என்னிடமே ரூ.1 கோடி தராம ஏமாத்திட்டாய்ங்க..! Modi-ஜியோட கோட் சூட்டயே 4.3 கோடிக்கு வாங்குனவன் நான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் ரட்சகனாக மோடி தன்னைக் காட்டிக் கொண்டிருந்த போது, சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு ஒரு கோட் சூட்டை வாங்கினார். அந்த கோட் சூட்டில் Narendra damodaradas modi, Narendra damodaradas modi என காவி நிறத்தில் அச்சிடப்பட்டிருந்தது. மொத்த இணையமும் கொதித்துவிட்டது.

 

அரசு செலவில் இத்தனை ஆடம்பரமா..? என பத்திரிகைகள் கேள்வி எழுப்பிய உடனேயே, அதை ஒரு குஜராத் வியாபாரி 4.3 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். அந்த 4.3 கோடி ரூபாயை அரசுக்கே கங்கையை சுத்தப்படுத்தும் நிதியாக கொடுத்துவிட்டார் மோடி. இப்படி ஒருவழியாக அந்த சூட் பூட் பிரச்னை ஓய்ந்தது.

ஆனால் அந்த சூட்டை விலை கொடுத்து வாங்கிய குஜராத் வியாபாரிக்கு, இப்போது சனி பிடித்திருக்கிறது போல. வியாபாரத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்களை பறி கொடுத்திருக்கிறார். காவல் நிலையத்தில் கதறிக் கொண்டிருக்கிறார்.

விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டுக்கள்..! வழக்கம் போல பின்னால் ஸ்வச் பாரத் லோகோ..!

லால்ஜி படேல்

லால்ஜி படேல்

லால்ஜி படேல் மற்றும் அவரின் மகன் ஹிதேஷ் படேல் ஆகியோர் தான் பிரமரின் 10 லட்சம் ரூபாய் கோட் சூட்டை 4.31 கோடி விலை கொடுத்து வாங்கிய புத்திசாலி வியாபாரிகள். இப்போது வரை நரேந்திர மோடியின் சூட்டை இவர்களின் வைர பட்டறையின் வாயிலில் வைத்து பாதுகாக்கிறார்களாம். இவர்களின் வைர வியாபார நிறுவனத்தின் பெயர் தர்மானந்தன் டைமண்ட்ஸ் (Dharmanandan diamonds).

புதிய வைர வியாபாரம்

புதிய வைர வியாபாரம்

ஜனக் தோலா என்கிற வைர தரகர் மூலம் தான் ஹிம்மத் கெளசியா மற்றும் விஜய் கெளசியா அண்ணன் தம்பிகள், நம் லால்ஜி படேலுக்கு அறிமுகமாகிறார்கள். இந்த கெளசியா குடும்பத்தவர்களுக்கு நந்து தோஷி நி வாட் (Nandu Doshi Ni wad) என்கிற பெயரில் தனி வைர நிறுவனத்தை நடத்தி வந்திருக்கிறார்களாம். இவர்களின் முதல் சந்திப்பு சுமார் ஐந்து மாதங்களுக்கு முன் நடக்கிறது.

வியாபாரம்
 

வியாபாரம்

லால்ஜி படேல், இந்த கெளசியா சகோதரர்களுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, பட்டை தீட்டப்படாத வைரத்தைக் கொடுக்கிறார். இந்த வைரத்துக்கான பணத்தை அடுத்த நான்கு மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்துவதாகவும் சொல்லி இருக்கிறார்கள். சரி நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிறதே என கெளசியா சகோதரர்களின் கடையை விசாரித்தால் சில வாரங்களாக கடை பூட்டி இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதன் பிறகு தங்களால் முடிந்த வரை கெளசியா சகோதரர்களை தேடி இருக்கிறார்கள். ஆனால் பிடிபடவில்லை.

காவல் நிலையம்

காவல் நிலையம்

ஆக இப்போது கட்டர்கம் (Katargam) காவல் நிலையத்தில் கெளசியா சகோதரர்களைப் பற்றிச் சொல்லி, லால்ஜி படேலின் தர்மானந்த் டைமண்ட்ஸ் சார்பாக, அதன் பொது மேலாளர் கமலேஷ் கெவாடியா புகார் அளித்திருக்கிறாராம்.,1500 கேரட் மதிப்புள்ள பட்டை தீட்டப்படாத வைரம் வாங்கிச் சென்றவர்கள் பணத்தையும் கொடுக்கவில்லை, வைரத்தையும் கொடுக்கவில்லை என கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்களாம். வைரத்தை பட்டை தீட்டி விற்றால் குறைந்த பட்சம் இன்னும் ஒரு கோடி ரூபாயை விலை கூட்டி விற்கலாமாம்.

"மோடி ஜி கோட் சூட்டயே 4.3 கோடி விலை கொடுத்த வாங்கி கின்னஸ் சாதனை படைத்தவன் நான். இப்ப ரெண்டு திருட்டுப் பசங்க கிட்ட என்னோட ஒரு கோடி ரூபாய் சரக்க விட்டுட்டேனே" என, தன் வைர பட்டறைக்கு வெளியே கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்திருக்கும் மோடி கோட் சூட்டைப் பார்த்து கதறிக் கொண்டிருக்கிறாராம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: modi மோடி
English summary

lalji patel who bought modi dress coat suit for 4.3 crore now lost his 1 crore worth of diamonds

lalji patel who bought modi dress coat suit for 4.3 crore now lost his 1 crore worth of diamonds
Story first published: Saturday, April 27, 2019, 15:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X