வீடுகளின் விற்பனை 5 சதவிகிதம் அதிகரிப்பு..! சென்னையில் என்ன நிலை..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், புனே, நொய்டா, குருகிராம், பெங்களூரு ஆகிய 9 நகரங்களில் கடந்த ஜனவரி 2019 முதல் மார்ச் 2019 வரையான 3 மாதங்களில் வீடுகளின் விற்பனை 5 சதவிகிதம் வரை அதிகரித்திருக்கிறதாம்.

 

இந்த ஒன்பது பெரு நகரங்களில் கடந்த ஜனவரி 2019 முதல் மார்ச் 2019 வரையான கால கட்டத்ய்தில் 56,149 வீடுகள் விற்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது PropEquity நிறுவனத்தி அறிக்கைகள்.

ஆனால் இது ஒன்பது பெருநகரங்களில் ஜனவரி 2019 முதல் மார்ச் 2019 வரையான 3 மாதங்களில் 42,504 ரியல் எஸ்டேட் திட்டங்கள் மற்றும் புதிய வீடுகளுக்கான பணிகளைத் தொடங்கி இருக்கிறார்களாம். புதிய வீடுகள் மற்றும் ரியல் எஸ்டேட் திட்டங்கள் கடந்த ஜனவரி 2018 முதல் மார்ச் 2018 வரையான மூன்று மாத காலங்களில் தொடங்கப்பட்டதை விட இந்த ஆண்டில் 7 சதவிகிதம் குறைவாகத் தொடங்கி இருக்கிறார்களாம்.

வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள்..ஒரே அவசர உதவி எண் 112.. ஒருங்கிணைக்கப்பட்ட சேவை

முடித்த வீடுகள்

முடித்த வீடுகள்

தற்போது இந்திய ரியல் எஸ்டேட் சந்தை வாடிக்கையாளர்களால் முன்னெடுக்கப்பட்டு செல்கின்றது. பொதுவாக வீடு வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் வீடு கட்டி முடிக்கும் நிலையில் இருக்கின்ற ரியல் எஸ்டேட் திட்டங்கள் மற்றும் கட்டி முடித்த வீடுகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். புதிதாக திட்டம் தொடங்கி இருக்கும் வீடுகளை வாங்க விரும்பவதில்லை என்கிறது PropEquity நிறுவனத்தின் அறிக்கை.

கட்டி முடித்த வீடுகள்

கட்டி முடித்த வீடுகள்

கடந்த 2018 நிலவரப்படி இந்தியாவில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் மட்டும் ரியல் எஸ்டேட் திட்டங்கள் 6.16 லட்சமாக இருந்தது. தற்போது இந்த மார்ச் 2019காலாண்டில் இந்த கட்டி முடித்த விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை 5.91 லட்சமாக குறைந்திருக்கிறது. ஒரு பக்கம் புதிய திட்டங்கள் வராமல் இருப்பது, மற்றும் கட்டி முடித்த வீடுகள் விற்கப்பட்டு வருவதால் இந்த தேக்கம் எண்ணிக்கை குறைந்திருக்கிறதாம்.

பட்ஜெட் 2019
 

பட்ஜெட் 2019

கடந்த பிப்ரவரி 2019 அன்று பாரதிய ஜனதா கட்சி வெளியிட்ட இடைக்கால பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் துறைக்கு ஏகப்பட்ட சாதகமான அம்சங்களை அறிவித்தது இந்திய ரியல் எஸ்டேட் துறையை முன்னெடுத்துச் செல்கிறது. இந்த புதிய அம்சங்களால் வீடுகளுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பட்ஜெட் வீடுகள் மற்றும் Affordable housing எனப்படும் மலிவு விலை வீடுகள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.

வீடுகள் விற்பனைக் குறைவு

வீடுகள் விற்பனைக் குறைவு

ஹைதராபாத், குருகிராம், கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் வீடுகளின் விற்பனை மார்ச் 2019 காலாண்டில் குறைந்திருக்கிறதாம். அதிகபட்சமாக மகாராஷ்டிராவின் புணே பெரு நகரத்தில் மார்ச் 2010 முதல் காலாண்டில் வீடுகளின் விற்பனை 32 சதவீதம் அதிகரித்திருக்கிறது, இந்த மார்ச் 2019 காலத்தை மட்டும் புனே நகரத்தில் சுமார் 15 ஆயிரம் வீடுகள் விற்க பட்டிருக்கின்றன. சென்னையில் மார்ச் 2019 காலாண்டில் 4,108 வீடுகள் விற்கப்பட்டிருக்கின்றன. கடந்த மார்ச் 2018 காலாண்டை விட 24% அதிகம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

house sales 5 percent increased in march 2019 quarter

house sales 5 percent increased in march 2019 quarter
Story first published: Saturday, April 20, 2019, 13:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X