சம்பளமும் இல்ல டிரீட்மென்டும் இல்ல.. வேற வேலையும் இல்ல.. என்ன செய்ய ஜெட் ஏர்வேஸ் ஊழியர் தற்கொலை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணி புரிந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

 

இந்த நிலையில், பணியிழப்பு காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் கடன் சுமை காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவையை நிறுத்தியதால், அதில் பணிபுரிந்து கொண்டிருந்த 22,000 பேர் வேலையிழந்துள்ளனர். இவர்களில், மகாராஷ்டிரா மாநிலம் நளசோபோரா பகுதியை சேர்ந்த சைலேஷ் சிங் 53 வயாதான இவரும் ஒருவரே.

கடந்த 3 ஆண்டுகளாகவே கடும் வயிற்று புற்று நோயால் அவதிப்பட்டு வந்த இவர், மருத்துவமனையிலிருந்து கடந்த வெள்ளிக் கிழமையன்றே வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் மிகுந்த மன அழுத்தத்தோடு காணப்பட்ட அவர் அன்றைய தினமே தனது வீட்டின் மாடியில் சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

எப்பாவது தான் நெட் யூஸ் பண்னுவீங்கலா.. அப்படின்னா ஏர்டெல் புதிய டேட்டா பிளான்ல ரீசார்ஜ் பண்ணுங்க

ஏற்கனவே கேன்சருக்கு சிகிச்சை

ஏற்கனவே கேன்சருக்கு சிகிச்சை

இது குறித்து ஜெட் ஏர்வேஸ் ஊழியர் வட்டாரத்தில் கூறுயதாவது, தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றி வந்த இவருக்கு கேன்சர் நோய் இருந்ததாகவும், ஏற்கனவே இதற்கு மருத்துவம் பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் மூடப்பட்டதால் அவரது வேலையும் பறிபோனது. இதனால், சைலேஷ் சிங் மிக மன அழுத்தத்தில் காணப்பட்டார்.

கருணை அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும்

கருணை அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும்

இந்த நிலையில் தாம் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருணை அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும்
 

கருணை அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும்

இதனிடையே ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு கருணை அடிப்படையில் ஊதியம் வழங்க பாரத ஸ்டேட் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய விமானிகள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் குறைந்த பட்சம் ஒரு மாத சம்பளத்தையாவது வழங்க வேண்டும் என்றும் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஏலம் நடந்தால் தான் கூடுதல் நிதி

ஏலம் நடந்தால் தான் கூடுதல் நிதி

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஏல நடைமுறைகள் முடிந்த பிறகே கூடுதல் நிதி அளிக்க முடியும் என்று வங்கிகள் கூட்டமைப்பு திட்டவட்டமாக தெரிவித்துவிட்ட நிலையில், ஒரு மாத சம்பளத்தையாவது வழங்குமாறு வங்கிக்கு விமானிகள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

செலவையும் கட்டு படுத்த முடியவில்லை

செலவையும் கட்டு படுத்த முடியவில்லை

இந்த நிலையில் போதிய வருமானமும் இல்லாத நிலையில் தனது மருத்துவ செலவையும் செய்ய முடியாமல், கடனையும் கட்ட முடியாமல் தவித்து வந்த சைலேஷ் சிங் தற்கொலை செய்து கொண்டார் எனவும் விசாரனையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து முறையான அறிக்கைகள் இன்னும் வெளியாகவில்லை எனினும் இதைபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு இதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே இவர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jet Airways employee commits suicide, jumping off building in Maharashtra's Palghar

An ailing senior technician working with the beleaguered Jet Airways allegedly committed suicide by jumping off his building terrace in Maharashtra's Palghar district.
Story first published: Sunday, April 28, 2019, 21:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X