இன்னைக்கும் லேட்.. கடுப்பில் ஏர் இந்தியா பயணிகள்.. 197 நிமிடம் தாமதம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : கடந்த சனிக்கிழமையன்று சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் விமானங்கல் பல மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன. இதன் எதிரொலியாக இன்றும் 137 விமானங்கள் கால தாமத்துடன் இயங்கும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

 

கடந்த சனிக்கிழமையன்று ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் விமான பயணச் சீட்டுக்களை புக் செய்திருக்கும் விமானிகளின் செக் இன் தொடங்கி, லக்கேஜ் மற்றும் உடைமைகளை பேக் செய்வது, கவுண்ட்ரில் முன் பதிவுகளை மேற்கொள்வது என எல்லா விஷயமும் இந்த பயணிகள் மென்பொருளை (software) நம்பித் தான் இருக்கிறது.

இந்த நிலையில் இந்த மென்பொருள் தான் சனிக்கிழமை அதிகாலை 3.30 மணி முதல் காலை 8.45 வரை சரியாக வேலை செய்யவில்லை என்று அறிவித்தது. இந்த நிலையில் சனிக்கிழமை சுமார் 149 விமானங்கள் கால தாமதமாக புறப்பட்டன.

என் வீட்டை வாங்கிக் கொடுங்கள்.. கதறும் அமரபள்ளி விளம்பர தூதர் தோனி.. உச்ச நீதி மன்றத்தில் வழக்கு என் வீட்டை வாங்கிக் கொடுங்கள்.. கதறும் அமரபள்ளி விளம்பர தூதர் தோனி.. உச்ச நீதி மன்றத்தில் வழக்கு

நேத்தும் லேட் - இன்னைக்கும் லேட் தான்

நேத்தும் லேட் - இன்னைக்கும் லேட் தான்

இந்த நிலையில் சனிக்கிழமை ஏற்பட்ட கால தாமதத்தின் காரணமாக ஏர் இந்தியாவின் 137 விமானங்கள் 197 நிமிடங்கள் ஞாயிற்றுக்கிழமையான இன்று தாமதமாக இயங்கும் விமானம் இயங்குவதாகவும் ஏர் இந்திய விமான துறை செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

அடுத்தடுத்த செக்டாரிலும் லேட் தான்

அடுத்தடுத்த செக்டாரிலும் லேட் தான்

இதன் விளைவு ஞாயிறன்றும் உள்ளது. இதுபற்றி கேட்டபோது, முதல் செக்டாரில் தாமதம் காரணமாக, 137 விமானங்கள் 197 நிமிடங்கள் (சராசரியாக) தாமதமாக உள்ளன என்றும், இதன் பின் விளைவு அடுத்தடுத்த செக்டார்களிலும் இருக்கும் என்பது தான்.

மூன்று செக்டாருக்கும் பாதிப்பு இருக்கும்
 

மூன்று செக்டாருக்கும் பாதிப்பு இருக்கும்

ஒரு விமானம் முதல் செக்டாரில் கால தாமதமாகி விட்டால், அது இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரிவுகளிலும் தாமதமடையக் கூடும். நாளொன்றுக்கு ஒரு துறையிலிருந்து ஒரு விமானம் பொதுவாக செல்கிறது. உதாரணமாக, டெல்லி-மும்பை ஒரு துறையானது, மும்பை-பெங்களூரு மற்றொரு துறை மற்றும் பெங்களூரு-சென்னை மூன்றாவது துறை ஆகும்.

ஏர் இந்தியாவின் 137 விமானங்கள் மட்டுமே லேட்

ஏர் இந்தியாவின் 137 விமானங்கள் மட்டுமே லேட்

ஏர் இந்தியா குழுமம், துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய விமானங்களின் சராசரி எண்ணிக்கை 674 ஆகும். ஆக இதனால் விமான சேவை பாதிக்கப்படுவதுடன் பல பயணிகளும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதில் குறிப்பிடப்பட்ட 137 விமானங்கள் மட்டுமே லேட்., எனினும் மற்ற விமானங்களின் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கின்றது என்றும் ஏர் இந்தியா கூறியுள்ளது.

பயணிகள் மிகுந்த அவதி

பயணிகள் மிகுந்த அவதி

இந்த நிலையில் பல ஆயிரம் பயணிகள் போய்ச் சேர வேண்டிய இடத்திற்கு சேர முடியாமலும் அவதிப் பட்டு வருகின்றனர். மேலும் இந்திய அரசின் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா அடிக்கடி இதே போன்று செயல்படுவதால் தான் தனியார் துறைகள் வளர்ந்து கொண்டே போகின்றன. இது முதல் முறை அல்ல, இதுபோன்று ஏற்கனவே நடந்துள்ளது. இதனால் பயணீகளின் என்ணிக்கை ஏர் இந்தியா குறைத்துக் கொள்கிறது என்றும் பயணிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Air India software shutdown effect; today also 137 flights to be delayed

The five-hour shutdown of Air India's check-in software, which occurred Saturday morning, is still causing its ripple effect as the airline said 137 flights will be running with a delay on Sunday.
Story first published: Sunday, April 28, 2019, 16:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X