அதிகரிக்கும் ஆன்லைன் சில்லறை வர்த்தகங்கள்.. முடங்கி போகும் உள்ளூர் சில்லறை வியாபாரம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் ஆன்லைன் சில்லறை வர்த்தகம் 2030-ம் நிதியாண்டில் 170 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என்றும் , இதே வருடத்திற்கு சராசரியாக 23 சதவிகிதம் அதிகரிக்கும் ஜெப்ஃபெரிஸ் அறிக்கையில் கூறியுள்ளது.

 

இந்தியாவில் தற்போது மொத்த சில்லறை விற்பனை வணிகத்தில் 25 சதவிகிதம் ஆன்லைன் சில்லறை வணிகத்தால் நடை பெற்று வருகிறது. அதுவும் தற்போது 37 சதவிகிதம் சில்லறை விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்தியாவில் மொத்தம் சில்லறை விற்பனையாக 18 பில்லியன் டாலர்களாக உள்ளது. மேலும் தற்போது நுகர்வோர் பொருட்களுக்கான சில்லறை விற்பனைக்காக 12,800 ரூபாய் செலவிடப்படும் எனில், இது 2030 ஆம் நிதியாண்டில் 25,138 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த ஆன்லைன் விற்பனையில் வாங்குவது நுகர்வோர் பொருட்கள் மட்டும் அல்லாது தற்பொது எலக்ட்ரானிக் மற்றும் ஆடைகள் விற்பனையும் அதிகரித்து வருகிறது.

இணைந்த கரங்கள்.. பொருளாதார முன்னேற்றத்தினை அதிகப்படுத்தவே.. மஹிந்திரா - ஃபோர்டு ஒப்பந்தம்

சூடு பிடித்துள்ள எலக்டிரானிக் விற்பனை

சூடு பிடித்துள்ள எலக்டிரானிக் விற்பனை

குறிப்பாக இந்த ஆன்லைன் விற்பனையில் தற்போது சூடுபிடித்துள்ள விற்பனை எலக் ட்ரானிக் சாதனங்களே. இதில் குறிப்பாக அதிகப்படியான ஆப்பர்கள், கேஸ் பேக் ஆப்பர்கள் போன்ற வற்றால், சந்தையில் உள்ள ஷோரூம்களில் விற்பனை தேங்கியுள்ளது.

புதிய மாடல்கள் விரைவில் கிடைக்கும்

புதிய மாடல்கள் விரைவில் கிடைக்கும்

குறிப்பாக ஆண்லைனில் விற்பனையாகும் ஆடைகள் மற்றும் எலக்டிரானிக் சாதனங்கள், அதுலும்குறிப்பாக செல்போன் சாதனங்கள் புதிது புதியதாக சந்தைக்கு வரும் மாடல்களை உடனடியாக அறிமுகப்படுத்துகின்றன. இதனால் மக்கள் பெரிய அளவில் இந்த ஆன்லைன் வர்த்தகங்களால் ஈர்க்கப்படுகின்றனர்.

அதிகரித்துள்ள ஆன்லைன் குரோசரீஷ்
 

அதிகரித்துள்ள ஆன்லைன் குரோசரீஷ்

தற்போது குரோசரீஸ்(மளிகை பொருட்கள் ) ஆன்லைனில் வாங்குவது மிக அதிகமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உள்ளூர் கடைகளில் தேக்கம் ஏற்படுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. அதிலும் அமேசான், பிக்பாஸ்கட் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் அனுதினமும் தங்களது விளம்பரங்களை அதிகரித்தும் வருகின்றன. இதன் மூலம் ஆன்லைன் ஷாப்பிங்க் அதிகரித்துள்ளது.

மனதை கலைக்கும் ஆப்பர்கள்

மனதை கலைக்கும் ஆப்பர்கள்

குறிப்பாக ஒன்று வாங்கினால் இன்னொன்று ப்ரீ, அதோடு பல ஆப்பர்களையும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிப்பதற்காக ஆன்லைன் கேஸ் பேக் ஆப்பர்களையும் அறிவிக்கின்றன. அதிலும் சில பொருட்களுக்கு 80 சதவிகிதம் வரைஆப்பர்களை தருகின்றன. இதனாலேயே மக்கள் இந்த ஆன்லைன் மோகத்தால் ஈர்க்கப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக இந்துலேகா ஆயில் ஒரு பாட்டில் 100மிலி சுமார் 400க்கும் மேல், ஆனால் ஆன்லைனில் 3 பாட்டில்கள் 300க்கும் தரப்படுகிறது. இது பொருட்கள் தரமானவையோ இல்லையோ ஆனால் விலை குறைவு. இன்றளவிலும் விலையை பார்த்து வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகம்.

தரத்தையும், பொருட்களையும் பார்க்க முடிவதில்லை

தரத்தையும், பொருட்களையும் பார்க்க முடிவதில்லை

மளிகை பொருட்களை வாங்கும் போது குறைந்த அளவிலேயே ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. என்பதாலேயே புதிய வாடிக்கையாளர்களை அதிகரித்தாலும் மளிகை பிரிவில் விற்பனையை அதிகரிக்க முடிவதில்லை. குறிப்பாக அழகு சாதன பொருட்கள், ஸ்கின் கேர் பொருட்கள், வாசனை திரவியங்கள் , நுகர்வோர் பொருட்களின் தரம், உற்பத்தி இதன் கவலை இன்றளவும் மக்களிடையே நிலவியே வருகிறது,. ஏனெனில் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பொய்யான பொருட்களை தருதல் போன்ற மோசடிகளுக்கும் இருந்து வருகிறது.

கண்மூடிதனமான நம்பிக்கையே ஆபத்து

கண்மூடிதனமான நம்பிக்கையே ஆபத்து

இதுபோன்று கண் மூடித்தனமாக நம்பி வாங்குவதாலேயே பலர் ஏமாறுகின்றனர். மேலும் அழகு சாதன பொருட்கள்,ஸ்கின் கேர் பொருட்கள் வாங்கும்போது உடலுக்கு ஒவ்வாமை ஏற்பட்டால் அதன் விளைவை சந்திக்க நேரிடும். ஆக மக்கள் இதுபோன்ற ஆன்லைன் ஷாப்பிங்க் செய்வதை தவிர்த்தால் அது மக்களூக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது. இதன் மூலம் நாட்டிற்கு வருமானமும் கிடைக்கும். உள்ளூர் வியாபாரிகளும் பயன் அடைவர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's online retail market to cross $170 billion

Online retail in the country is expected to be $170 billion by financial year 2030, growing at an average of 23 percent yearly, according to a Jefferies report. Online retail, which is currently around 25 percent of total organised retail market in India, but its can potentially increase to around 37 percent of the total organised retail market during this periodin india.
Story first published: Friday, April 19, 2019, 15:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X