டெல்லி : தொலைத்தொடர்பு நிறுவனங்களில் நிகழ்ந்து வரும் போட்டியின் காரணமாக, பல தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பல சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. இந்த நிலையில் குறைந்த அளவே டேட்டா உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் புதிய டேட்டா பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏர்டெல் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள 48 ரூபாய் மற்றும் 98 ரூபாய்க்கான புதிய ப்ரீபெய்டு டேட்டா ப்ளானை அறிமுகம் செய்துள்ளது. இதில் நாடு முழுவதும் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைய முடியும். புதிய 48 ரூபாய்க்கான டேட்டா ப்ளான் 3ஜி/4ஜி 3ஜிபி டேட்டா, என 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக இத்திட்டம் அறிமுகமாகியுள்ளது.

இதேபோல 98 ரூபாய்க்கான 3ஜி/4ஜி டேட்டா ப்ளானில் 28 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. 98 ரூபாய் ப்ளானில் மட்டும் நாள் ஒன்றுக்கு 10 எஸ்.எம்.எஸ்-கள் இலவசமாக அனுப்ப முடியும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் ஒரு நாளைக்கு எவ்வளவு டேட்டா என்றும் குறிப்பிட படவில்லை. ஆனால் யாருக்கெல்லாம் குறைவான அளவு டேட்டா தேவையோ அவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளாம் என்றும் அறிவித்துள்ளது.
ரூ.29-க்கும் உண்டு
இதுமட்டும் அல்ல தினமும் 520MB டேட்டா எனவும் இது 3ஜி மற்றும் 4ஜி சேவை எனவும், இதற்காக 29 ரூபாய் செலுத்தினால் மட்டும் போதுமானது. அதோடு 92 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கு தினசர் 6GB டேட்டா எனவும் அறிவித்துள்ளது.
ஆஃபர்களை அள்ளித் தெளிக்கின்றன.
ஜியோ நிறுவனத்துக்குப் போட்டியாக பல தொலைதொடர்வு நிறுவனங்களும் இது போன்ற அதிரடி ஆஃபர்களை அள்ளித்தெளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் அரசு தொலைத் தொடர் நிறுவனமான பி.எஸ்.என்.எல் கூட இந்த வரிசையில் உள்ளது. தற்போது பி.எஸ்.என்.எல் நிறுவனம் கூட பல ஆஃபர்களை வாரி வழங்கி வருகிறது.
ஸ்மார்போன் பயன்பாடு அதிகம்- டேட்டாவும் அதிகம்
ஸ்மார்ட்போன் பயன் பாடுகள் அதிகரித்து வரும் இந்த நிலையில் டேட்டாக்களுக்கு என இந்த மாதிரியான பேக்குகள் வருவது மக்களிடையேயும், குறிப்பாக இளைஞர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதுவும் ஜியோ வந்த பிறகு ஏர்டெல், வோடபோன் மற்றும் பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட நிறுவனங்கள் மிக வீழ்ச்சியடைந்தும் உள்ளன, இந்த நிலையில் எப்படியேனும் மக்களிடம் தங்களின் நெட்வொர்க்கை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஆஃபர்கலை கொடுத்து வருகின்றன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications