணம் திருப்பி தரப்பட்டதா? அது எவ்வாறு தரப்பட்டது என பல கேள்விகள் இருந்து வருகின்றன. உலகெங்கிலும் உள்ள பயணிகள் இதை தெரிந்து கொள்ள வரும் திங்கள் அல்லது செவ்வாய் கிழமை வருகின்றனர். ஆக அதைப்பற்றியும் விசார்த்து வருகிறோம்.

IATA குழுவில் கொஞ்சம் இருக்கும் போல?

IATA குழுவில் கொஞ்சம் இருக்கும் போல?

சில சர்வதேச விமான போக்குவரத்து குழுவை IATA குழுவினர் பதிவு செய்துள்ள டிக்கெட்களின் சில பணத்தை வைத்திருப்பதாகவும் தெரிகிறது. சில சர்வதேச விமான டிக்கெட்டுகள் ஐஏடிஏ அமைப்பு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் அவர்களிடமும் விசாரனை நடத்தப்பட்டால் மட்டுமே தெரியும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Goverment allocate 440 vacant jet airways slots to other

Jet Airways suspending operations, as many as 440 slots are vacant at Delhi and Mumbai airports which will be allocated to other airlines in a transparent manner.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X