விரைவில் புதிய ரூ.200, 500 நோட்டுகள்.. RBI கவர்னர் சக்தி காந்ததாஸ் கையெழுத்திட்ட தாள்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ரிசர்வ் வங்கி இயக்குனர் ஷக்திகாந்த தாஸின் கையெழுத்துடன் கூடிய, புதிய 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கடந்த வாரம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

இந்த நிலையில் சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ஷக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார். இதனால், அவரது கையெழுத்துடன் கூடிய புதிய 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விரைவில்  புதிய ரூ.200, 500 நோட்டுகள்.. RBI  கவர்னர் சக்தி காந்ததாஸ் கையெழுத்திட்ட தாள்கள்

புதிய நோட்டுகளுடன், தற்போது பயன்பாட்டில் உள்ள 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களும் புழக்கத்தில் இருக்கும் என்றும் மத்திய வங்கியான ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கை கொடுக்கும் சூரியன் : சூரியசக்தி மின் உற்பத்தி திறன் 7,500 மெகாவாட் வரை உயரும் என மதிப்பீடு

சில்லறை தட்டுப்பாட்டை குறைக்க வெளியிடப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் வெளியானது. அதோடு சில்லறை தட்டுப்பாட்டை குறைக்க புதிய 200 ரூபாய் தாள்களும் வெளியிடப்பட்டன.

14வது IAS அதிகாரி சக்திகாந்த தாஸ்
இந்த நிலையில் முன்னாள் ஆர்.பி.ஐ கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமாவைத் தொடர்ந்து, புதிய RBI ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளவர் தான் IAS அதிகாரியான சக்திகாந்த தாஸ் ஆவார். RBIக்கு என வரைறுக்கப்பட்டுள்ள விதிப்படி நிதித்துறையின் ஆலோசனையோடு யாரைவேண்டுமாலும் பிரதமர் RBI ஆளுநராக நியமிக்கலாம். அவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள சக்திகாந்த தாஸ் 25 வது RBI ஆளுநராவார். இதோடு இப்பதவி பெறும் 14வது IAS அதிகாரி சக்திகாந்த தாஸ் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

 

ரூ.25000 கோடி பத்திரங்கல் மூலம் நிதி திரட்ட முடிவு
இவர் பதவியேற்ற சில காலங்களிலேயே சில அதிரடி முடிவுகளை வெளியிட்டதுடன், வங்கிகளுக்கான வட்டி விகிதத்தையும் இரு முறை குறைத்துள்ளார் என்பதும் கவனிக்க தக்க விஷயமாகும். இதோடு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட கடன் பத்திரங்கள் மூலம் 25,000 கோடி ரூபாய் இரு தவணைகளில் வெளி சந்தைகளில் வாங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதோடு வரும் மே முதல் வாரத்தில் இந்த கடன் பத்திரங்கள் செயல்பாட்டுக்கு வரலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் பனப்புழக்கம் அதிகரிக்கும் என்று ஆர்.பி.ஐ வெளியிட்டிருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

New Rs 200 currency notes coming soon, says RBI

The reserve bank of india has announced that it will soon issue new Rs.200, 500 currency bank notes. Also rbi said that the new rs.500 notes will come with the signature of RBI governor shakthikanta das
Story first published: Friday, April 26, 2019, 12:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X