பங்குசார்ந்த மியூச்சுவல் பண்ட் பற்றி அதிகரிக்கும் விழிப்புணர்வு - 2018-19ல் ரூ.1,11,858 கோடி முதலீடு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : பொது மக்களுக்கு முதலீடு பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால் கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் பங்குச் சந்தை மற்றும் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் செய்துள்ள முதலீடு ரூ.1,11,858 கோடியாக அதிகரித்துள்ளதாக இந்திய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நிர்வகிக்கும் ஆம்ஃபி அமைப்பு தெரிவித்துள்ளது.

 

இன்னும் 7 ஆண்டுகளில் அதாவது வரும் 2025ஆம் ஆண்டு வாக்கில் மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் மொத்த சொத்துக்களின் மதிப்பானது தற்போது இருப்பதைப் விட சுமார் 4 மடங்கு அதிகரித்து சுமார் 94 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவை எட்டக்கூடும் என்றும் ஆம்ஃபி அமைப்பு தெரிவித்துள்ளது.

எதிர்காலத்திற்கு தேவையான நிதியை எப்படி, எதில், எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பது பற்றிய விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் தான் இது சாத்தியமாகும் என்பது தெரியவந்துள்ளது.

வரி ஏய்ப்பில் நிறுவனங்கள்.. பி&ஜியில் லாபக் கட்டுப்பாட்டு வாரியம் சோதனை..ரூ.250 கோடி வரி ஏய்ப்பு

விழிப்புணர்வு கிடையாது

விழிப்புணர்வு கிடையாது

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் நாட்டின் பெரும்பாலானவரகளுக்கு சேமிப்பு, முதலீடு என்றால் உடனடியாக நினைவுக்கு வருவது அனைத்து வங்கிகளிலும் உள்ள சேமிப்பு கணக்கு, நிலைத்த வைப்பு (Fixed Depoist), தொடர் வைப்பு(Recurring Deposit) இவை மட்டுமே. இவற்றைத் தவிர வேறு வகை முதலீடு பற்றி எந்த விழிப்புணர்வு இருந்ததில்லை.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்

தற்போது நிலைமை அப்படி இல்லை என்பதுதான் உண்மை. முதலீடுகள் பற்றிய விழிப்புணர்வு கூட்டங்களை வங்கிகளும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் தொடர்ச்சியாக நடத்தி வருவதால் மிகப் பெரும் தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாது, பாமர மக்களுக்கும் அதன் தாக்கம் புரியத் தொடங்கி உள்ளது என்றே சொல்லலாம்.

பல மடங்கு லாபம்
 

பல மடங்கு லாபம்

வங்கி டெபாசிட்கள் போல இல்லாமல் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு அதிக அளவில் பணம் தேவையில்லை. குறைந்த பட்சமாக ரூ.500 இருந்தாலே அதைக் கொண்டு நம்முடைய முதலீட்டை தொடங்கலாம் என்பது இதில் உள்ள சாதகமான அம்சமாகும். அதே சமயத்தில் சரியான முதலீட்டை ஆராய்ந்து அதன் பின்பு நம்முடைய முதலீட்டை ஆரம்பித்தால் நம்முடைய பணம் ஒன்றுக்கு பல மடங்காக உயரும் என்பது நிச்சயம். இல்லை என்றால் நம்முடைய பணம் காணாமல் போகவும் அதிக வாய்ப்புண்டு என்பதும் நிதர்சனமான உண்மை.

ஆர்வம் அதிகரிப்பு

ஆர்வம் அதிகரிப்பு

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் உள்ள நன்மை மற்றும் இடர்களை (Risk) கவனமாக ஆராய்ந்து அதற்கேற்ப மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதால் கிடைக்கும் லாபம் வங்கி டெபாசிட்களுக்கு கிடைக்கும் வட்டியை விட பல மடங்கு கூடுதலாக உள்ளது என்ற உண்மை, பாமர மக்களையும், நடுத்தர வர்கத்தினரையும் வாய்பிளக்க வைத்துள்ளது. இதன் காரணமாகவே நாளுக்கு நாள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது அதிகரித்த வண்ணம் உள்ளது.

நம் முதலீடு எங்கே போகிறது

நம் முதலீடு எங்கே போகிறது

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை தற்போது அனைத்து வங்கிகளும், பொதுத்துறை நிறுவனங்களும் நல்ல முறையில் நிர்வகித்து வருகின்றன. பொது மக்களிடமிருந்து திரட்டப்படும் நிதியானது பங்குச் சந்தை, நிதிச்சந்தை, அரசு மற்றும் தனியார் துறையினர் நிர்வகிக்கும் கடன்பத்திரங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதுவே மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் சொத்து என அழைக்கப்படுகிறது.

சொத்து மதிப்பு

சொத்து மதிப்பு

மியூச்சுவல் ஃபண்ட் துறையில் ஒவ்வொரு திட்டமும் தனித்தனி சொத்து மதிப்பினை (Net Asset Value - NAV) கொண்டுள்ளது. தினசரி பங்கு வர்த்தகத்தில் சரிவு ஏற்படும்போதும், முதலீட்டாளர்கள் தாங்கள் வைத்திருந்த யூனிட்களை (Units) அதிக அளவில் விற்கும்போதும் இத்துறையினர் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு (NAV) குறைகிறது.

23 லட்சத்து 79 ஆயிரம் கோடி

23 லட்சத்து 79 ஆயிரம் கோடி

கடந்த பிப்ரவரி மாதத்தில் இத்துறையினர் நிர்வகிக்கும் சொத்து மதிப்பானது ரூ.23 லட்சத்து 16 ஆயிரம் கோடியாக இருந்தது. கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இது 0.89 சதவிகிதம் குறைவாகும். அதே போல் மார்ச் மாதத்தில் இதன் சொத்து மதிப்பு சுமார் 3 சதவகிதம் அதிகரித்து ரூ.23 லட்சத்து 79 ஆயிரம் கோடியாக உள்ளது. நிதியாண்டு முடிவடைவதால் பெரும்பாலான மாதச் சம்பளதாரர்கள் வரி சேமிப்புக்காக பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் (ELSS) திட்டங்களில் முதலீடு செய்ததால் மார்ச் மாதத்தில் சற்று அதிகரித்தது.

கடன் சார்ந்த திட்டங்கள்

கடன் சார்ந்த திட்டங்கள்

கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2018-19ஆம் நிதியாண்டில் மியூச்சுவல் ஃபண்ட் துறையின் கடன் சார்ந்த திட்டங்களில், அதாவது வருவாய் (Income), ரொக்கம் (Cash), தங்கம்(Guilt) மற்றும் நிதிச்சந்தை (Financial) போன்ற திட்டங்களில் இருந்து சுமார் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடி எடுக்கப்பட்டுள்ளது. முந்தைய 2017-18ஆம் நிதியாண்டில் இந்த திட்டங்கள் ரூ.9ஆயிரத்து 128 கோடியை மட்டுமே இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மோடி மாஜிக்

மோடி மாஜிக்

கடந்த மார்ச் மாதத்தில் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் (Equity Linked Saving Scheme-ELSS) ரூ.11 ஆயிரத்து 756 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி

மாதத்துடன் ஒப்பிடும்போது இது 2 மடங்கை விட கூடுதலாகும். தற்போது நடைபெறும் லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்று நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வருவார் என்று கருத்துக் கணிப்புகள் சொன்னதால் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

மார்ச்சில் குறைந்தது

மார்ச்சில் குறைந்தது

கடந்த 2018-19ஆம் நிதியாண்டின் மார்ச் வரையிலான 12 மாத காலகட்டத்தில் மியூச்சுவல் ஃபண்ட் துறையின் பங்கு சார்ந்த திட்டங்களில் (ELSS) ஒட்டு மொத்தமாக ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 858 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதே சமயத்தில் முந்தைய 2017-18 நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 554 கோடியாக இருந்தது. ஆக, இத்திட்டங்களில் செய்திருந்த முதலீடுகளில் இருந்து சுமார் 26 சதவிகிதம் குறைந்துள்ளது.

ரூ.100 லட்சம் கோடியை எட்டும்

ரூ.100 லட்சம் கோடியை எட்டும்

2025ஆம் ஆண்டிக்குள் மியூச்சுவல் ஃபண்ட் துறையினர் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகரித்து ரூ.94 லட்சம் கோடியை எட்டக்கூடும் என்று மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை கண்காணிக்கும் அமைப்பான இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள் சங்கம் (Association of Mutual Fund in India - AMFI) மதிப்பீடு செய்துள்ளது. இதே காலத்தில் இதன் சொத்து மதிப்பானது ரூ.100 லட்சம் கோடியை எட்டும் என மகிந்திரா ஏஎம்சி நிறுவனம் கூறியுள்ளது.

8.24 கோடி கணக்குகள்

8.24 கோடி கணக்குகள்

கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் முதலீட்டாளர் கணக்குகள் 1 லட்சத்து 11 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து முதலீட்டாளர் கணக்குகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 8.24 கோடியாக உயர்ந்துள்ளது. இது ஒரு புதிய சாதனை என இத்துறையைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்தனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Equity funds witnessed strong inflows in FY 2019 for Rs.1,11,858 Crore

The mutual fund industry saw a growth in its AUM during the period ended March when its AUM stood at Rs.23.79 lakh crore. The mutual fund industry expects equity inflows of about Rs.1,00,000 crore. In FY19, equity funds witnessed strong inflows of Rs.1,11,858 crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X