டெல்லி : அல்ட்ராடெக் சிமெண்ட் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4-வது காலாண்டில் அதன் லாபம் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்து 1017 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 488 கோடி ரூபாயாக இருந்துள்ளது கவனிக்க தக்க விஷயமாகும்.
இதோடு கடந்த மார்ச் மாததில் நிகர விற்பனையும் 16.64 சதவிகிதம் அதிகரித்து 10,500.27 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலத்தில் 9002.48 கோடி ரூபாயாக இருந்தது. இதுவே டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 3-வது காலாண்டில் நிகர விற்பனை 8812.72 கோடி ரூபாயாகவும் இருந்தது கவனிக்கதக்கது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் (டிசம்பர் 2017) 7,589.86 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4-வது காலாண்டில் மூலப்பொருட்களின் நுகர்வு 1,265.84 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 3-வது காலாண்டில் 1,201.75 கோடி ரூபாயாகவும், இதே காலாண்டில் முந்தைய ஆண்டு இதே காலத்தில் (டிசம்பர் 2017) 1,003.31 கோடி ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது
ஊழியர்களுக்கான சம்பளம்
இதுவே ஊழியர்களுக்கான தொகை மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4-வது காலாண்டில் 461.06 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுவே டிசம்பர் மாததுடன் முடிவடைந்த 3-வது காலாண்டில் 493.05 கோடி ரூபாயாக இருந்தது. இதுவே இதற்கு முந்தைய டிசம்பர் 2017 - ஆம் ஆண்டில் இதே காலாண்டில் ஊழியர்களுக்கான தொகை 462.84 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
மார்ச் காலாண்டில் ரூ.465.38 கோடி வரி
இதுவே கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4- வது காலாண்டில் வரியாக 465.38 கோடி ரூபாயாகவும், இதுவே டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 3- வது காலாண்டில் வரியாக 184.07 கோடியாகவும், டிசம்பர் 2017 காலாண்டில் வரி 181.60 கோடியாகவும் இருந்துள்ளது.
EPS விகிதம் ரூ.37.08 ஆக அதிகரிப்பு
இதே போல் அல்ட் ராடெக் சிமெண்ட் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4-வது காலாண்டில் EPS விகிதம் ரூ.37.08 அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ.17.78 இருந்தது கவனிக்கதக்கது.
நிகர லாபமும் அதிகரிப்பு
கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலத்தில் நிகர லாபம் 1,017.47 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே டிசம்பர் 2018-ம் 3-வது காலாண்டில் 449.06 கோடி ரூபாயாக இருந்தது. இதுவே இதற்கு முந்தைய காலாண்டில் (டிசம்பர் 2017) 421.47 கோடி ரூபாயாகும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications