டெல்லி : 342 ஸ்டார்ட் - அப் நிறுவனங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் வரை ஏஞ்சல் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு தொடங்கப்படும் நிறுவனங்களின் வளர்ச்சியை அதிகரிக்கவும், அந்த நிறுவனங்களுக்கு நிவாரணங்களை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் சிறிய அளவு முதலீட்டுடன் தொடங்கப்படும் நிறுவனங்களாகும். இவை பங்குகள் மூலம் வெளியில் இருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிறுவனங்களின் நியாய விலை மீது முதலீடுகள் பெறப்படுகின்றன.
குறிப்பிட்ட அளவுக்கு மேல் பெறப்படும் நிதிக்கு ஏஞ்சல் வரி விதிக்கப்படுகிறது. வருமான வரி சட்டப்பிரிவு 59 பிரிவு 2ன் படி 30.9 சதவிகிதம் வரி வசூலிக்கப்படும். ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் வரையில் வரி விலக்கு அளிக்கப்பட்ட நிலையிலும் இந்த நிலையில் சில ஸ்டார்ட் - அப் நிறுவனங்களுக்கு ஏஞ்சல் வரி விதிக்க நோட்டீஸ் அனுப்பட்டது. இதனால் சில நிறுவனங்கள் குழப்பம் அடைந்துள்ளன. இதை மட்டும் தெரிந்து கொண்டால் போதுமா? இவ்வாறு தொடங்கப்படும் ஸ்டார்ட் அப்கள் ஏன் தோல்வி அடைகின்றன. இதற்கு என்ன வழி இது போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
இதைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்
இதில் பெண் தொழில் முனைவோருக்கு சில சிறப்பு திட்டங்கள் உண்டு. இந்த ஸ்டார்ட் - அப் நிறுவனங்கள் தொடக்க நிறுவனர்கள் எளிதாக பதிவு செய்வதற்காக மொபைல் அப்ளிகேஷன்ஸ் தரப்பட்டுள்ளன. மேலும் ஆன்லைன் போர்ட்டலும் உண்டு. பொதுக் கொள்முதல் விதி முறைகளில் தளர்வு. காப்புரிமை பெறுவதிலும் விதிகள் தளர்த்தப்படுகின்றன. குறிப்பாக காப்புரிமை பட்டயத்தை பதிவு செய்வதற்கான கட்டணங்கள் குறிப்பிட்ட சதவிகிதம் வரை குறைக்கப்படுகின்றன. தொழில் முனைவோர் அவர்களின் சுய சான்றுடன் விண்ணப்பத்தை ஒரே நாளில் பதிவு செய்யலாம்.
சில ஸ்டார்ட்- அப்கள் மட்டுமே வெற்றி
உலக அளவில் ஒவ்வொரு வினாடிக்கும் 1 -3 ஸ்டார்ட் - அப்கள் தொடங்கப்படுகின்றன.ஆனால் இவ்வாறு தொடங்கப்படும் நிறுவனங்களில் 10ல் 1 அல்லது 2 மட்டுமே வெற்றியடைகிறது. ஏன் இதற்கு என்ன காரணம் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா?
தொழில் புதுமையை புகுத்த வேண்டும்
புதிவிதமான பிசினஸ்களாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, அவை ஏற்கனவே இருக்கும் தொழிலாக கூட இருக்கலாம். அதற்கு எடுத்துக் காட்டுதான் உணவு டெலிவரி. முன்னர் இதே போன்று தொழில் இருந்தாலும் இந்த அளவுக்கு பேசப்பட்டதும் இல்லை. வளர்ச்சியும் இல்லை. ஆனால் தற்போது அதை நமது மொபைல் வரைக்கும் கொண்டு வந்த நிறுவனங்களையும் நாம் கண்கூட பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.
தொழில்களில் எப்படி வெற்றி பெறுவது?
முதலில் நாம் தேர்தெடுக்கும் தொழில் மிக உறுதியானதாக இருக்க வேண்டும். அதில் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் தீர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும். உங்களது பொரூளோ அல்லது சேவையோ மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்பட வேண்டும். அது மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக மேலே நாம் கூறிய உணவு டெலிவரி குறித்த தொழில்.மேலும் அந்த பொருளுக்கு என்ன தேவை இருக்கு என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
ஸ்டார்ட்-அப்களுக்கு அரசு தரும் திட்டங்கள்
நீங்கள் தேர்தெடுக்கும் தொழிலுக்கு தேவையான முதலீடு. அது உங்களாலேயே அல்லது உங்களை சார்ந்தவராலோ செய்ய முடியும் என்றால் செய்யலாம். அதோடு நீண்ட கால வளர்ச்சிக்காக துணிகர மூலதன அமைப்புகளின் உதவியுடன் தொழில் தொடங்குவது. இது பிரச்சனைகளில் ஏற்படும் காலங்களில் மிகப் பெரும் உதவியாக இருக்கும். மேலும் ஸ்டார்ட் அப் களுக்கு முதலீடு தரும் அரசு திட்டங்கள் என்னென்ன என்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பழைய தொழிகளில் புதுமை
ஸ்டார்-அப் நிறுவனங்களை பொறுத்தவரையில் ஏற்கனவே உள்ள தொழில் புதுமையை புகுத்துவது. இது சிறந்த உதாரணம் அதிகரித்து வரும் பசுமைக் குடில்கள்.அதாவது இயற்கை பாரம்பரியத்தோடு உணவு மற்றும் ஸ்னாக்ஸ். இதில் தானியங்கள் மூலம் தயாரித்து விற்கப்படுகின்றன. சிறந்த எடுத்துக் காட்டுகள் பல உள்ளன. அதிலும் குறிப்பாக ஈரோடு, கோயமுத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகரிக்கின்றன.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications