மும்பை : தனியார் துறை வங்கியான ஆக்ஸிஸ் வங்கி கடந்த வியாழக்கிழமையன்று (25ஏப்ரல் 2019) தனது 4-வது காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது. கடந்த நான் காவது காலாண்டில் நிகர லாபம் 1505 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுவே முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 2189 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்ததும் கவனிக்கதக்கது.
கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது நிகர வட்டி வருவாயும் , வருவாயும் அதிகளவு அதிகரித்திருப்பதாகவும், இதுவே இந்த ஹெல்த்தியான வளர்ச்சிக்கும் காரணமாக இதுவே காரணமாகவும் உள்ளது.
மேலும் இந்த 4-வது காலாண்டில் நிகர வட்டி வருவாய் 21 சதவிகிதம் அதிகரித்து 5706 கோடி ரூபாயாக அதிகரித்தும், இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 4730 கோடி ரூபாயாகவும் உள்ளது. இதே காலாண்டில் மற்ற வருவாய் 26 சதவிகிதம் அதிகரித்தும் 3526 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 2789 கோடி ரூபாயாகவும் இருந்தது.
செயல்படாத சொத்து மதிப்பு குறைந்தது
இதுவே மொத்தம் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு மார்ச் காலண்டில் 5.26 சதவிகிதம் குறைந்துள்ளது. இதுவே டிசம்பர் காலாண்டில் 5.75 சதவிகிதமாகவும், இதுவே மார்ச் 2018ம் காலாண்டில் 6.77 சதவிகிதமாகவும் இருந்துள்ளது.
NPA 300 கோடி ரூபாய்
இதோடு வங்கியானது 700 கோடி ரூபாய் உள்கட்டமைப்பு குத்தகைகளுக்கும், பைனான்ஷியல் சேவைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றும், இதில் 300 கோடி ரூபாய் NPA என்றும் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மூலம் லாபம்
கார்ப்பரேட் பிரிவில் இந்த காலாண்டின் மொத்த லாபம் 3000 கோடி ரூபாயாகும். இதில் 1369 கோடி ரூபாய் கார்ப்பரேட் பிரிவில் இருந்து வந்ததும், மீதமுள்ள தொகை சில்லறை விற்பனை, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களில் இருந்தும் வந்த லாபமாகும்.
மொத்த மூலதன ஆதாயம் குறைந்தது
கடந்த மார்ச் மாத காலாண்டின் இறுதியில் வங்கியின் மொத்த மூலதன ஆதாய விகிதம் 15.84 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதுவே 2018 மார்ச் மாத காலாண்டில் 16.57 சதவிகிதம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்வே வங்கியின் முன்னேற்றமான வளர்ச்சி கடந்த மார்ச் 2019ல் 13 சதவிகிதம் உயர்ந்து 4.94 டிரில்லியன் ரூபாயாக வளர்ச்சியடைந்துள்ளன. இதே சில்லறை கடனக்ள் 19 சதவிகிதமும், எஸ்.எம்.இ மற்றும் கார்ப்பரேட் கடன்கள் 12 சதவிகிதமும் மற்றும் 5 சதவிகிதமாகவும் வளர்ச்சியடைந்துள்ளன.


Click it and Unblock the Notifications