டெல்லி: கடந்த செப்டம்பர் 2016-ல் இந்தியாவில் களம் இறங்கிய ஜியோ, தன் போட்டியாளர்களான பார்தி ஏர்டெல், வோடாஃபோன், ஐடியா என அனைத்து நிறுவனங்களையும் பந்தாடி விட்டது. வோடாஃபோன் ஐடியா இணைவதற்கு முக்கிய காரணமே ஜியோவின் வரவு தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இந்திய டெலிகாம் வாடிக்கையாளர்களுக்கு அத்தனை இலவசங்கள், மலிவு விலைத் திட்டங்கள் எல்லாம் கொடுத்த பின், தற்போது சுமார் 28 கோடி வாடிக்கையாளர்களை தன் வசம் வைத்திருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ.
இந்தியாவில் டேட்டா கலாசரத்தை உருவாக்கி விட்ட, அதே ஜியோ நிறுவனம் தான் இந்தியாவில் அதிவேக டேட்டா சேவை வழங்குவதில் நம்பர் 1-ஆக இருப்பதாகச் சொல்கிறது ட்ராய் அறிக்கைகள்.
முதலிடம் ஜியோ
இந்தியாவில் அதிவேக டேட்டா சேவையை வழங்கும் நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் இருக்கிறதாம். இது மார்ச் 2019 நிலவரமாம். இந்த விவரத்தை இந்திய டெலிகாம் சந்தையை நிர்வகிக்கும் டிராய் Telecom Regulatory Authority of India (TRAI)அமைப்பின் அறிக்கைகள் உறுதி செய்கின்றன. இந்த மார்ச் 2019-ல் மேற் கொண்ட சோதனைகளில் ரிலையன்ஸ் ஜியோவின் சேவைகள் மூலம் ஒரு நொடியில் 22.2 எம் பி டேட்டா தரவிறக்கம் செய்ய முடிந்ததாம்.
2018 முழுவதும்
இதற்கு முன்பு பிப்ரவரி 2019-ல் மேற் கொண்ட சோதனைகளில் ரிலையன்ஸ் ஜியோவின் சேவை மூலம் நொடிக்கு 20.9 எம் பி டேட்டா தரவிறக்கம் செய்ய முடிந்ததாம். கடந்த 2018 முழு ஆண்டிலும் ரிலையன்ஸ் ஜியோ தான் இந்தியாவிலேயே அதிகவேகம் டேட்டா சேவையை வழங்கி இருப்பதாகவும் சொல்கிறது ட்ராய் Telecom Regulatory Authority of India (TRAI) அறிக்கை.
அடுத்த இரண்டு இடங்கள்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் போட்டியாளர்களான பார்தி ஏர்டெல் மார்ச் 2019-ல் நடத்திய சோதனையில் ஒரு நொடிக்கு 9.3 எம் பி டேட்டாக்களை மட்டுமே தரவிறக்கம் செய்ய முடிந்ததாம். அதனால் இவர்களுக்கு இரண்டாவது இடம். அவர்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில், வோடாஃபோன் நிறுவனத்தின் சேவைகள் மூலம் ஒரு நொடிக்கு 7 எம் பி டேட்டாக்களை தரவிறக்கம் செய்ய முடிந்ததாம்.
அப்லோடில்
பதிவிறக்கத்தில் (Download) முன்னனியில் இருக்கும் ஜியோ நிறுவனம், பதிவேற்றத்தில் (Upload) மூன்றாவது இடத்தில் இருக்கிறதாம். முதலிடத்தில் ஒரு நொடிக்கு 6 எம் பி டேட்டாக்களை பதிவேற்றம் செய்து வோடாஃபோன் முதலிடத்தில் இருக்கிறது. அதன் பின் ஐடியா ஒரு நொடிக்கு 5.5 எம் பி டேட்டாக்களை பதிவேற்றம் செய்து இரண்டாம் இடத்திலும், ஒரு நொடிக்கு 4.6 எம் பி டேட்டாக்களை பதிவேற்றம் செய்து ஜியோ மூன்றாவது இடத்திலும் இருக்கிறதாம்.
உத்தரவு
என்னத்தையாவது செய்து ஜியோ அடுத்த சில மாதங்களில் வோடாஃபோனை அப்லோட் வேகத்திலும் பின்னுக்குத் தள்ள வேண்டும். ஜியோ அப்லோடிலும் முதலிடத்தில் இருக்க வேண்டும் என கொந்தளிப்பிலேயே உத்தரவு போட்டிருக்கிறாராம் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி. இந்தியாவிலேயே எந்த நிறுவனம் அதிவேக இணைய சேவையைக் கொடுக்கிறது என்கிற சோதனைக்கான தரவுகளை, ட்ராய் அமைப்பு MySpeed என்கிற செயலி மூலம் திரட்டி இருக்கிறார்களாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications