முகேஷ் அம்பானியின் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீட்டெயில் (இ-காமர்ஸ் உட்பட) வியாபாரங்கள் பலமாக கல்லா கட்டத் தொடங்கி இருக்கின்றனவாம்.
ரிலையன்ஸ் குழுமத்தின் மொத்த வருவாயில் 23% மேலே சொன்ன இரண்டு துறைகளில் இருந்து தான் வந்திருக்கிறதாம். 2018 - 19 நிதி ஆண்டு நிலவரப்படி ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீட்டெயில் & இ-காமர்ஸ் வியாபாரம் மூலம் மட்டும் அந்த 23 சதவிகித வருவாய் வந்திருக்கிறதாம்.
கடந்த 2017 - 18 நிதியாண்டில் இந்த இரண்டு துறையில் இருந்தும் 17 சதவிகித வருவாய் தான் வந்ததாம். ஆனால் இந்த 2018 - 19-ல் 6% கூடுதலாக வந்திருக்கிறது.
ரிலையன்ஸ் ஆயில்
இந்த 2018 - 19-ல் ரிலையன்ஸ் குழுமத்தின் மொத்த வருவாயில் எண்ணெய் வியாபாரத்தில் இருந்து வரும் வருவாய் 77% ஆக குறைந்திருக்கிறதாம். கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் ரிலையன்ஸ் குழுமத்தின் மொத்த வருவாயில் 83 சதவிகிதம் வரை வருமானத்தைக் கொட்டிக் கொண்டிருந்தது ரிலையன்ஸின் எண்ணெய் சுத்தீகரிப்பு நிறுவனங்கள் தானாம்.
10 ஆண்டுகள்
ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் மிகப் பெரிய வருவாய் ஊற்றுவாயாக இருப்பது அதன் எண்ணெய் சுத்தீகரிப்பு வியாபாரம் தான். அதில் கிடைத்த வருமானத்தைத் தான் பெரிய அளவில் ஜியோவுக்கும், ரிலையன்ஸ் ரீட்டெயிலுக்கும் (இ-காமர்ஸ்) முதலீடாகச் செய்து கொண்டிருக்கிறது.
ஜியோ தொடக்கம்
கடந்த செப்டம்பர் 2016-ல் தான் ரிலையன்ஸ் குழுமம் தன் செல்ல பிள்ல்ளை ஜியோ-வை அறிமுகப்படுத்தினார்கள். இன்று கிட்ட தட்ட இந்திய டெலிகாம் சந்தையில் நம்பர் 1. அதுவும் மூன்றே ஆண்டுகளில். அதே போல ரிலையன்ஸ் குழுமம் நுகர்வோர் துறையையும் அழுத்தமாகவும், நம்பிக்கையாகவும் பார்க்கிறார்களாம். அதற்கு ரிலையன்ஸ் ஜியோவையும் பலமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்திய அமேஸான்
அமேஸானைப் போல இந்தியாவில் ரிலையன்ஸை வளர்த்து எடுக்க இந்திய இ-காமர்ஸ் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வந்ததில் (டிசம்பர் 2018 இ-காமர்ஸ் பாலிசி மாற்றங்கள்) இருந்து, அஜியோவை பிரம்மாண்டமாக கட்டமைத்து வருகிறது ரிலையன்ஸ்.
மார்கன் ஸ்டான்லி கணிப்பு
அதற்கு பக்க பலமாக Radisys Corp தொடங்கி Vakt Holdings Ltd போன்ற இ - காமர்ஸ் நிறுவனங்களை 2.5 பில்லியன் டாலர் வரை விலை கொடுத்து வளைத்துவிட்டது. இதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்ட மார்கன் ஸ்டான்லி ஒரு கணிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன் படி இந்தியாவின் இ-காமர்ஸ் ஃப்ளிப்கார்ட், அமேஸான் மற்றும் ரிலையன்ஸ் என மூன்று பேரும் சேர்ந்து 2028-ல் இந்தியாவின் 2019-ல் 30 பில்லியன் டாலராக இருக்கும் 200 பில்லியன் டாலருக்கு கொண்டு செல்வார்கள் எனச் சொல்லி இருக்கிறது.
ரிலையன்ஸ் கணிப்பு
வரும் 2028-ம் ஆண்டில் ரிலையன்ஸ் குழுமத்தின் மொத்த வருவாயில் சுமார் 75 - 80 சதவிகிதம் இந்த இ - காமர்ஸ் நுகர்வோர் துறையில் இருந்து வரும் எனச் சொல்கிறார்கள் ரிலையன்ஸ் அதிகாரிகள்.
கடன் தொல்லை
தற்போது முகேஷ் அம்பானிக்கு நுகர்வோர் (இ-காமர்ஸ்) துறையையும், ஜியோவையும் மேம்படுத்த பணம் தேவைப்படுகிறது. ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சுமார் 1.95 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. இந்த நேரத்தில் மேலும் கடன் வாங்குவதற்கு பதிலாக தன் ரிலையன்ஸ் நிறுவன பங்குகளில் ஒரு பகுதியை Saudi Aramco நிறுவனத்துக்கு விற்று சுமார் 10 - 15 பில்லியன் டாலர் (70,000 - 1,00,000 லட்சம் கோடி ரூபாய்) வரை திரட்ட பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகச் செய்திகள் வளம் வந்து கொண்டிருக்கின்றன.
ஆக இந்தியாவில் ஒரு அசுர அமேஸான் ரிலையன்ஸி அஜியோ வடிவில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில வருடங்களில் இந்தியாவையே ஆளப் போவதை நம்மால் உணர முடிகிறது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications