ஏன் மக்கள் வரிப்பணத்தை வீணாக்குகீறார்கள்..ஏன் வங்கி தேவையில்லாமல் செலவு செய்கிறது..விஜய் மல்லையா

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லண்டன் : வங்கிகளில் கடன் வாங்கி விட்டு கட்ட முடியாமல் லண்டனுக்கு தப்பிச் சென்ற மதுபான வியாபாரி விஜய் மல்லையா , நான் தான் பணம் கட்ட ரெடியாக உள்ளேனே. ஆனாலும் ஏன் என்னை தேடும் முயற்சியில் ஈடுபட்டு மக்களின் வரிப்பணத்தை வீணாக்குகிறது எஸ்.பி.ஐ வங்கி என கேள்வியெழுப்பியுள்ளார்.

 

இதுகுறித்து அவர் ட்விட்டரில் பல பதிவுகளிய வெளியிட்டுள்ளார். அதில் நான் குற்றவாளி இல்லை. என் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தவறானவை என தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் வாங்கிய கடனை கட்டாமல் 9,000 கோடி ரூபாய் கடனை பெற்று திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இந்த நிலையில் டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் பொதுத்துறை வங்கிகளின் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்ட குற்றவாளி என அரசியல்வாதிகளும், மீடியாக்களும் உரத்த குரலில் கூறுகின்றனர்.

பிட்காயின் டிரேடருக்கு இப்படியொரு தண்டனையா..கடலுக்குள் வீடா.. இதுக்கு மரண தண்டனையா பிட்காயின் டிரேடருக்கு இப்படியொரு தண்டனையா..கடலுக்குள் வீடா.. இதுக்கு மரண தண்டனையா

நீதிமன்றம் என் பணத்தை மறந்து விட்டது

நீதிமன்றம் என் பணத்தை மறந்து விட்டது

மல்லையாவின் பிரிட்டன் வங்கிக் கணக்கில் உள்ள 2,60,000 பவுண்டுகள் பணத்தின் மீதான முடக்கத்தை நீக்க அந்த நாட்டு உயர் நீதி மன்றம் மறந்து விட்டதாகவும் கூறியுள்ளார். மேலு,ம் லண்டனில் வழக்கு நடத்துவதற்காக எஸ்.பி.ஐ வங்கி தேவையில்லாமல் செலவு செய்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடனை  கட்ட ஒப்புக் கொண்டேனே

கடனை கட்ட ஒப்புக் கொண்டேனே

இவை அனைத்தும் தவறானவை. கடன் தொகையை செலுத்த நான் கர்நாடக ஐகோர்ட் முன் ஒப்புக் கொண்ட பிறகும் என்னை நேர்மையான முறையில் நடத்த மறுப்பது வேதனை அளிக்கிறது என்றும் பதிவிட்டுள்ளார். இதோடு நரேந்திர மோடி இதுகுறித்து ஒரு கூட்டத்தில் கடனை வாங்கி விட்டு ஒடி விட்டவர் என கூறியிருப்பது என்னையே. அதுவும் தெரியும், நான் கடனை வாங்கி விட்டு ஒட வில்லை. நான் தொழிலபதிபர். பணத்தை கட்ட மறுத்தால் தானே இதை நீங்கள் கேட்க வேண்டும். தொழில் நிமித்தமாக நான் பல ஊர்களுக்கு செல்பவன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலையேற்றத்தின் காரணமாக நஷ்டம்
 

எரிபொருள் விலையேற்றத்தின் காரணமாக நஷ்டம்

அதோடு விமான எரிபொருள் விலை ஏற்றத்தின் காரணமாகவே எனது விமான நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது. மேலும் கச்சா எண்ணெய் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு பேரல் 140 அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்ந்ததால் கிங்பிஷர் விமான நிறுவனம் பிரச்னையை எதிர்கொள்ள நேரிட்டது. இதனால் நஷ்டம் அதிகமானதையடுத்து வங்கியில் கடன் பெற வேண்டி வந்தது. அதோடு நானும் அசல் தொகையில் 100 சதவிகிதத்தை திரும்பச் செலுத்த தயாராக உள்ளேன்.

கோடி கணக்கான  வரியை செலுத்தியும் உள்ளேன்

கோடி கணக்கான வரியை செலுத்தியும் உள்ளேன்

அதிலும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் மிகப் பெரிய மதுபான ஆலை குழுமத்தை நடத்தி வந்துள்ளேன். அதற்காக மாநில அரசுகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை வரிகளை அளித்துள்ளேன். கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் மாநிலங்களில் நல்லதொரு வருவாயை தந்துள்ளன. ஆனால் துரதிஷ்டவசமாக விமான நிறுவனம் நஷ்டத்தை எதிர்கொண்டது. இருப்பினும் தற்போதும் வங்கிகளுக்கு பணத்தை செலுத்த தயாராக உள்ளேன். அதனால் நஷ்டம் என்பது இல்லை. ஆனால் வங்கிகள் அவற்றை ஏற்க மறுக்கின்றன.

மக்கள் பணத்தை வீணடிப்பது ஏன்?

மக்கள் பணத்தை வீணடிப்பது ஏன்?

என்னை வேகமாக இந்தியா அழைத்து வர மட்டுமே முனைப்பு காட்டுகின்றன. அது தனியாக சட்ட பிரச்னை. ஆனால் இதில் மிக முக்கியமானது மக்கள் பணம் தான். அதனை நான் 100 சதவிகிதம் திரும்பத் தருவதாக கூறுகிறேன். இருப்பினும் வங்கிகளும், அரசும் அதனை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுகிறேன். நான் திரும்ப தரும் தொகையை ஏற்ற மறுப்பது ஏன்? என பலமுறை கேள்வி எழுப்பியும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மல்லையாவுக்கு எதிராக போர்கொடி

மல்லையாவுக்கு எதிராக போர்கொடி

ஐடிபிஐ வங்கி, இந்திய வெளிநாட்டு வங்கி, ஜம்மு & காஷ்மீர் வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், யுகோ வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் எஸ்பிஐ வங்கி, ஜே.எம் பைனான்சியல் அசெட் நிறுவனம், முன்னாள் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸின் முதலாளிகளால் ஆகிய அனைவரும் மல்லயாவுக்கு எதிராக போர்க்கொடி துக்கியுள்ளது ஏற்கனவே அறிந்த விஷயமாக இருந்தாலும், இந்த வழக்கு இந்த ஆண்டு டிசம்பரில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vijay Mallya Accuses SBI Of Wasting Indian Taxpayers' Money

Embattled liquor tycoon Vijay Mallya once again used social media to reiterate his offer to pay back the debt owed to public sector banks in India, targeting this time the State Bank of India for allegedly wasting Indian taxpayers' money on expensive legal fees in the UK.
Story first published: Sunday, April 21, 2019, 19:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X