கொஞ்சம் கடன் கொடுங்கள்.. ஜெட் ஏர்வேஸ் புதிதாக கடன் அணுகுமுறை..குறைந்த சேவையாவது வழங்க உத்தேசம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : ஜெட் ஏர்வேஸ் குறைந்த அளவிலாவது தனது சேவையை இயக்க மே 10 வரை அளிக்க வங்கிகளிடம் புதிதாக கடன் அணுகுமுறை. குறைந்த பட்சம் 250 கோடி ரூபாயாவது எதிர்பார்த்த நிலையில் அணுகியுள்ளது.

இடைக்கால நிதியளிப்புக் கோரிக்கையுடன் ஒரு முறை வாடிக்கையாளர் கடன் அளிப்பவருக்கு முறையாக அணுகுவது விமானத் துறையில் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் மூலம் கிடைக்கப் பெறும் நிதியானது 4 - 5 விமானங்கள் வரை மே-10 வர் இயக்கப் ப யன்படும் என்றும் ஜெட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் எவ்வாறாயினும் இந்த சிறிய இயக்கத்தின் மூலம் பெரிதாக ஒன்றும் சம்பாதிக்க முடியாது என்ற கருத்தும் நிலவி வருகிறது. அதேசமயம் வங்கிகளும் ஜெட் ஏர்வேஸ்சுக்கு சட்ட பூர்வமாக எந்த ஒரு கடனையும் கொடுக்க முடியாது என்றும், ஏற்கனவே தேவையான கடன் வழங்கியாகி விட்டது என்றும், சுமார் 8000 கோடி ரூபாய் ஏற்கனவே வங்கிக்கு கொடுக்க வேண்டிய பாக்கி உள்ளது. இப்படி நிலையில் இந்த மறு கடனுக்கு வாய்ப்பில்லை என்றே வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இயல்பு நிலைக்கு  ரூ.11,000 கோடி வேணும்

இயல்பு நிலைக்கு ரூ.11,000 கோடி வேணும்

இதுகுறித்து தொழிற்துறை மதிபீடு செய்யப்பட்டுள்ளன. இதன் படி ஜெட் பழைய நிலைக்கு திரும்ப சுமார் 11,000 கோடி ரூபாயாவது தேவைப்படும். வங்கிகளுக்கு கட்ட வேண்டிய பாக்கி தொகைகள் மற்றும் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை, குத்தகை பாக்கி உள்ளிட்ட கட்டணங்களோடு சேர்த்து கட்டவேண்டிய நிலையில் ஜெட் ஏர்வேஸ் உள்ளது.

அதான் இடைக்கால நிதி கொடுக்கலயே

அதான் இடைக்கால நிதி கொடுக்கலயே

இதற்கு முன்னதாகவே விமான நிறுவனம் கூட்டமைப்புக்கு இடைக்கால நிதியாக கடளிப்பவர்களுக்கு ஒரு கோரிக்கையை முன் வைத்தது. இதில் 983 கோடி ரூபாய்க்கு கேட்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் நிராகரிக்கப்பட்டது.

தனது முழு சேவையும் நிறுத்தம்
 

தனது முழு சேவையும் நிறுத்தம்

இதன் விளைவாக கடந்த ஏப்ரல் -17-ம் தேதி ஜெட் ஏர்வேஸ் தனது குறைந்த பட்ச சேவையை கூட செய்ய முடியாமல், தனது முழு சேவையையும் தற்காலிகமாக நிறுத்தியது. இவ்வாறு ஜெட் ஏர்வேஸ் அனைத்து சேவைகளையும் முடக்குவதற்கு முன்பாகவே 90 சேவைகள் முழுமையாக முடக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில் எஸ்.பி.ஐ கூட்டமைப்பு முக்கியமான இடைக்கால நிதியத்திற்காக தனியார் நிறுவனத்தின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறிவிட்டது.

அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய இயவில்லை

அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய இயவில்லை

இதனால் வங்கிகளிடமிருந்தோ அல்லது வேறு ஏதேனும் நிதியோ ஜெட் ஏர்வேஸ்சுக்கு கிடைக்கவில்லை. இதனால் விமான எரிபொருள் மற்றும் அதன் அடிப்படை தேவைகளுக்குக் கூட பணம் செலுத்த முடியாமல் தவித்து வந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் முழுமையாக மூடப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jet Airways To Approach Lenders With Fresh Funding Proposal

Temporarily grounded Jet Airways is expected to make yet another plan for an interim funding of at least Rs. 250 crore to its lenders to restart bare minimum operations till May 10.
Story first published: Wednesday, April 24, 2019, 7:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X