இறக்குமதியாளர்கள் பயப்பட வேண்டாம்..எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க சவுதியுடன் ஒப்பந்தம் இருக்கு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன் : அமெரிக்கா , ஈரான் மீது உள்ள பொருளாதார தடை காரணமாக ஈரானின் எண்ணை வருவாயை முடக்கும் வகையில் அந்த நாட்டில் இருந்து கச்சா எண்ணை இறக்குமதி செய்யும் 8 நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கபோவதாக மிரட்டல் விடுத்து வந்தது.

 

ஆனால் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் அதில் விலக்கு அளித்தது. இருப்பினும் 6 மாதங்களுக்குள் ஈரானிடம் இருந்து எண்ணை வாங்குவதை படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்தது. இந்த கெடு வருகிற மே 2-ந் தேதியுடன் முடிவடையும் நிலையில், இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மேலும் இந்த சலுகையை நீடிக்க முடியாது என அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.

 இறக்குமதியாளர்கள் பயப்பட வேண்டாம்..எண்ணெய்  உற்பத்தியை அதிகரிக்க சவுதியுடன்  ஒப்பந்தம் இருக்கு

அமெரிக்காவின் இந்த முடிவை ஏற்றுக்கொண்டால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பெட்ரோல் டீசல் தட்டுப்பாடும் ஏற்படும், அதோடு விலையும் கணிசமாக உயிரும் அபாயமும் நிலவி வருகிறது. இந்த நிலையில் இதற்கு தீர்வுகாணும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில் ஈரானிடம் இருந்து எண்ணை இறக்குமதி செய்யும் நாடுகள் அச்சம் கொள்ள தேவையில்லை என்பது தான்.

உற்பத்தியை அதிகரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது
ஏற்கனவே சவுதி அரேபியா மற்றும் ஒபெக் நாடுகள் அமைப்பில் உள்ள நாடுகள் எனது வேண்டுகோளை ஏற்று எண்ணை உற்பத்தியை அதிகரிக்க ஒப்பந்தம் செய்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு ஒபெக் நாடுகள் எண்ணையை தாராளமாக உற்பத்தி செய்யுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளன. இதனால் பெட்ரோல் விலை குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.

என்னாது தங்க வாரமா.. அப்படின்னா லீவா... கதிகலங்கி நிற்கும் ஜப்பானியர்கள்

33% கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது
இருப்பினும் அமெரிக்க வாகன உற்பத்தியாளர்கள் அமைப்பு AAA தரவைப் பொறுத்தவரையில், தேவை அதிகரித்திருப்பதால் விலை அதிகரித்தே வருகிறது. கடந்த மாதத்தில் 2.648 அமெரிக்க டாலர்களாக இருந்த விலை தற்போது 2.883 அமெரிக்க டாலர்களாக அதிகரித்தே வர்த்தகமாகின்றன. அதோடு கடந்த மாதத்தில் இருந்து கச்சா எண்ணை விலை சுமார் 33 சதவிகிதம் உயர்ந்துள்ளதும் கவனிக்கதக்க விஷயம் என்றும் வெளியிட்டுள்ளது.

 

கலிபோர்னியாவில் பெட்ரோல் மீது வரி
அதே நேரத்தில் அதே நேரத்தில் ட்விட்டரில் மற்றொரு செய்தியும் வெளியிட்டுள்ளார். அதில் கலிபோர்னியாவில் பெட்ரோல் மீது வரி விதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர்வு பிரச்சினை எழுந்துள்ளது. இதனால் பெட்ரோல் விலையை குறைக்க அம்மாநில ஆளுனர்களுடன் பேசப் போவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Trump says Saudi Arabia, others agree to boost oil production

President Donald Trump said on Friday Saudi Arabia and others in OPEC had agreed to his request to boost oil production in order to tamp down prices. Spoke to Saudi Arabia and others about increasing oil flow. All are in agreement," Trump said on Twitter.
Story first published: Sunday, April 28, 2019, 11:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X