பொதுவாக அதிக பணம் படைத்தவர்கள் தான் அதிகம் நாடு விட்டு நாடு மாறி வாழ விரும்புகிறார்கள். அதிலும் ஒரு வரம்பு வைத்திருக்கிறார்களாம். அந்த வரம்பை Global Wealth Migration Review என்கிற அமைப்பு கணித்திருக்கிறது.
அதோடு கோடீஸ்வரர்கள் எந்த நாடுகளில் இருந்து எந்த நாடுகளுக்கு அதிகம் குடிபெயர்கிறார்கள் என்பதையும் கணக்கிட்டு இருக்கிறது. ஒரு கோடீஸ்வரர் ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் பணம் வைத்திருந்தால் அவர் விருப்பப் பட்ட நாட்டுக்குச் சென்று செட்டில் ஆகிவிடுகிறார்களாம்.
ஏன் வேறு நாட்டுக்குச் சென்று செட்டில் ஆகிறார்கள் என்று பார்த்தால் வரிச் சுமை குறைவாக இருப்பது, சுற்றுச்சூழல் அதிகம் மாசடையாமல் இருப்பது, குற்றங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது அவ்வளவு ஏன் எனக்கு பிடித்திருக்கிறது போகிறேன் எனக் கூட கிளம்பி விடுகிறார்களாம்.
வெளியேறுதல்
இருப்பதிலேயே சீனாவில் இருக்கும் கோடீஸ்வரர்கள் தான் அதிகம் தங்கள் தாய் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்குச் சென்று செட்டில் ஆகி இருக்கிறார்களாம். கடந்த 2018-ல் 15000 சீன கோடீஸ்வரர்கள் தங்கள் தாய் நாட்டை விட்டுச் சென்றிருக்கிறார்கள். சீனாவுக்கு அடுத்த பெரிய கம்யூனிஸ தேசமான ரஷ்யாவில் இருந்து 2018-ம் ஆண்டில் மட்டும் 7000 கோடீஸ்வரர்களுக்கு மேல் வெளிநாடுகளுக்குச் சென்று செட்டில் ஆகி இருக்கிறார்கள்.
கம்யூனிஸம்
மேலே சொன்ன ரஷ்யாவும், சீனாவும் கம்யூனிஸ தேசம். பெரிதாக ஒரு தனியார் நிறுவனம் தன் இஷ்டத்துக்கு வளர முடியாது. எல்லாவற்றிலும் அரசின் கை இருக்கும். அரசை எதிர்த்து சில பிசினஸ் முடிவுகளை செயல்படுத்துவது எல்லாம் சாத்தியமே இல்லாத விஷயம். கம்யூனிஸம் இருக்கும் போது முதலாளித்துவத்தை செயல்படுத்த முடியாது. எனவே அதிக லாபத்தைச் சம்பாதிக்க வெளியேறினார்கள் எனச் சொல்கிறார்கள். ஆனால் மூன்றாம் இடத்தில் இருக்கும் நாடு நம் இந்தியா.
இந்தியாவில் இருந்து
கடந்த 2018-ல் மட்டும் இந்தியாவில் இருந்து சுமார் 5000 இந்திய கோடீஸ்வரர்கள் இந்தியாவை விட்டு வேறு சில வெளி நாடுகளுக்குச் சென்று செட்டில் ஆகி இருக்கிறார்களாம். இந்த 5000 பேர் என்பது இந்தியாவில் இருக்கும் மொத்த கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் 2% அளவுக்கு வருமாம். ஆக இந்தியாவின் 2% பணக்காரர்கள் வெளிநாடுகளில் மேலும் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வேறு எந்த நாடுகள்
சீனா, ரஷ்யா, இந்தியா என மூன்று நாடுகளை வைத்துக் கொண்டு கம்யூனிஸ மற்றும் வளரும் நாடுகளில் இருந்து மட்டும் தான் வெளியேறுகிறார்கள். வளர்ந்த நாடுகள், முதலாளித்துவம் அதிகம் இருக்கும் நாடுகளில் இருந்து பணக்காரர்கள் வேறு நாடுகளுக்கு இடம் பெயரவில்லை என நினைத்தால் தவறு. பிரான்சில் இருந்து 3000 கோடீஸ்வரர்கள், இங்கிலாந்தில் இருந்து 3000 கோடீஸ்வரர்கள் என இடம் பெயர்ந்திருக்கிறார்கள். அவ்வளவு ஏன் பலரையும் பணக்காரர் ஆக்கும் சவுதி அரேபியாவில் இருந்தும் கூட 1000 கோடீஸ்வரர்கள் வேறு நடுகளுக்கு இடம் பெயர்ந்திருப்பதாகச் சொல்கிறது Global Wealth Migration Review.
எங்கே போகிறார்கள்
ஆஸ்திரேலியா தான் பணக்காரர்களின் சொர்க்க புரியாக இருக்கிறது. கடந்த 2018-ல் மட்டும் 12,000 கோடீஸ்வரர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறி இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து
அமெரிக்கா 10,000 கோடீஸ்வரர்கள்,
கனடாவில் 4000 கோடீஸ்வரர்கள்,
சுவிட்சர்லாந்தில் 3000 கோடீஸ்வரர்கள்,
ஐக்கிய அரபு நாடுகளுக்கு 2000 கோடீஸ்வரர்கள்,
கரீபியத் தீவுகளில் 2000 கோடீஸ்வரர்கள்,
நியூசிலாந்தில் 1000 கோடீஸ்வரர்கள்,
சிங்கப்பூரில் 1000 கோடீஸ்வரர்கள் குடியேறி இருக்கிறார்கள். அவ்வளவு ஏன் உலகிலேயே மோசமான பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் கிரீஸ் நாட்டில் கூட 1000 கோடீஸ்வரர்கள் குடியேறி இருப்பதாகச் சொல்கிறது Global Wealth Migration Review.
என்ன காரணம்
கோடீஸ்வரர்கள் குடியேற வெறும் வியாபார வரிகள் குறைவாக இருக்கிறதா..? என்பதை மட்டும் பார்க்கவில்லை. தங்கள் குடும்ப சொத்துக்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு, பரம்பரைச் சொத்துக்களை மகனுக்கோ , மகளுக்கோ கொடுக்கும் போது செலுத்த வேண்டிய (Inheritance Tax) வரி இல்லாமல் இருப்பது, மருத்துவச் செலவுகள் குறைவாக இருப்பது அல்லது அரசே ஏற்றுக் கொள்வது போன்றவைகளையும் கணக்கிட்டு குடியேறுகிறார்களாம். ஆஸ்திரேலியாவில் பரம்பரைச் சொத்துக்களை கைமாற்ற வரி செலுத்தத் தேவை இல்லை. அதே போல மருத்துவச் செலவுகளும் ஆஸ்திரேலியாவில் மிகக் குறைவாம். அதனால் தான் அமெரிக்காவைக் காட்டிலும் ஆதிரேலியாவுக்கு அதிக பணக்காரர்கள் குடியேறுவதாகச் சொல்கிறது Global Wealth Migration Review.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications