அட நிஜமாவா .. சில மளிகை பொருட்கள் விலை ரூ.1 மட்டும்.. பிளிப்கார்ட்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ : ஆன்லைன் குரோசரி நிறுவனமான பிளிப்கார்ட்டில் தினமும் ஒரு ரூபாய்க்கு விதவிதமான பல மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதோடு மட்டும் அல்லாமல் மிகக்குறைந்த விலையில் தள்ளுபடி சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

தமிழக அரசுக்கு அடுத்த படியாக மளிகை பொருட்களை 1 ரூபாய்க்கு கொடுப்பது பிளிப்கார்ட் தான். இது ஆன்லை சந்தையில் நிலவும் போட்டியை சமாளிக்கவா அல்லது இதுவரை செல் போன்கள் உள்ளிட்ட எலக்ட் ரானிக் பொருட்கள் மட்டுமே அதிகம் விற்ற நிலையில் தற்போது மளிகை பிரிவிலும் வேறூன்ற தொடங்கியுள்ளது.

பிளிப்கார்ட்டில் எலக்ட்ரானிக்ஸ் கேட்ஜெட், ஸ்மார்ட் போன்களுக்கு தினமும் ஆஃபர்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதன் அடுத்தக் கட்டமாக, தற்போது வீட்டு உபயோகப் பொருட்கள், பல சரக்கு மளிகைப் பொருட்களுக்கும் அதிகளவிலான ஆஃபர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நம்ம ஊர் சூப்பர் மார்க்கெட்டில் கூட கிடைக்காத வகையில் இங்கு ஆஃபர்கள் உள்ளன.

அனைத்து விதமான பொருட்களும் கிடைக்கும்

அனைத்து விதமான பொருட்களும் கிடைக்கும்

இதோடு மட்டும் அல்லாமல் பிஸ்கட், பருப்பு வகைகள், சர்க்கரை, டூத்பேஸ்ட், ஹார்லிக்ஸ், பூஸ்ட், ஸ்நாக்ஸ், சோப்பு வகைகள், ஷாம்பு வகைகள், சோப்பு வகைகள், மாவு வகைகள் எண்ணெய் வகைகள், காபித்தூள், டீத்தூள், கிளீனர் வகைகள் என அனைத்து விதமான பொருட்களும் மிகக் குறைந்த விலையில் ஆஃபர்களுடன் கிடைக்கிறது.

 

 

தினமும் சில பொருட்களுக்கு 1  ரூபாய் ஆஃபர்

தினமும் சில பொருட்களுக்கு 1 ரூபாய் ஆஃபர்

இது தவிர தினமும் ஒரு ரூபாய் ஆஃபர் என்று கூறி சில பொருட்களை வழங்கப்படுகிறது. ஒரு கிலோ பருப்பு ஒரு ரூபாய், ஒரு கிலோ சர்க்கரை ஒரு ரூபாய் இவ்வாறாக தினமும் குறைந்தது 3 பொருட்கள் ஒரு ரூபாய் ஆஃபர் பட்டியலில் இடம் பெறுகின்றன. இது தவிர குறிப்பிட்ட வங்கியின் மூலம் பொருட்களை வாங்குபவர்களுக்கும் குறிப்பிட்ட சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.இது தவிர தினமும் ஒரு ரூபாய் ஆஃபர் என்று கூறி சில பொருட்களை வழங்கப்படுகிறது. ஒரு கிலோ பருப்பு ஒரு ரூபாய், ஒரு கிலோ சர்க்கரை ஒரு ரூபாய் இவ்வாறாக தினமும் குறைந்தது 3 பொருட்கள் ஒரு ரூபாய் ஆஃபர் பட்டியலில் இடம் பெறுகின்றன. இது தவிர குறிப்பிட்ட வங்கியின் மூலம் பொருட்களை வாங்குபவர்களுக்கும் குறிப்பிட்ட சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

குறைந்தபட்ச ஆர்டர் உண்டு
 

குறைந்தபட்ச ஆர்டர் உண்டு

இவ்வாறு பல சலுகைகள் வழங்கப்பட்டாலும், வாடிக்கையாளர்கள் நினைத்தவாறு ஒரு ரூபாய் பொருட்கள் மட்டும் ஆர்டர் செய்ய முடியாது. குறைந்தபட்ச ஆர்டர் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக வாடிக்கையாளர்கல் இந்த குறைந்தபட்ச அளவுக்கு வாங்கினால் மட்டுமே வாடிக்கையாளர்கள் இந்த ஆஃப்பரை பெற முடியும்.

வாடிக்கையாளர்களுக்கு பயம் வேண்டாம்

வாடிக்கையாளர்களுக்கு பயம் வேண்டாம்

இவ்வாறு வாங்கப்படும் பொருட்களின் காலாவதி தேதி, உற்பத்தி தேதி கொடுக்கப்பட்டுள்ளதால், பழைய பொருட்களை கொடுத்துவிடுவார்களோ என்ற பயம் தேவையில்லை. ஆனால் இது போன்ற ஆஃபர்கள் வெறும் ஆசையை காட்டி மோசம் செய்வது போல் உள்ளதோ என்றும் தோன்றுகிறது.

 

ஏனெனில் பிளிப்கார்டில் வாங்கலாம் என்று பிளிப்கார்டை லாகின் செய்து அங்கு கொடுக்கப்பட்ட லிங்கின் மூலம் உள்ளே சென்றால் நமது பின் கோடினை கேட்கிறது. அங்கு பின் கோடினைக் கொடுத்தால் என்று வருகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் இந்த ஆஃபரை கொடுத்து வருகிறது.

பாதிக்கும் உள்ளூர் வியாபாரிகள்

பாதிக்கும் உள்ளூர் வியாபாரிகள்

இதுகுறித்து உள்ளூர் கடை உரிமையாளர்களிடம் பேசியபோது, இந்த மாதிரியான ஆன்லைன் கடைகளில் பொருட்களை வாங்குவதால் அதன் ஒரிஜினல் தன்மையை தொட்டு பார்த்து வாங்க இயலாது, மேலும் அதன் தரத்தையும் சோதிக்க முடியாது. இந்த நிலையி,ல் வாங்கிய பொருட்களையும் தரம் இல்லையென்று மாற்றவும் முடியாது. இதனால் மக்களுக்கு நஷ்டமே என்றாலும் தற்போதைய நிலையில் ஆன்லைன் சில்லறை வர்த்தகம் அதிகமாகி வருகிறது, இதோடு உள்ளூர் வியாபாரிக:ளும் பாதிக்கின்றனர். மக்கள் யோசித்து செய;ல்பட வேண்டும் என்பதே வியாபாரிகளின் கருத்து என்று கூறுகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart offer only one Rupees in some groceries

Flipkart sold groceries with Rs 1 only. But some ares not work with this offer
Story first published: Thursday, April 25, 2019, 19:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X