ஜெட் ஏர்வேஸின் அந்த 16 விமானங்களையாவது காப்பாற்றுவோம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கடன் கொடுத்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தான் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து நிர்வாகத்தை நிர்வகித்து வருகிறது.

ஆனால் இன்னமும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 51% பங்குகளை வைத்துக் கொண்டு நரேஷ் கோயல் தான் வைத்திருக்கிறார். கடந்த மார்ச் 25-ல் அவர் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த பின் இப்போது நிர்வாகம் முழுக்க எஸ்பிஐ தலைமையிலான 8 வங்கிகளிடம் இருக்கிறது.

இப்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக 16 விமானங்கள் இருக்கிறதாம் இந்த 15 விமானங்களில் 10 விமானங்கள் அகல உடல் கொண்ட Boeing 777 - 300 ERs ரக பெரிய விமானங்களாம்.

நிறைய பேசுவீங்களா அப்படின்ன நீங்க தான் வேணும்..ரூ.999 போடுங்க.. கஸ்டமரை அதிகரிக்க வோடபோன் திட்டம் நிறைய பேசுவீங்களா அப்படின்ன நீங்க தான் வேணும்..ரூ.999 போடுங்க.. கஸ்டமரை அதிகரிக்க வோடபோன் திட்டம்

தூசி படிந்து கிடக்கும்

தூசி படிந்து கிடக்கும்

இந்த விமானங்கள் வெறுமனே garage-களில் குப்பைப் படிந்து கிடப்பதற்கு பதிலாக, அவைகளை வேறு ஏதாவது விமான நிறுவனங்களுக்கு கொடுத்து கொஞ்சமாவது வருவாய் ஈட்ட முயன்று கொண்டிருக்கிறார்கள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிர்வாக தலைமை பொறுப்பில் இருக்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள்.

ஓட்டத்தில் இருக்கும்

ஓட்டத்தில் இருக்கும்

காரணம் வெறுமனே கராஜ்களில் கிடக்கும் விமானங்களுக்கும் நிறைய பராமரிப்புகள் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும். எனவே ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு தன் 16 விமானங்களுக்கான பராமரிப்பு செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் மற்ற விமான சேவை நிறுவனங்களுக்கு பயன்படுத்தக் கொடுக்கும் போது விமானம் ஓட்டத்திலேயே இருக்கும். இதனால் விமானத்தின் பராமரிப்புச் செலவுகளை எடுத்துச் செல்லும் விமானங்கள் செய்து கொள்வார்கள். அதோடு பயன்படுத்தப்பட்டுக் கொண்டே இருப்பதால், நாளை விற்க வேண்டும் என்றால் கூட உடனடியாக விற்று விடலாம்.

5 விமானம் ப்ளீஸ்

5 விமானம் ப்ளீஸ்

சமீபத்தில் தான் ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், எஸ்பிஐ தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஐந்து விமானங்களை குத்தகைக்கு எடுத்துக் கொள்வதாக சொல்லி இருந்தார். அப்படி குத்தகைக்கு எடுக்கும் விமானங்கள் ஏர் இந்தியாவின் லண்டன் துபாய் மற்றும் சிங்கப்பூர் வழித்தடங்களில் இயங்கும் எனவும் சொல்லி இருந்தார்.

மற்ற சொத்துக்கள்

மற்ற சொத்துக்கள்

இப்படி ஜெட் ஏர்வேஸ் நிறுவன சொத்துக்களான தன் சொந்த விமானங்கள், விமான நிலையங்களில் ஒதுக்கப்பட்டிருக்கும் ஸ்லாட்டுகள், வங்கிக் கணக்குகள் மற்றும் விமான நிலையத்தை பயன்படுத்தும் உரிமங்கள் என எல்லாவற்றையும் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் பாதுகாக்கவும், அதை பணமாக்கவும் பல்வேறு அதிகாரிகளிடம் பேசி வருகிறார்களாம். சமீபத்தில்தான் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் மேலும் முதலீடு செய்ய அல்லது மேற்கொண்டு கடன் கொடுக்க எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் மறுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sbi led jet airways management committee is trying to protect and monetize jet airways assets

sbi led jet airways management committee is trying to protect and monetize jet airways assets
Story first published: Saturday, April 20, 2019, 14:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X