டெல்லி: ஜெட் ஏர்வேஸ் கடன் பிரச்சனை காரணமாக பல்வேறு பிரச்சனிகளில் தவித்து வருகிறது. இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நஷ்டம் அடைந்ததில் ஊழல் நடை பெற்றுள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதி மன்றம் தலையிட்டு வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த 25 வருடங்களாக விமான சேவையில் ஈடுபட்டு வந்தது. ஆனால் கடந்த வாரம் நிதி நெருக்கடி காரணமாக தனது விமான சேவை முழுமையாக நீறுத்தியது. இதன் காரணமாக பல்லாயிரம் பேர் வேலை இழந்து தவித்து சூழ்னிலையை அனைவரும் அறிந்த ஒரு விஷயமே என்றார்,
மேலும் இது குறித்து செய்திக்குறிப்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் , கடன் சுமையாலும் வருவாய் இழப்பாலும் நிதி நெருக்கடியில் தவித்து வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அவசர கால கடனுதவியாக பாரத ஸ்டேட் பேங்கின் தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பிடம் 400 கோடி ரூபாய் கடன் கேட்டது.
கடனுக்காக விமான சேவை நிறுத்தப்பட்டதா?
ஆனால் ஏற்கனவே வாங்கியிருந்த 8500 கோடி ரூபாய் கடன் சுமையில் சரிவர கட்ட முடியாமல் தவித்த இந்த நிறுவனத்தீற்கு வங்கிகள் மீண்டும் கடன் கொடுக்க மறுத்துவிட்டன. இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வேறு வழியின்றி தனது சேவையை முழுமையாக நிறுத்துவதாக அறிவித்தது. இந்த நிலையில் நிறுவனமும் ஊழியர்களும் வேலையை இழந்து தவித்து வருகின்றனர்.
மத்திய அரசு காப்பாற்றி இருக்கலாம்
மத்திய அரசு நினைத்திருந்தால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை காப்பாற்றி இருக்க முடியும். இதைவிட அதிகமான கடன் சுமையுடன் இருந்த 30,000 - 40,000 கோடி கடன் சுமையில் இருந்த வேறு பல நிறுவனங்களை மத்திய அரசு காப்பாற்றியுள்ளது. அந்த தொகையோடு ஒப்பிடும் போது இது மிக சிறிய தொகையே ஆகும். ஆக இதில் ஏதோ ஊழல் இருக்கிறது. இதை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
வங்கிகள் உறுதி அளித்தன
இதோடு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தையும் அதில் வேலை செய்த ஊழியர்களையும் காப்பாற்றுவதாக வங்கிகள் கூட்டமைப்பு உறுதியளித்தது. ஆனால் அந்த வாக்குறுதிப்படி வங்கிகள் செயல் படத் தவறி விட்டன. இந்த ஆயிரக்கணக்கானேரின் வேலையிழப்புக்கு வங்கி கூட்டமைப்பும் ஒரு காரணமாகும். மேலும் அந்த நிறுவனத்தின் பதிவு ரத்து செய்யப்பட்டு மீண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளன.
ஜெட் ஏர்வேஸ் மதிப்பை குறைக்கவே
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மதிப்பை குறைக்கவே இதன் பதிவு ரத்து செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அதே போல ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கடனில் தத்தளித்த நிலையில் மூடப்பட்டதாக தெரியவில்லை. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மூடப்பட்டதில் ஏதோ ஊழல் நடந்துள்ளது தெரிகிறது.
தேர்தல் நேரத்தில் யாரும் கேட்க மாட்டார்கள்
ஜெட் ஏர்வேஸ்ஸின் இந்த ஊழல் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் தேர்தல் நேரம் என்பதால் யாரும் தலையிட மாட்டார்கள் என்பதை அறிந்தே இந்த முறைகேடான சம்பவம் அறங்கேறியுள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் உச்ச நீதி மன்றம் தலையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications