ரூ.12000 கோடியை தாண்டிய டெபாசிட்.. வருட வட்டி மட்டும் ரூ.845 கோடி.. திருப்பதி பணக்கார சாமிதாங்க

திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தானம் என்பது திருப்பதி வெங்கடாசலபதி கோவிலினை நிர்வாகம் செய்கின்ற அமைப்பாகும். இது ஆந்திர மா நிலத்தில் திருமலை பகுதியில் அமைந்துள்ளது. இந்த அமைப்பு திருப்பதி கோவிலின் சேவைகள், தரிசனங்கள், சேவை கட்டணம் நிர்ணயித்தல், அங்கு வரும் பக்தர்களுக்கு தங்குமிட வசதிகளை செய்து கொடுத்தல் உள்ளிட்ட பல வசதிகளை செய்து கொடுக்கின்றன.

ஆந்திர மா நிலத்தினை சேர்ந்த இந்த திருப்பதி நாட்டிலேயே அதிக வருவாய் கொண்ட கோவில்களில் ஒன்றாகும். இதன் சொத்து மதிப்பும் மிக அதிகம். ஆக இந்த கோவிலின் நிதி நிர்வாகத்தையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) செய்து வருகிறது. இந்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு வங்கிகளில் இருப்பு தொகையை டெபாசிட் செய்துள்ளது. இதன் மதிப்பு தற்போது 12,000 கோடி ரூபாயை தாண்டிவிட்டது.

ரூ.12000 கோடியை தாண்டிய டெபாசிட்.. வருட வட்டி மட்டும் ரூ.845 கோடி.. திருப்பதி பணக்கார சாமிதாங்க

இது குறித்து தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறுகையில், தேசிய மையமாக்கப்பட்ட சில வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் சிலவற்றிலும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் டெபாசிட் செய்யப்பட்ட இருப்பு தொகை 12,000 கோடியை தாண்டியுள்ளது. இதிலிருந்து சுமார் 845 கோடி ரூபாய் வட்டி ஆண்டுக்கு கிடைத்து வருகிறது.

ஆண்டு வருமானம் 31 பில்லியன்

இதோடு கோவிலின் ஆண்டு வருமானம் சுமார் 31 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் இது வரை 2.5 கோடி பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தந்துள்ளனர். இதில் பக்தர்கள் உண்டியலில் கணிக்கையாக வழங்கிய வகையில் 8.7 டன் தங்கம், கற்கள் பதிக்கப்பட்ட 550 கிலோ தங்க ஆபரணங்களையும் அளித்துள்ளனர்.

ரூ.12000 கோடியை தாண்டிய டெபாசிட்.. வருட வட்டி மட்டும் ரூ.845 கோடி.. திருப்பதி பணக்கார சாமிதாங்க

காணிக்கையாக கிடைத்த 8.7 டன் தங்கம்

இவ்வாறு காணிக்கையாக கிடைத்த 8.7 டன் தங்கத்தில் 5387 கிலோ தங்கத்தை பாரத ஸ்டேட் வங்கியிலும், 1938 கிலோ தங்கத்தை இந்தியன் ஒவர்சீஸ் வங்கியிலும் வைக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைத்திருந்த 1381 கிலோ தங்கம் வைத்திருந்த இருப்பு காலம் முடிந்து சமீபத்தில் தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

பழங்கால சிலைகளும் & மதிப்புமிக்க ஆபரணமும் உண்டு

மிக முக்கிய தளமான மலை கோவிலான வெங்கடேஸ்வர கோவிலினுள் பழங்கால மதிப்புமிக்க விலையுயர்ந்த சிலைகளும், மிக அதிக மதிப்புள்ள பழங்கால இந்த ஆபரணங்களும் உள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+