Microsoft நிறுவனத்தின் பங்குகள் அனைத்தையும் ஒருவர் பங்குச் சந்தையில் விற்றால் அவருக்கு 70 லட்சம் கோடி ரூபாய் கிடைக்குமாம். அதைத்ட் ஹான் சுருக்கமாக பங்குச் சந்தை மதிப்பு என்கிறோம். இதை ஆங்கிலத்தில் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (Market Capitalization) என்பார்கள்.
இதற்கு முன் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு இப்படி 70 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் போனது. ஆப்பிளைத் தொடர்ந்து அமேஸான் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு 70 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் போனது.
அதன் பிறகு நம் பில்லியனர் பில் கேட்ஸின் நிறுவனம் Microsoft தான் இந்த 70 லட்சம் கோடி ரூபாய் என்கிற முத்திரையைப் பதித்திருக்கிறது. இதை அமெரிக்க டாலரில் கணக்கிட்டால் 1 ட்ரில்லியன் (1 லட்சம் கோடி) அமெரிக்க டாலர் வரும்.
131.37 டாலர்
நேற்று ஏப்ரல் 25, 2019 அன்று காலை சுமார் 10 மணி அளவில் Microsoft நிறுவனப் பங்குகளின் விலை தன் வாழ்நாள் உச்சமான 131.37 அமெரிக்க டாலரில் வர்த்தகமாகத் தொடங்கியது. அப்போது தான் தற்காலிகமாக Microsoft நிறுவனத்தின் மொத்த பங்குகள் மதிப்பு 70 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் போனது. நேற்று Microsoft நிறுவனத்தின் மார்ச் 2019 காலாண்டு முடிவுச் செய்திகள் தான் இந்த அசுர வளர்ச்சிக்குக் காரணமாம்.
மார்ச் 2019 காலாண்டு முடிவுகள்
மார்ச் 2019 காலாண்டில் மட்டும் வருவாய் 30.6 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது. மார்ச் 2018-ஐ விட 14% அதிகம். நிகர வருமானம் 8.8 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்திருக்கிறது. மார்ச் 2018-ஐ விட 19% அதிகம். Microsoft தன் முக்கிய தொழிலான விண்டோஸ் ஓஎஸ் தயாரிப்புகளில் இருந்து (Operating Income) வரும் வருமானமும் கடந்த மார்ச் 2018-ஐ விட 18% அதிகரித்து 10.3 பில்லியன் டாலரைத் தொட்டு இருக்கிறது. இப்படி உலகமே தன் பொருளாதார மந்த நிலையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் போது நம் Microsoft மட்டும் 10% 15% என பீடு நடை போட்டால் பங்கு வர்த்தகர்கள் சும்மா இருப்பார்களா..?
வியாபாரம்
வர்த்தகர்கள் Microsoft நிறுவனப் பங்கை வாங்க தொடர்ந்து ஆர்டர் போட்டு ஆர்டர் போட்டு விலை, Microsoft வரலாற்றில் இல்லாத அளவுக்கு உச்ச விலையான 131 டாலரைத் தொட்டுவிட்டது. பங்குச் சந்தைகளில் ஒரு பங்கின் விலை அதிகரித்தால், சந்தையில் வர்த்தகமாகும் அதே நிறுவனத்தின் அத்தனை பங்குகளுக்கும் அதே விலை தானே..? ஆக 131 டாலர் * அமெரிக்க பங்குச் சந்தைகளில் வர்த்தகமாகும் மொத்த Microsoft நிறுவனத்தின் பங்குகள் = 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலரைத் தொட்டுவிட்டது.
ஆப்பிள் தான் டாப்பு
ஆனால் அதிக நேரம் நீடிக்கவில்லை ஏறிய வேகத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாக இறக்கம் கண்டு 990 பில்லியன் டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்துவிட்டது. இப்படி ஆப்பிள், அமேஸான் மற்றும் Microsoft நிறுவனங்களின் பங்குச் சந்தை மதிப்பு ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலரைத் தொட்டாலும், யார் அதிக நேரம் அந்த ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு மேல் நின்று இருக்கிறார்கள் என கணக்கு பார்க்க முடியும். அப்படிப் பார்த்தால் மெர்சல் விஜய் போல கையசைக்கிறது ஆப்பிள். அட ஆமாங்க ஆப்பிள் தான் அதிக நேரம் இந்த ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற இமயத்தின் மேல் அதிக நேரம் நின்று இருக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications