மோடியின் அதிகாரப்பூர்வமற்ற பயணங்களுக்கு ரூ1.4 கோடி தான் செலவு.. பி.ஜே.பி தான் ஸ்பான்சராம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : பாரத பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட அதிகாரப்பூர்வமற்ற பயணங்களுக்காக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 1.4 கோடி ரூபாய் இந்திய விமான படைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

பிரதமர் நரேந்திர மோடி பதிவியேற்றது முதல் கடந்த ஜனவரி 2019 வரையிலும் இந்த பயணங்கள் மேற் கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது. அதேசமயம் ஒவ்வொரு அதிகாரப்பூர்வமற்ற பயணத்திற்கும் எந்த வகையான விமானம் பயன்படுத்தப்பட்டது, அந்த பயணத்திற்கான கட்டணம் எவ்வளவு, பயண நேரம் ஆகிய தகவல்கள் அளிக்கப்படவில்லை.

மேலும் பயணம் செய்த வழித்தடம் மற்றும் ஒவ்வொரு அதிகாரப்பூர்வமற்ற பயணத்திற்கும் வசூலிக்கப்பட்ட கட்டணம் ஆகியவை குறித்த விபரங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. ஆக இது குறித்த எந்த முழுமையான தகவல்களும் அறிவிக்கப்படவில்லை.

இ வே பில்லுடன் இனி பின் கோடு பதிவு செய்வது அவசியம் - ஜிஎஸ்டி வரி ஏய்ப்பை தடுக்க நடவடிக்கை

அரசி பணிக்காக  சென்றது ரூ.443.4 கோடி

அரசி பணிக்காக சென்றது ரூ.443.4 கோடி

இது ஒரு புறம் இருக்க, அரசின் பணிக்காக பிரதமர் மோடி ஏர் இந்தியா விமானத்தில் மொத்தமாக 44 நாடுகளுக்கு பயணங்களைச் சென்றார் என்றும், இதற்கான மொத்த கட்டணம் 443.4 கோடி ரூபாய் செலவாகியுள்ளது என்று ஏர் இந்தியா கடந்த சில வாரங்களுக்கு முன்பு பில் அனுப்பியது.

முதல் ஆண்டிலேயே ரூ. 37.22 கோடி

முதல் ஆண்டிலேயே ரூ. 37.22 கோடி

பிரதமர் மோடி 2014ல் பிரத,மராக பதிவியேற்ற முதல் ஆண்டிலேயே 20 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதற்காக அரசு 37.22 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மன்மோகன் சிங்க் ரூ.493.22 கோடி
 

மன்மோகன் சிங்க் ரூ.493.22 கோடி

மோடி மட்டும் அல்ல 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் 5 ஆண்டுகளில் 38 நாடுகளுக்கு வெளி நாட்டுப் பயணம் மேற்கொண்டார் என்றும், அதற்காக அரசு செலவு செய்தது 493.22 கோடி ரூபாய் என்றும் தரவுகள் கூறுகின்றன.

மோடி, மன்மோகன் சிங்கை விட செலவு குறைவு தான்

மோடி, மன்மோகன் சிங்கை விட செலவு குறைவு தான்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் மன்மோகன் சிங்கை விட, மோடி அதிக வெளி நாட்டுப் பயணங்களை மேற் கொண்டிருந்த போதிலும் செலவு குறைவே . இதற்கு காரணம் ஒரே நேரத்தில் பல நாடுகளுக்கு பயணம் மேற் கொண்டதே என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Narendra Modi’s 240 ‘non-official’ trips: Rs 1.4 crore paid BJP in 5 years

The Bharatiya Janata Party paid a total of Rs 1.4 crore to the Indian Air Force for 240 non-official domestic trips made by Narendra Modi since the start of his tenure as prime minister till January 2019
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X