இந்தியாவுக்கு பொருளாதார தடையா..எண்ணெய் இறக்குமதி தடை செய்தால்..விலை பறக்குமே குழப்பத்தில் இந்தியா

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன் : அமெரிக்காவின் பொருளாதார தடையை எதிர்கொண்டுள்ள ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் மீதும் அமெரிக்கா பொருளாதார தடையை விதிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

இந்த நிலையில் இந்தியாவோடு, ஜப்பான் தென் கொரியா, துருக்கி, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கும் அமெரிக்காவின் பொருளாதார தடை எதிர்கொள்ளும் சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதில் கவனிக்க வேண்டிய வஷயம் என்னவெனில் ஜப்பானும் தென் கொரியாவும் அமெரிக்காவுக்கு மிக நெருங்கிய நட்பு நாடுகளாகும்.

அமெரிக்கா கடந்த ஆண்டும் ஈரான் மீது பொருளாதார தடையை விதித்தது. அதேசமயம் தனது நட்பு நாடுகள் எதுவும் ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது என்றும், ஏற்கனவே மேற்கொண்டு வந்த எண்ணெய் வர்த்தகத்தை முழுமையாக நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

LVB -Indiabulls ஒப்புதல் கிடைக்குமா .. மற்ற வங்கிகளின் கடனிலும் கவனம் செலுத்தப்படும்LVB -Indiabulls ஒப்புதல் கிடைக்குமா .. மற்ற வங்கிகளின் கடனிலும் கவனம் செலுத்தப்படும்

வர்த்தகத்தை தொடர்ந்தால் பொருளாதார தடை

வர்த்தகத்தை தொடர்ந்தால் பொருளாதார தடை

மேலும் இவ்வாறு வர்த்தகத்தை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், அதாவது இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீதும் அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என்றும் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து கொண்டிருந்த நிலையில் இந்த பொருளாதார தடையை விதிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவின் நிலை என்னவாவது?

இந்தியாவின் நிலை என்னவாவது?

ஏற்கனவே இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர் ஏற்றத்தைக் கண்டு வருவது பிரச்சனையை சந்தித்து வரும் நிலையில், ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யாவிட்டால், இந்தியாவின் நிலை என்ன வாகும் என்று கூட நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை
 

அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை

அதேசமயம் ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி கைவிடவும் முடியாது என்று இந்தியா அறிவித்தும் உள்ளது, மேலும் எப்போதும் போல வழக்கமாக எண்ணெய் இறக்குமதி தொடரும் என்றும் இந்தியா அறிவித்தது. அதே சமயம் அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளது.

மோசமன நிபந்தனை

மோசமன நிபந்தனை

இதே நேரத்தில் சீனா ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் அமெரிக்காவின் இந்த மோசமான நிபந்தனையை ஏற்க முடியாது என்றும் கூறிவிட்டன. இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு ஆறு மாதங்களுக்கு விலக்கு அளிப்பாதாகக் அமெரிக்கா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விலக்கு அறிவித்தது.

மே-3வுடன் முடியும் கெடு

மே-3வுடன் முடியும் கெடு

இந்த நிலையில் இந்த காலக்கெடு மே-3-ம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து, இந்த விலக்கில் மாற்றம் இருக்கலாம் எண்றும், இந்த விஷயத்தில் அமெரிககா என்ன முடிவு எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்புகள் இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளில் நிலவி வருகிறது.

இந்த தடைக்கு ட்ரம்பும் ஆதரவு தெரிவிக்கலாம்

இந்த தடைக்கு ட்ரம்பும் ஆதரவு தெரிவிக்கலாம்

இது குறித்து அந்த நாட்டு வெளி நாட்டு அமைச்சக வட்டாரங்கள் மேற்கோள் காட்டி செய்தி நிறுவனங்கள் கூறியுள்ள அறிக்கையில், ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் , இந்தியா தென் கொரியா, ஜப்பான், சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா அளித்த தடை மேலும் தொடர வாய்ப்பில்லை. மே-3க்கு மேல் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்தால், இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கும் என்றும், இது குறித்த தகவலை அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் மைக் வெளியிடுவார் என்றும், இதற்கு ஒப்புதல் அளிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெட் ரோல்- டீசல் விலை தாறுமாறாக இருக்கும்

பெட் ரோல்- டீசல் விலை தாறுமாறாக இருக்கும்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வந்த நாடுகளான இத்தாலி கீரிஸ் தைவான் உள்ளிட்ட நாடுகள் இறக்குமதியை நிறுத்தி விட்டன. இந்த நிலையில் இந்தியாவும் கச்சா எண்ணெய் இறக்குமதி நிறுத்தி விட்டால், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தாறுமாறாக அதிகரிக்கும் என்றும், ஆனால் இந்த நிலையில் இந்தியா எப்படி சமாளிக்க போகிறது என்றும் தெரியவில்லை என் கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்.

எண்ணெய் இறக்குமதியில் இந்தியா முக்கிய இடம்

எண்ணெய் இறக்குமதியில் இந்தியா முக்கிய இடம்

உலக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா முக்கிய இடத்தை வகிப்பது அனைவரும் அறிந்ததே என்றாலும், கடந்த 2017 -2018 -ம் நிதியாண்டில் மட்டும் 5.9 லட்சம் கோடி மதிப்பினால் ஆன கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா செய்திருப்பாதாகக் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தியா அரபு நாடுகளையே சார்ந்துள்ளது.

இந்தியா அரபு நாடுகளையே சார்ந்துள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் பெட் ரோல் தேவைக்கு அரபு நாடுகளை சார்ந்து இந்தியா உள்ளது. இதில் குறிப்பாக ஈரானிமிருந்தே அதிக அளவு எண்ணெய் இறக்குமதி செய்வது கவனிக்க வேண்டிய விஷயமாகும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன்வெனில் ஆண்டுக்கு சுமார் 1.5 கோடி டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக தகவல்கள் மூலம் தெரிகிறது.

அமெரிக்காவுக்கு தலைவணங்குமா?

அமெரிக்காவுக்கு தலைவணங்குமா?

இந்த நிலையில் இந்தியா அமெரிக்காவுடனான உறவுக்கு தலைவணங்குமா இல்லை, இந்தியா மக்களின் வாழ்வாதரத்தை பாதிக்கும் காரணிகளை மேற் கொள்ளுமா என்ற பெரிய குழப்பமான நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் அதிகரிக்கும் பெட் ரோல் டீசல் விலையை நினைத்தால் என்ன நடக்க போகுமோ தெரியவில்லை. எனினும், இந்திய மக்களின் நிலையை கருத்தில் கொண்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

விலையை நினைத்தால் பயமாய் உள்ளது

விலையை நினைத்தால் பயமாய் உள்ளது

ஏற்கனவே தாறுமாறாக ஏறிக் கொண்டிருக்கும் பெட் ரோல் டீசல் விலைகள் , இதுபோன்ற அறிக்கைகள் வெளியானால் நினைத்து பார்க்கவே பயமாய் இருக்கிறது. எண்ணெய் நிறுவனங்களுக்கு வேறு காரணமே தேவையில்லை. ஏறப்போகும் விலையை நினைத்தால் பயமாகவே உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: imports oil
English summary

us will not reissue waivers for iran oil imports

us president donald trump has decided not to reissue waivers in may to irans buyrs
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X