ஏன் சரிகிறது இந்திய ரூபாய்..? காரணங்கள் என்ன..?

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. கடந்த ஏப்ரல் 04, 2019 அன்று 68.42 ரூபாயாக இருந்த இந்திய ரூபாய் மதிப்பு தற்போது 69.82 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.

இந்த இரண்டு வார காலத்திலேயே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2.04 சதவிகிதம் குறைந்திருக்கிறது. இப்படியே போனால் பழைய உச்சமான 74 ரூபாயைத் தொட்டாலும் தொட்டு விடும்.

அதற்கு முன், இந்திய ரூபாயின் எல்லைக் கோடான 70 ரூபாயில் ஒரு போராட்டம் நடத்தும் என எதிர்பார்க்கலாம். சரி ஏன் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது.

காரணம் 1

காரணம் 1

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதோடு ஈரானிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்யைக் கூட இனி வாங்க முடியாது என்கிற நிலையில் சர்வதேச சந்தையில் (சொல்லும் விலைக்கு) அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது. இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. டிசம்பர் 25, 2018 அன்று ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்னெய் 50 டாலராக இருந்தது. ஆனால் இன்று அதே ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 73.84 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

காரணம் 2

காரணம் 2

அமெரிக்காவில் வீடுகள் விற்பனை தொடர்பான தரவுகள் வெளியாகி இருக்கின்றன. அமெரிக்காவில் மார்ச் 2019-ல் மட்டும் 1.139 மில்லியன் வீடுகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறதாம். 9.38 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறதாம். இதை ஒரு நல்ல காரணமாக எடுத்துக் கொண்டு டாலரில் பலரும் முதலீடு செய்ய அமெரிக்க டாலர் பல நாட்டு கரன்ஸிகளுக்கு எதிராக வலுவடைந்துவிட்டது. குறிப்பாக ஆசிய கரன்ஸிகள் அமெரிக்க டாலருக்கு நிகரான கரன்ஸி மதிப்பு பெரிய அளவில் குறைந்துவிட்டது.

காரணம் 3

காரணம் 3

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவதால், பங்குச் சந்தையும் சரிந்து கொண்டிருக்கிறது. பங்குச் சந்தை நிலையான ஏற்றத்தைக் காணாததால் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து வர வேண்டிய முதலீடுகள் வரவில்லை. முதலீடுகள் அமெரிக்க டாலரில் தான் வரும். ஆக இந்த பக்கமும் டாலர் வரத்து குறைந்தால், இந்தியாவுக்கு தேவையான டாலரை அதிக ரூபாய் கொடுத்து டாலரை வாங்க வேண்டி இருக்கும். எனவே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து கொண்டே இருக்கிறது.

காரணம் 4

காரணம் 4

பொதுவாகவே இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகமாகத் தான் இருக்கும். இப்போது கச்சா எண்ணெய்க்கான விலை அதிகரிப்பதால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும். எனவே கையில் இல்லாத டாலருக்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும். எனவே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர் சரிவைக் காண்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+