ஆபத்தை தரும் ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்புவிற்கு தடை வேண்டும்.. ஆபத்தான வேதிப்பொருட்கள் உள்ளது

டெல்லி : ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்தி வைக்க வேண்டும் என குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளது. இதோடு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள் உள்ளிட்ட அனைத்து அரசுகளுக்கும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

அதோடு கடைகளில் தற்போது விற்பனைக்காக வைத்துள்ள ஷாம்பு பாட்டில்களையும் அகற்ற வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாம். மேலும் ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்புவில் பல நச்சு பொருட்கள் கலந்திருப்பதாகவும், இது குழந்தைகளுக்கு புற்று நோய் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் ஆக இந்த பேபி ஷாம்புவிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கூறியுள்ளது.

ஏற்கனவே இந்த மாத தொடக்கதில் இதே போன்று செய்தியை வெளியிட்ட தகவல்களும் இதையே தான் கூறின. அதாவது குழந்தைகள் பராமரிப்புப் பொருள்களின் முன்னணி பிராண்டாகத் திகழும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பு தர பரிசோதனையில் தோல்வியடைந்தது என்பதுதான்.

ஜான்சன் & ஜான்சன்  நம்பகத்தன்மை இல்லை

ஜான்சன் & ஜான்சன் நம்பகத்தன்மை இல்லை

இந்தியாவை விட வெளிநாடுகளில் ஜான்சன் தயாரிப்புகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன. இந்த நிலையில் ஜான்சன் & ஜான்சன் தயாரிப்புகளில் நம்பகத்தன்மை இல்லை என்றும், அவற்றில் புற்று நோயை உருவாக்கும் வேதிப் பொருட்கள் உள்ளன என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பின் திடுக்கிடும் பரிசோதனை முடிவை மாநில மருந்துகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டது.

ஜான்சனின் No more tears

ஜான்சனின் No more tears

ராஜஸ்தான் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, ஜான்சன்& ஜான்சனின் No more tears பேபி ஷாம்பு மாதிரிகளை ஆய்வு செய்தன. அதன் பின்னர் செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு காலாவதி ஆகும் ஷாம்பு மாதிரிகளையும் சோதனை செய்தது. இந்த நிலையில் இந்த ஷாம்பு மாதிரிகள் அனைத்தும் ஹிமாச்சல பிரதேசம், பட்டியில் உள்ள ஜான்சன் & ஜான்சன் ஆலைகளில் தயாரிக்கப்பட்டவையே. இதில் ஒரு லட்சம் மாதிரிகள் அடங்கிய பெட்டியில் சில மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில் அவற்றில் தீங்கு விளைவிக்கும் ஃபார்மால்டிஹைட் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜான்சன் & ஜான்சன் ஷாம்புவில்  வேதிப்பொருட்கள்

ஜான்சன் & ஜான்சன் ஷாம்புவில் வேதிப்பொருட்கள்

ஃபார்மால்டிஹைட் என்பது கட்டடப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படக் கூடிய வேதிப் பொருளாகும். இதைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது புற்றுநோயை உருவாக்கலாம். இதனால் தரப் பரிசோதனையில் ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு தோல்வியடைதுள்ளதாக கடந்த மார்ச் முதல் வாரத்தில் பதிவான பரிசோதனை முடிவில் குறிப்பிடப்பட்டது.

அரசுக்கு உத்தரவாதம்  கொடுத்தது

அரசுக்கு உத்தரவாதம் கொடுத்தது

இந்த நிலையில் இந்த நிறுவனம் ஜான்சன் & ஜான்சன் செய்தித் தொடர்பாளர், இந்த இடைக்கால ஆய்வு முடிவுகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அரசாங்கம் எந்த முறையில் சோதனை செய்தது என்பதை குறிப்பிடவேயில்லை. அதேசமயம் எங்கள் தயாரிப்புகள் பாதுகாப்பானவை. அரசாங்கத்தின் இந்த ஆய்வு முடிவுகள் இடைக்காலத்திற்கானவை. ஆக இந்த ஆய்வுகள் தெளிவாக இல்லை. எங்கள் தயாரிப்புகளில் ஃபார்மாடிஹைட் சேர்க்க மாட்டோம் என்று இந்திய அரசுக்கு உத்தரவாதம் கொடுத்துள்ளோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவிலும்  ஆயிரக்கான வழக்குகள்

அமெரிக்காவிலும் ஆயிரக்கான வழக்குகள்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் அமெரிக்காவில் ஜான்சன் அன்டு ஜான்சன் பவுடர் பயன்படுத்தி புற்றுநோய் உண்டானதாக அந்த நிறுவனம் மீது ஆயிரக்கணக்கான வழக்கு தற்போதும் நிலுவையில் உள்ளன. மேலும் இது குறித்து வாஷிங்டன் பத்திரிக்கை கடந்த 2018ல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் அபராதம் கட்டியது

அமெரிக்காவில் அபராதம் கட்டியது

மேலும் இதில் பெண்களுக்கு ஏற்பட்ட பதிப்புக்காக $ 550 மில்லியனை இழப்பீட்டுத் தொகையை வழங்கியது என்றும், தண்டனையாக $ 4.14 பில்லியன் அபராதம் விதித்தது என்றும், இந்த வழக்கு குறித்து வழக்கறிஞர் மார்க் லானியர் செய்திக்குறிப்பில் வெளியிட்டுருப்பதாகவும் அந்த வாஷிங்டன் பத்திரிக்கை வெளியிட்டிருந்தது.

ஜான்சன் & ஜான்சன்  தொடர்ந்து மேல்முறையீடு

ஜான்சன் & ஜான்சன் தொடர்ந்து மேல்முறையீடு

ஆனால் ஒவ்வொரு முறையும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக ஜான்சன் & ஜான்சன் மேல்முறையீடு செய்துகொண்டே இருக்கிறது என்றும், ஆனால் இது வரை இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்றும் அந்த வாஷிங்க் டன் பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. இது தொடர் வாடிக்கையாக நிகழ்ந்து வரும் ஒரு நிகழ்வே என்றாலும் அதை அப்படியேயும் விட முடியாது. ஏனெனில் குழந்தைகளின் மென்மையான சருமத்துக்கு பயன்படுத்தப்படும் பொருள்களை மிகவும் கவனமாகத் தேர்வு செய்ய வேண்டியது பெற்றோரின் கடமையே.

மாற்றாக  இயற்கைப் பொருள்கள்

மாற்றாக இயற்கைப் பொருள்கள்

ஜான்சன் & ஜான்சன் பவுடர், ஷாம்பு போன்ற பொருள்களுக்கு மாற்றாக, இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தினால் எந்த தீங்க்கும் நம்மை தீண்டாது என்பதில் சந்தேகமில்லை. அதுவும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கை வழி பொருட்களால் தான் இன்றும் நமது பெற்றோரும் மூதாதையரும் எந்தவித பிரச்சனையும் இன்றி நலமுடன் வாழ்கிறார்கள். நாமும் அதை பின்பற்றினால் நமக்கும் நாட்டுக்கும் நல்லதே. குறிப்பாக நமது குழந்தைகளுக்கு மிகவும் நல்லதே.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+