மாதம் ரூ.600-க்கு unlimited free call, 600 channels, 100 GD Data..! Reliace Jio அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: Reliace Jio நிறுவனம் மாதம் 600 ரூபாய் முதல் 1000 ரூபாய் விலைக்குள் லேண்ட் லைன் தொலைபேசி இணைப்பு, ப்ராட்பேண்ட் சேவை மற்றும் கேபிள் டிவி வசதி என மூன்று சேவைகளையும் ஒன்றாகக் கொடுக்கப் போகிறதாம்.

 

இதில் தேர்ந்தெடுக்கும் சேவைகளுக்கு தகுந்தாற் போல கட்டணம் நிர்ணயிக்கப்பட இருக்கிறதாம். மேற்கொண்டு வீட்டில் உள்ள 40-க்கும் மேற்பட்ட சாதானங்களை Reliace Jio-வின் ஜிகா ஃபைபர் ரவுட்டரில் இணைத்துக் கொள்ளும் விதத்திலும் சில வசதிகளையும் கொண்டு வரப் போகிறார்களாம்.

இந்த செய்திகள் இன்னும் முழுமையாகவோ, அதிகார பூர்வமாகவோ வெளியாகவில்லை. ஆனால் ரிலையன்ஸ் வட்டாரத்தில் இருந்து தான் இந்த செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இந்திய சிறு நகரங்களை குறிவைக்கும் Amazon..! 60 டயர் 2 மற்றும் 3 நகரங்களில் சேவை வழங்க போகிறதாம்..!

டெல்லி மும்பை

டெல்லி மும்பை

தற்போது Reliace Jio நிறுவனம் தன்னுடைய ஜிகா பைபர் (Giga fibre) திட்டத்தை டெல்லி மற்றும் மும்பை போன்ற பெரு நகரத்தில் மட்டுமே சோதனை செய்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 100 ஜிபி டேட்டாவை குறைந்தபட்சம் 100 எம்பிபிஎஸ் முதல் அதிகபட்சம் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் இலவசமாக கொடுத்து வருகிறது ஜியோ. ஆனால் முதல் மற்றும் கடைசி செலவாக 4,500 ரூபாய் செலவழித்து ஒரு ரவுட்டரை மட்டும் வாங்கி வைத்தால் போதும். இந்த ரவுட்டரை ONT (Optical Network Terminal) மூலம் இயங்குவதாம். இந்த ஒரு ரவுட்டரால் 40 - 45 ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் டிவிக்கள், லேப்டாப்கள், டேப்லட்டுகள் என பல சாதனங்களோடு இணைத்துக் கொள்ள முடியுமாம்.

டிவி

டிவி

அடுத்த சில மாதங்களில் டெல்லி மற்றும் மும்பை பகுதிகளில் (சோதனைப் பகுதிகளில்) இந்த ரவுட்டரிலேயே டிவி சேனல்களும், லேண்ட் லைன் இணைப்புகளையும் வழங்க இருக்கிறார்களாம். அதுவும் இலவசமாகத் தான் வழங்க இருக்கிறார்களாம். இந்த மூன்று சேவையும் அடுத்த ஒரு வருடத்துக்கு இலவசமாகவே கொடுத்து வரும் பிரச்னைகளைக் கண்டறிந்து சரி செய்யப் போவதாகச் சொல்கிறது Reliace Jio.

செட் டாப் பாக்ஸ் தேவை இல்லை
 

செட் டாப் பாக்ஸ் தேவை இல்லை

Reliace Jio-வின் ஜிகா ஃபைபர் வந்தால், இனி டிவிக்கு என்று தனி செட்டாப் பாக்ஸ் தேவை இருக்காது. ப்ராட்பேண்டுக்காக வாங்கிய அந்த ஒரு ரவுட்டர் மூலமாக இணையத்தின் வழியாகவே டிவி சேனல்கள் ஒளிபரப்பாகும். Reliace Jio மூலம் டிவியில் 600 சேனல்கள் seven-day catch-up option உடன் வருமாம். கொடுக்கும் லேண்ட் லைன் போனில் எத்தனை கால்கள் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.

மிகப் பெரிய திட்டம்

மிகப் பெரிய திட்டம்

கடந்த ஆண்டில் நடந்த Reliace Jio நிறுவன ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் தான் ஜியோவின் ஜிகா ஃபைபர் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். அதோடு ஃபைபர் ஆப்டிக் கேபிள்களைப் பதித்து, ப்ராட்பேண்ட் சேவைகளை வழங்குவதில் உலகிலேயே ஜியோவின் ஜிகா ஃபைபர் திட்டம் மிகப் பெரிய திட்டம் எனவும் பெருமைப்பட்டார். இந்த டெல்லி மற்றும் மும்பை சோதனைகள் எல்லாம் முடிந்தால் இந்தியாவின் 1,600 நகரங்களில் Reliace Jio-வின் ஜிகா ஃபபர் திட்டம் செயல்படுத்தப்படும் எனச் சொல்லி இருந்தார்கள். அ

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: jio ஜியோ
English summary

100 gb data, 600 channels, unlimited free calls reliance jio is going to give this facility for rs 600 per month

100 gb data, 600 channels, unlimited free calls reliance jio is going to give this facility for rs 600 per month
Story first published: Wednesday, April 24, 2019, 18:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X