ஜெட் ஏர்வேஸ்சின் பங்கு விலை 14% தொடர் வீழ்ச்சி ..குழப்பத்தில் பங்குகளை விற்கும் டிரேடர்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனை காரணமாக அந்த நிறுவனத்தின் விமான சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பங்கு சந்தையிலும் அதன் எதிரொலி காணப்படுகிறது. அதிலும் பங்குதாரர்கள், டிரேடர்கள் இனி ஜெட் ஏர்வேஸ் இயங்குமா? இல்லையா? வங்கிகளும் கடன் மறுத்த நிலையில் குழப்பமே நிலவி வருகிறது. இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று (22ஏபரல் 2019. 10.25) இந்திய பங்கு சந்தையில் ஜெட் ஏர்வேஸ்ஸின் பங்கின் விலை 14 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

 

அதுவும் இந்திய பங்கு சந்தைகளான என்.எஸ்.சி மற்றும் பி.எஸ்.இ ஆகிய இரு சந்தைகளிலும் வீழ்ச்சியடைந்து வருகிறது. தற்போதைய சூழலில் பங்கின் விலை 14 சதவிகிதம் வீழ்ச்சியடைந்து 141 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

இது குறித்து முதலீட்டாளர்கள் மத்தியில் கேட்ட போது, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடன் பிரச்சனையால் மூடப்பட்டிருந்தாலும் இதுவரை சரியான தீர்வு கண்டுபிடிக்க பட வில்லை. இந்த நிலையில் டிரேடர்களும் , முதலீட்டாளர்களும் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸில் முதலீடு செய்வதை தவிர்த்து வருகின்றனர்.

திட்டமிடப்பட்ட சதியே..ஜெட் ஏர்வேஸ் மூடப்பட்டதில் ஊழல் இருக்கு.. காங்கிரஸ்ஸின் ஆனந்த் சர்மா ஆவேசம்

கையில் இருக்கு பங்குகளை விற்று வருகிறது

கையில் இருக்கு பங்குகளை விற்று வருகிறது

அதேசமயம் தங்களது கையில் இருக்கும் பங்குகளையும் விற்று வருகிறனர். இதன் காரணமாக ஜெட் ஏர்வேஸ் பங்கின் விலை தொடர்ந்து விலை சரிந்து கொண்டெ காணப்படுகிறது. வாராத்தின் முதல் நாளான இன்று காலை முதலே இந்த பங்கின் விலை சரியத் தொடங்கியது. தற்போதைய நிலையில் 14 சதவிகிதம் குறைந்தே காணப்படுகிறது.

ஜெட் ஏர்வேஸ்சை கைவிட்ட வங்கிகள்

ஜெட் ஏர்வேஸ்சை கைவிட்ட வங்கிகள்

வங்கிகளும் கைவிரித்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் அருண் ஜெட்லி சந்தித்து பேசினர். ஆனால் இதுவரை எதுவும் சுமூக முடிவு எட்டபடாத நிலையில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் பல் வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கு அழைக்கப்படுவதும், வேலைக்கு சென்றிருப்பதும் இப்போதைக்கு இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை என்ற நெகட்டிவ் எண்ணத்தை டிரேடர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.

ஏன் ஊழியர்கள் வேறு வேலை  தேடி அலைகிறார்கள்
 

ஏன் ஊழியர்கள் வேறு வேலை தேடி அலைகிறார்கள்

ஏனெனில் ஏதேனும் ஒரு சுமூக நிலை உருவாகும் எனில் ஊழியர்கள் வேறு வேலை தேடன் வேண்டிய அவசியமும் இருந்திருக்காது. இதனால் அவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவது கண்கூட பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயமாகவே உள்ளது. இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நஷ்டம் அடைந்ததில் ஊழல் நடை பெற்றுள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதி மன்றம் தலையிட்டு வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறியுள்ளது இன்னும் வர்த்தகர்கள் மத்தியில் சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.

நிறுவனத்தின் பங்கும் அப்படிதானே

நிறுவனத்தின் பங்கும் அப்படிதானே

மேலும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஏற்கனவே வாங்கியிருந்த 8500 கோடி ரூபாய் கடன் சுமையில் சரிவர கட்ட முடியாமல் தவித்து வருகிறது. இந்த நிலையில் பங்கின் விலை மட்டும் எப்படி அதிகரிக்கும். ஜெட் ஏர்வேஸ் நிறுவனமே இருக்குமா இருக்காதா? மீண்டும் இயங்குமா? இயங்காதா? என்ற குழப்பமே நீடித்து வருகிறது. இந்த நிலையில் இந்த பங்கின் விலை தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

குழப்பத்தில் பங்குகளை விற்கும் முதலீட்டாளர்கள்

குழப்பத்தில் பங்குகளை விற்கும் முதலீட்டாளர்கள்

மேலும் முதலீட்டாளர்கள் இது போன்ற குழப்பத்தினாலேயே தங்களது பங்குகளை விற்று வருகின்றனர். வங்கிகளும் மீண்டும் கடன் கொடுக்க மறுத்துவிட்டதால் ஜெட் ஏர்வேஸ்சுக்கு இருந்த கடைசி நம்பிக்கையும் போய்விட்டது. அதேசமயம் மத்திய அரசும் சரியாக கண்டு கொள்வதாக தெரியவில்லை. இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வேறு வழியின்றி தனது சேவையை முழுமையாக நிறுத்தியே விட்டது.

அரசு நினைத்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம்

அரசு நினைத்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம்

இது குறித்து காங்கிரஸின் மூத்த தலைவர் கூறுகையில் மத்திய அரசு நினைத்திருந்தால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை காப்பாற்றி இருக்க முடியும். இதைவிட அதிகமான கடன் சுமையுடன் இருந்த 30,000 - 40,000 கோடி கடன் சுமையில் இருந்த வேறு பல நிறுவனங்களை மத்திய அரசு காப்பாற்றியுள்ளது. அந்த தொகையோடு ஒப்பிடும் போது இது மிக சிறிய தொகையே ஆகும். ஆனால் ஏன் காப்பாற்ற வில்லை. ஆக இதில் ஏதோ பிரச்சனை உள்ளது என்பது மட்டும் தெரிகிறது என் கிறார்கள் ஆர்வலர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jet Airways shares continuesly fall 14%, now in Rs.141

Jet Airways tottal operations now shut down, making it the fall in market. also, according to industry experts, ineligible to fly on jet airways.
Story first published: Monday, April 22, 2019, 11:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X