விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டுக்கள்..! வழக்கம் போல பின்னால் ஸ்வச் பாரத் லோகோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கூடிய விரைவில் மத்திய ரிசர்வ் வங்கி புதிய 20 ரூபாய் நோட்டுத் தாள்களை வெளியிடப் போகிறார்கள். தற்போதைய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸின் கையெழுத்தைத் தாங்கி வெளி வர இருக்கும் இந்த புதிய 20 ரூபாய் நோட்டின் பின் புறம் உலகப் புகழ் பெற்ற எல்லோரா குகைப் படத்தைப் பதிப்பிக்கிறார்களாம்.

 

இந்த புதிய 20 ரூபாய் நோட்டின் வண்ணம் பச்சை கலந்த மஞ்சளாக இருக்குமாம். இந்த புதிய நோட்டுக்கள் புழக்கத்தில் வந்தாலும், பழைய 20 ரூபாய் நோட்டுக்களும் புழக்கத்தில் இருக்குமாம். இந்த புதிய 20 ரூபாய் நோட்டுக்கள் 129 மில்லி மீட்டர் நீளத்துடனும், 63 மில்லி மீட்டர் அகலத்துடனும் இருக்குமாம்.

விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டுக்கள்..! வழக்கம் போல பின்னால் ஸ்வச் பாரத் லோகோ..!

வழக்கம் போல இந்திய ரூபாய் நோட்டுக்களின் முன் புறத்தில் இருப்பது போல மாகாத்மா காந்தியின் படம், 20 ரூபாய் என ஆங்கிலத்திலும், தேவ நகரியிலும் எண்களில் அச்சிடப்பட்டு இருப்பது, சின்ன எழுத்துக்களில் 'RBI', 'भारत ', 'INDIA', '20' என அச்சிடப்பட்டிருப்பது, பாதுகாப்பு நுண்ணிழை, அசோகத் தூண், காந்திக்கு வலது பக்கத்தில் ஆர்பிஐ ஆளுநர் கையெழுத்து, 20 என்கிற வாட்டர் மார்க் என அனைத்தும் இருக்கின்றன. புதிய 20 ரூபாய் நோட்டுக்களின் பின் புறத்தில் எந்த ஆண்டு இந்த நோட்டுக்கள் அச்சிடப்பட்டது என்கிற விவரம், ஸ்வச் பாரத் லோகோ, 15 அட்டவணை மொழிகள், எல்லோரா குகையின் படம் என ஒரு மாதிரியாக இருக்கிறது.

நவம்பர் 08, 2016-க்குப் பிறகு முதலில் ரோஸ் நிறத்தில் 2000 ரூபாய் தாள்களும், பச்சை நிறத்தில் 500 ரூபாய் தாள்களும், ஆரஞ்சு வண்ணத்தில் 200 ரூபாய் தாள்களும், நீல வண்ணத்தில் 100 ரூபாய் தாளும், பச்சை மற்றும் நீலம் கலந்த வண்ணத்தில் 50 ரூபாய் தாள்களும், பிரவுன் நிறத்தில் 10 ரூபாய் தாள்களும் வெளியிட்டது ஆர்பிஐ. இப்போது 20 ரூபாய்க்கும் ஒரு புதிய வண்ணத்தில், புதிய நோட்டுக்களை வெளியிட இருக்கிறது ஆர்பிஐ. மோடிஜி ஆட்சிக்காலத்தில் என்ன மாறம் கண்டீர்கள் என யாராவது கேட்டால், கலர் கலராக இந்த நோட்டுக்களை எடுத்துக்காட்டுங்கள் என நெட்டிசன்களும் வலைதளங்களில் ட்ரோல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

 

Pepsi பானங்களுக்கு தடை வேண்டாம்..! 9 விவசாயிகளுக்கு எதிரான வழக்கில் சமாதானம் தேடும் Pepsico..!

இப்போது வரை இந்தியாவில், ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பொறுப்பு, மத்திய ரிசர்வ் வங்கியிடம் தான் இருக்கிறது. மிக முக்கியமாக பணமதிப்பிழப்பு காலத்தில், புதிய நோட்டுக்களை அச்சடிக்கும் பெருஞ்சுமையையும் நம் ஆர்பிஐ தான் சுமந்தது. அதோடு சுமார் 21,000 கோடி ரூபாயை செலவழித்து புதிய நோட்டுக்களை அச்சடித்தது மத்திய ரிசர்வ் வங்கி.

எது எப்படியோ பாரதிய ஜனதா கட்சி கொண்டு வந்த ஸ்வச் பாரத் திட்டத்தை அனைத்து புதிய ரூபாய் நோட்டுக்களிலும் பதிவு செய்துவிட்டது. இதை இன்று வரை சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் குற்றமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறர்கள். ஆனால் மோடி தான் பத்திரிகையாளர்களையே சந்திப்பதில்லையே..! பிறகு தானே சமூக வலைதளங்களில் சொந்தமாக பேசுவது... எனவும் குற்றம்சாட்டுகிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rbi ஆர்பிஐ
English summary

rbi is gong to introduce new 20 rupee note with swachh bharat logo

rbi is gong to introduce new 20 rupee note with swachh bharat logo
Story first published: Saturday, April 27, 2019, 13:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X