பெங்களூரு: இந்தியாவின் மிகப் பெரிய ஆன்லைன் சில்லறை வியாபாரியான ஃப்ளிப்கார்ட் கர்நாடகம், குருகிராமம், மேற்கு வங்கம் என மூன்று மாநிலங்களில் சுமார் 300 ஏக்கர் நிலங்களை சரி செய்து கொண்டிருக்கிறார்களாம்.
இந்த 300 ஏக்கர் நிலத்தில், ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தன் லாஜிஸ்டிக்ஸ் பார்க்குகளை கட்டமைக்கப் போகிறார்களாம். இந்த லாஜிஸ்டிக்ஸ் பார்க்குக்கு சுமார் 5,000 கோடி ரூபாயை ஃப்ளிப்கார்ட்டின் தாய் நிறுவனமான வால்மார்ட் முதலீடு செய்து இருக்கிறதாம். இந்த 300 ஏக்கர் பெரிய லாஜிஸ்டிக்ஸ் பார்க்குகளால் சுமார் 50,000 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்குமாம்.

கிட்ட தட்ட ஒரே நேரத்தில் இந்தியாவின் இரண்டு மிகப் பெரிய ஆன்லைன் சில்லறை வியாபாரிகள் இப்படி நிலங்களை சரி செய்து தங்களின் லாஜிஸ்டிக் பார்க்குகளை அமைக்கத் திட்டம் தீட்டி வருவது தான் ஆச்சர்யமாக இருக்கிறது. ஃப்ளிப்கார்ட்டைப் போலவே அமேஸானும் இந்தியாவில் பல இடங்களில் தன் உள் கட்டமைப்புகளை வெவ்வேறு கோணங்களில், வெவ்வேறு காரணிகளுக்காக வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது. 60 புதிய நகரங்களில் தன் சேவையை வழங்கத் தொடங்கி இருக்கிறது.
இந்த லாஜிஸ்டிக்ஸ் ஹப்களில் வாடிக்கையாளர்களுக்கான பொருட்களை வரிசைப்படுத்துவது தொடங்கி அதை ஒழுங்காக போக்குவரத்து செய்து டெலிவரி செய்வது வரை அனைத்தையும் செய்யுமாம். அனைத்து இ காமர்ஸ் நிறுவனங்களுக்கும் இந்த உள் கட்டமைப்பும், போக்குவரத்தும் மிகவும் அவசியம் என்பதால் இத்தனை செலவு செய்து அமைத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
மிக முக்கியமாக இன்று இந்தியாவில் செயல்படும் அனைத்து நிறுவனமும் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டி இருக்கிறது. அதை எல்லாம் ஒருங்கிணைந்த கணக்கு வழக்குகள் மற்றும் பிசினஸை சரி செய்ய ஒரு நல்ல consolidating warehouse தேவையாக இருந்ததாம். அதைத் தான் இந்த 300 ஏக்கர் நிலத்தில் பல்வேறு மாநிலங்களை சரி செய்து கொண்டிருக்கிறார்களாம்.
ஏற்கனவே இப்படி அமேஸானுக்கு ஒரு நல்ல consolidating warehouse ஹைதராபாத்தில் இருக்கிறதாம். அதே போல ஃப்யூச்சர் குழுமத்துக்கும் ஒரு பிரம்மாண்ட consolidating warehouses நாக்பூரில் இருக்கிறதாம். சில தினங்களுக்கு முன் தான் அமேஸான் இந்தியா நிறுவனமும் "இனி எங்களுக்கு இந்தியா தான் எல்லாம், சீனா வேண்டாம். சீனாவில் இருக்கும் போட்டி நிறுவனங்கள், அமேஸானால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு கடினமான சீன சட்ட திட்டங்கள், சீன ஊழியர்கள் பிரச்னை, அமெரிக்க சீன வர்த்தகப் போர்" போன்ற காரணங்களால் அமேஸான் சீனாவில் இருந்து வெளியேறுவதாகச் சொன்னது.
அதன் பிறகு தான் இப்போது முழு மூச்சில் இந்தியாவின் சந்தைகளை வளைக்கத் தொடங்கி இருக்கிறது அமேஸான். இப்போது ஃப்ளிப்கார்ட் தன் பங்குக்கு புதிய consolidating warehouse-களை கட்டத் தொடங்கி இருக்கிறது. இன்னும் ரிலையன்ஸ் அஜியோ போட்டியாளர் எதையும் சொல்லாமல் இருக்கிறார். அவர் சொல்லும் போது யாராலும் எதுவும் சொல்ல முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பது தான் உண்மை. பொருந்திருந்து பார்ப்போம்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications