வறட்சி காரணமாக ஏலக்காய் உற்பத்தி குறைந்தது.. விலை அதிகரித்தது.. மகிழ்ச்சியில் வர்த்தகர்கள்

கொச்சின் : ஏலக்காய் உற்பத்தி போதிய அளவு இல்லாததால் வர்த்தகர்களுக்கு Supply சரிவர கொடுக்க முடியாத நிலையே நிலவி வருகிறது. இந்த நிலையில் போதி நாயக்கனூரில் ஏலக்காயின் சராசரி விலை ஏலத்தில் கிலோவுக்கு 1752 ரூபாயாக வர்த்தகமாகியது.

மேலும் கேரளாவில் ஸ்பைஸ் மோர் டிரேடிங்க் கம்பெனி நடத்திய ஏலத்தில் 68,850 கிலோ ஏலக்காயில் 68,091 கிலோ ஏலக்காய் ஏலமிடப்பட்டது. இதன் அதிகப்படியான விலை 2098 ரூபாயாகும். இது சந்தையிலேயே ஒரு ரெக்கார்டு பிரேக் விலையாகும். இது இந்த பருவத்தின் முடிவில் உயர்ந்த அதிக விலையாகும்.

இது குறித்து PC Punnoose, CEO, Kerala Cardamom Processing and Marketing நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறும் போது, கடந்த பருவத்தில் கோடை பருவ மழை குறைவின் காரணமாக பயிர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த ஆண்டின் உற்பத்தியோடு ஒப்பிடும் போது, தற்போது உற்பத்தி 40 சதவிகிதம் குறைந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு உற்பத்தி 25,000 டன் கள் ஆகும்.

அடுத்த ஆண்டிலும் தாமதமாகும்

அடுத்த ஆண்டிலும் தாமதமாகும்

மேலும் தற்போது பயிர் செய்கை தொடர்பான எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. இதனால் அடுத்த ஆண்டிலும் உற்பத்தி தாமதத்திற்கு வழி வகுக்கும். பொதுவாக ஏலக்காய் பருவம் ஜீன் - ஜீலைகளில் தொடங்குகிறது. ஆனால் ஜீலை - ஆகஸ்ட் வரை தொடர்ச்சியான வறட்சி நிலைகளால் தாமதமாகலாம்.

சில இடங்களில் மழை போதவில்லை

சில இடங்களில் மழை போதவில்லை

கடந்த நவம்பர் மாதத்தில் சில இடங்கள் மட்டுமே மழைகளை பெற்றன. ஆனால் அதன் பிறகு ஐந்து மாதங்களுக்கு எந்த மழையும் இல்லை. கடந்த வாரம் நாங்கல் பெற்ற சிதறிய மழைத்துளி போதவில்லை. இது ஏலத்துக்கு வரும் வரத்தையும், வருவாயையும் வெகுவாக பாதிக்கும். இதனால் இதே போன்ற நிலைமையே இனியும் நிலவி வரும் என்றும் கூறியுள்ளார் PC Punnoose.

குறு விவசாயிகளுக்கு நன்மை இல்லை

குறு விவசாயிகளுக்கு நன்மை இல்லை

இருப்பினும் இந்த விலை அதிகரிப்பின் நன்மையை சிறு குறு விவசாயிகள் பெற வில்லை என்றும், உண்மையிலேயே அதிகளவு ஏலக்காயை சேமித்து வைத்திருக்கும் இடைத்தரகர்களே இதன் மூலம் அதிக அளவு லாபத்தை சந்தித்துள்ளனர். மேலும் குறைந்த உற்பத்தியாளர்கள் குறைந்த அளவு உற்பத்தி என்பதால் விற்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.

சராசரி விலை அதிகரிப்பு

சராசரி விலை அதிகரிப்பு

ஏலக்காயின் சராசரி விலைகள் ஆண்டு தொடக்கத்தில் இருந்ததை விட தற்போது அதிகரித்துள்ளன. அதிலும் ஆண்டு தொடக்கத்தில் கிலோவுக்கு 1300 ரூபாய் என்ற நிலையில் தற்போது 1700 - 1750 வீதத்தில் அதிகரித்துள்ளன.

ஆனா சப்ளை இல்லை

ஆனா சப்ளை இல்லை

ஏலக்காயின் சப்ளை குறைந்தே காணப்படுவதால் வரும் நாட்களில் ஏலக்காயின் விலை மிதமாகவே இருக்கும் என்று ஏவிடி நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் உன்னிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பாக உள் நாட்டு சந்தைகளிலே பெரும் தேவை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏலக்காய் வளர கடினமான காரணிகள்

ஏலக்காய் வளர கடினமான காரணிகள்

எனினும் கால நிலைமாற்றங்கள், தொழிலாளர் பற்றாக்குறை நீர் கிடைக்கக் கூடிய தன்மை உள்ளிட்ட காரணிகள் பாரம்பரியமாக ஏலக்காய் வளர்ந்து வரும் பகுதிகளில் ஏலக்காய் வளர கடினமான காரணிகளாக மாறி வருகின்றன. கடந்த ஆண்டே போதுமான நீர்பாசனாம் இல்லாததால் பல இடங்களில் உற்பத்தி குறைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+