மும்பை : முகேஷ் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ரீஸ் நிறுவனம் நான்காவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது 9.79 சதவிகிதம் அதிகரித்து 10362 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதுவே இதற்கு முந்தையான காலண்டான 2017 - 2018-ம் நிதியாண்டில் 9438 கோடி ரூபாயாகும். இதில் கடந்த 2018 - 2019 நிதியாண்டில் நான் காவது காலாண்டில் வருவாய் 19.4 சதவிகிதம் அதிகரித்து 1,54, 110 கோடி ரூபாயாக உள்ளது. இதுவே இந்த காலாண்டின் மூன்றாவது காலாண்டில் 1,70,709 கோடி ரூபாயாக வருவாய் அதிகரித்துள்ளது. இது 4- வது காலாண்டுடன் ஒப்பிடும்போது 9.7 சதவிகிதம் குறைவாகும். இதுவே நிகர லாபம் நாங்காவது காலாண்டில் 10362 கோடி ரூபாயாகவும், இதுவே 3-வது காலாண்டில் 10251 கோடி ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் கிடைக்கும் லாப வரம்பு குறைந்திருந்தாலும், சில்லறை வர்த்தகத்தின் மூலம் கிடைத்திருக்கும் வருவாய் வெகுவாக அதிகரித்துள்ளது. அதேசமயம் ஜியோ சேவையில் 2.66 கோடி வாடிக்கையாளர்களும் இணைந்தும், இந்த நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்க மிகப்பெரும் உதவியாக அமைந்துள்ளன.
நிதித் துறையில் வருமானம்
கடந்த 2018 - 2019-ம் நிதியாண்டில் வருவாய் 44.60 சதவிகிதம் அதிகரித்து 6,22,809 கோடி ரூபாய் வருவாயும், 39,588 கோடி ரூபாய் நிகர வருமானமும் பெற்றுள்ளது.
அதேசமயம் கடந்த மார்ச் 31-வுடன் 2,87,505 கோடி ரூபாயாக கடன் அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் மார்ச்2018ல் 2,18,763 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்க தக்க விஷயமாகும்.
எதுக்கு இந்த பொது நிதி
எனினும் பொது நிதியாக ரிலையன்ஸ் நிறுவனம் 30,000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த ஆண்டில் சில்லறை வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் சேவையில் பெற்ற வளர்ச்சியே அதிகப்படியான வருமானத்திற்கு காரணம் என ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
சில்லறை வர்த்தகத்தில் மட்டும்
கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது சில்லறை வர்த்தகத்தில் வருமானம் 51.60 சதவிகிதம் அதிகரித்து 36663 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது இதே சமயத்தில் வருவாய் 88.70 சதவிகிதம் அதிகரித்து 1,30,566 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 69,198 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
பெட்ரோலிய துறையில் வருமானம்
சுத்திகரிப்பு மற்றும் மார்கெட்டிங் பிரிவுகளில் இருந்து வருவாய் 6.1 சதவிகிதம் குறைந்து 87,844 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணியின் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக வருவாய்வெகுவாக குறைந்தது.
டெலிகாம் துறையின் வருவாய்
கடந்த நிதியாண்டில் (2018 - 2019) ரிலையன்ஸ் ஜியோ வருமானம் 64.70 சதவிகிதம் அதிகரித்து லாபம் 840 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் 510 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜியோவின் சராசரி வருவாய் 126. 2 கோடி ரூபாய் குறைந்துள்ளதாகவும் தெரிகிறது.
பங்குதாரர்களுக்கு டிவிடென்ட் உண்டா?
எது எப்படியோ பங்குதராகளுக்கு ஏதேனும் உண்டா? என்று கேட்கிறீர்களா. ஆமாங்க பங்கு தரார்களுக்கு 6.50 பங்குக்கு டிவிடென்ட் கொடுக்க முடிவு எடுத்திருங்காங்கலாம். ஆனா இன்னும் முறைய அறிவிப்பு இன்னும் வரல. இனிமேல் தான் வரும். பார்க்கலாம் பங்கு தாரர்களுக்கு லாபம் கிடைத்தான் சந்தோஷம்தானே.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications