வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள்..ஒரே அவசர உதவி எண் 112.. ஒருங்கிணைக்கப்பட்ட சேவை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சமீபத்தில் நடந்துவரும் கொலை கொள்ளை பணம் பறிப்பு, குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளூக்கு தீர்வுகாண இந்தியாவின் அவசர அழைப்பு எண்ணாக 112 அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

 

இந்தியாவின் அவசர அழைப்பு எண் 112 சேவையில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட 20 மாநிலங்கள் இதுவரை இணைந்துள்ளன. இது ஒருங்கிணைக்கப்பட்ட சேவையாக செயல்படும் என இந்த துறை அறிவித்துள்ளது.

தனிநபர் ஒருவருக்கோ அல்லது வேறு யாரேனும் ஒருத்தருக்கோ அவசர சேவை தேவைப்படும்போது 112 என்ற எண்ணை அழைக்கலாம். இதன் மூலம் போலீசுக்கு 100 என்றும் , தீயணைப்புக்கு 101 மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கு 1090 ஆகிய சேவைகள் இதன் மூலம் வழங்கப்படுகின்றன. இது மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் இந்த சேவை செயல்படுத்தப்பட இருக்கிறது.

வர்த்தகர்களுக்கு ரூ.50 லட்சம் வரை பிணை இல்லா கடன் தருவோம்... தங்கம் விளையும் பூமியாக மாற்றுவோம்-மோடி

அமெரிக்காவில் இதே போல் தான்!

அமெரிக்காவில் இதே போல் தான்!

இந்தியாவில் மட்டும் இல்லைங்க, அமெரிக்காவில் இதே போன்ற சேவை ஏற்கனவே இருந்து வருகிறது. அதில் 911 என்ற அவசர அழைப்பு எண் நடைமுறையில் உள்ளது. அதுபோன்று இந்தியாவில் இந்த ஒரே எண் கொண்ட இந்த சேவை அமல்படுத்தப்படுகிறது.

20 மாநிலங்களில் அமல்படுத்தப்படும்

20 மாநிலங்களில் அமல்படுத்தப்படும்

இதுகுறித்து இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இமாச்சல பிரதேசம், அருணாசல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு, குஜராத், புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான நிகோபர் தீவுகள், தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் டையு, ஜம்மு காஷ்மீர் மற்றும் நாகலாந்து உள்ளிட்டவை அவசர அழைப்பு எண் 112-ல் இணைந்துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜிபிஎஸ் வசதியும் உண்டாமே
 

ஜிபிஎஸ் வசதியும் உண்டாமே

இதில் அப்படியென்ன வசதி என் கிறீர்களா? ஜி.பி.எஸ். வசதி கொண்ட ஸ்மார்ட் போனிலிருந்து ஒருவர் அழைக்கும்போது, ஜிபிஎஸ்-ஐ ஆன் செய்திருந்தால் அவர் எங்கே இருக்கிறார் என்பதை சேவை மையத்தில் உள்ளவர்களால் அறிந்து கொள்ள முடியும். இதை வைத்து அவர்களுக்கு விரைவில் உதவி கிடைக்கும்.

நிதியும் ஒதுக்கியாச்சு

நிதியும் ஒதுக்கியாச்சு

தற்போது இந்த சேவைக்காக மொத்தம் 321.69 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 278.66 கோடி ரூபாய் விடுவித்துள்ளதாகவும் சேவை வட்டாரங்கள் கூறுகின்றன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் டெல்லியில் கடந்த 2012ல் நடந்த கொடூர சம்பவம் காரணமாகவே இந்த அறிவிப்பு வந்ததாகவும், தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நன்மைகள் கிடைத்தால் நன்றே

நன்மைகள் கிடைத்தால் நன்றே

இது குறித்து சமூக ஆர்வலர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த போது அவர்கள் இந்த அறிவிப்பு முன்னரே ஏற்படுத்தப்பட்ட ஒன்றுதான். அரசின் மெத்தனத்தினால் இன்று வரை செயல்படுத்தபடாமலேயே இருக்கிறது. தொழில் நுட்பங்கள் வளர்ந்து வந்தாலும் அது மக்களூக்கு உதவும் வகையில் சில விஷயங்களை அரசு கொண்டு வருவது நன்மையே என்றாலும், இது போன்ற அத்தியாவசிய தேவைகளை அமல்படுத்த முடியாவிட்டால், நாளை அவசர தேவைக்கென மக்கள் போன் செய்யும் போதோ அல்லது உதவி எதிர்பார்க்கும் போதோ எப்படி உதவி செய்யும். இது அரசின் அலட்சியமா இல்லை, இல்லை இடைப்பட்டவர்களீன் அலட்சியமா என்று தெரியவில்லை. எனினும் நல்ல விஷயங்கள் எளிதில் மக்களுக்கு கிடைத்தால் நன்மையே என் கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamilnadu also joined joined pan-India single emergency helpline number '112' with 20 states

Twenty states and Union territories have so far joined a pan-India network of single emergency helpline number '112' on which immediate assistance can be sought by anyone in distress.
Story first published: Saturday, April 20, 2019, 13:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X