மும்பை: வங்கிகள் மீதான வாடிக்கையாளர்களின் புகார்கள் கடந்த, 2018- ஜூன் வரையிலான ஓராண்டு காலத்தில் வங்கி குறைதீர்ப்பு மையங்களில் (banking ombudsman) மட்டும் 1.63 லட்சம் புகார்கள் குவிந்துள்ளன.
இது முந்தைய ஆண்டை விட, 24 சதவிகிதம் அதிகமாகும். இதில் 96 சதவிகித புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இவ்வாறு அளிக்கப்பட்ட புகார்களில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக இவ்வங்கி மீது 47ஆயிரம் புகார்கள் குவிந்துள்ளனவாம்.
இரண்டாவது இடத்தில் ஹெச்.டி.எப்.சி. வங்கியாகும். சுமார் 12 ஆயிரம் புகார்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த சிட்டி பேங்க் மீது 1,450 புகார்களும் கூறப்பட்டுள்ளன. இதற்கு காரணம் வங்கிகள், விதிகளின்படி வெளிப்படையாக நடந்து கொள்வதில்லை என புகார்கள் எழுந்துள்ளன. நியாயமான நடைமுறை இல்லை என 22.1 சதவிகித புகார்கள் வந்துள்ளன.
ஏ.டி.எம் & கிரெடிட் கார்டு புகார்கள்
இதையடுத்து, ஏ.டி.எம் மற்றும் டெபிட் கார்டு தொடர்பாக, 15.1 சதவிகிதமும். கிரெடிட் கார்டு தொடர்பாக 7.7 சதவிகிதமும், இணையதள வாயிலான நெட் பேங்கிக் வங்கிச் சேவை குறித்து 5.2 சதவிகித புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன.
அறிவிப்பில்லாத சேவைக் கட்டண புகார்கள்
ஓய்வூதியம் குறித்த புகார்கள், முன்கூட்டியே தெரிவிக்காமல் எடுக்கப்படும் சேவைக் கட்டணம் வசூலிப்பது, கடன், டெபாசிட், நேரடி விற்பனையில் ஈடுபட்டுள்ள முகவர்கள், வாராக் கடன் மீட்பு நடவடிக்கைகள், வாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல்களை அளிப்பது உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக தலா 5 சதவிகித புகார்களூம் வந்துள்ளன.
தீர்வு காணப்பட்ட புகார்கள்
மத்தியஸ்தம் மூலம் தீர்வு காணப்பட்ட புகார்கள் 65.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது, இது இதற்கு முன்னர் 42.4 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வங்கி குறைதீர்ப்பாயங்கள், வாடிக்கையாளர்களின் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
பரிசீலனை செலவும் குறைந்து வருகிறது
இதனால், வங்கிகள் மீதான புகார் பரிசீலனை செலவினங்கள் குறைந்து வருகின்றன. ஒரு புகாரை பரிசீலிக்க ஆகும் சராசரி செலவு, 3,626 ரூபாயிலிருந்து, 3,504 ரூபாயாக குறைந்துள்ளது. எப்படியோ மக்களின் சேவைக்கு வித்திட்டால் சரியே.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications