டெல்லி : பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு விருப்ப ஒய்வு அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த, பி.எஸ்.என்.எல் பத்திர வெளியீடு மூலம் 6700 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.இதற்கான ஒப்புதலும் விரைவில் கிடக்கும் என தொலைத்தொடர்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நஷ்டத்தில் இருப்பது ஏற்கனவே அனைவரும் அறிந்த விஷயமே. இந்த நிலையில் ஊழியர்களுக்கு சம்பள பாக்கியை அளிப்பதே பெரும் சுமையான நிலையில் உள்ளது. இந்த நிலையில் பி.எஸ்.என்.எல் ஒய்வு வயதைக் நெருங்கும் ஊழியர்களுக்கு வீ.ஆர்.எஸ் வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் செலைவை மிச்ச படுத்த முடியும் என்று பி.எஸ்.என்.எல் நம்புகிறது.

இவ்வாறு திரட்டப்படும் தொகையில், விருப்ப ஒய்வு திட்டத்துக்கு 6365 கோடி ரூபாயும், மீதமுள்ள தொகை 4ஜி சேவையை விரிவுப்படுத்தவும் பயன்படுத்தப்படும். இதன் மூலம் நாட்டில் சிறந்தொரு 4ஜி சேவையை வழங்கமுடியும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
சம்பள செலவை மிச்ச படுத்த முடியும்
இந்த விருப்ப ஒய்வு திட்டத்தை கொண்டு வருவதன் மூலம் எம்.டி,என்.எல் நிறுவனத்தில் 1080 கோடி ரூபாய் மிச்சப் படுத்த முடியும் என்றும், இந்த ஒய்வு திட்டத்திற்காக சுமார் 9500 ஊழியர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டால் கூட செலவை மிச்ச படுத்த முடியும் என்று எம்.டி.என்.எல்லின் நிர்வாக இயக்குனர் PK Purwar கூறியுள்ளார்.
வீ.ஆர்.எஸ் கொடுக்க முடிவு
இது குறித்து எம்.டி.என்.எல் நிறுவனத்தில் தலைவர் கூறுகையில், மொத்தம் 19,000 பேர் விருப்ப ஒய்வு பெற தகுதி உடையவராக உள்ளனர். இதில் கிட்டதட்ட 50 சதவிகிதம் ஊழியர்கள் இந்த திட்டத்திற்கு தேர்தெடுக்க நினைத்திருந்தோம், ஆனால் தற்போதைய கணக்கீட்டின் படி சுமார் 9500 ஊழியர்கள் இந்த வி.ஆர்.எஸை பெற்றால் கூட இதன் மூலம் 1080 கோடி ரூபாய் மிச்சமாகும் என்றும் PK Purwar கூறியுள்ளார்.
இதுவரை இல்லாத சலுகைகள்
இதற்காக இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய பணப்பலன் சலுகைகள் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதை செயல்படுத்துவதற்கு பத்திர வெளியீடு மூலம் 6700 கோடி ரூபாய்திரட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் விருப்ப ஒய்வு திட்டத்திற்கு 6365 கோடி ரூபாய் போக எஞ்சிய தொகை 4ஜி இணைப்பு திட்டத்தை விரிவு படுத்த பயன்படுத்தப்படும். மேலும் இந்த நிதி திரட்டலுக்கு தேவையான ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications