இந்தியாவின் குழந்தைகளுக்கான மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சந்தையின் மதிப்பு 4000 கோடி ரூபாய். இதில் 3,000 கோடி ரூபாய் சந்தையை நம் Johnson and Johnson சிங்கிலாக கையில் வைத்திருக்கிறது.
ஆனால் இப்போது ஒட்டு மொத்த இந்திய சந்தைகளை காலி செய்யும் விதத்தில் Johnson and Johnson நிறுவனம் வெளியிடும் குழந்தைகளுக்கான பவுடர்கள் மற்றும் ஷாம்பூக்களில் புற்றுநோயை உண்டாக்கும் ஃபார்மால்டிஹைட் (Formaldehyde) என்கிற கார்சினோஜென் கூறுகள் இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தில், ஜெய்பூர் மாவட்டத்தில் உள்ள மருந்துகள் சோதனைக் கூடத்தில் (Drug Testing Lab) மேற்கொண்ட பரிசோதனைகளில் Johnson and Johnson நிறுவனத்தின் பொருட்களில் புற்றுநோய்க் கூறுகளான கார்சினோஜென் இருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்களாம்.
தலைமைச் செயலர்களுக்கு கடிதம்
இந்த விவரத்தைக் கேள்விப்பட்ட உடனேயே National Commission for Protection of Child Rights (NCPCR) தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கு Johnson and Johnson நிறுவன பொருட்களை விற்கத் தடை விதிக்குமாறு வலியுறுத்தி கடிதமே எழுதி இருக்கிறது. அதற்கு ஜெய்ப்பூர் மருந்து பரிசோதனைச் சாலைகளில் நடத்திய சோதனை அறிக்கைகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு இந்த கடிதத்தை எழுதி இருக்கிறது.
தெரியப்படுத்த வில்லை
Johnson and Johnson நிறுவனமோ ஜெய்பூர் மருந்து சோதனைச் சாலைகளின் அறிக்கைகளை தாங்கள் நம்பவில்லை என பகிரங்கமாக போட்டு உடைத்துவிட்டார்கள். தங்கள் பொருட்களில் நடத்தப்படும் பரிசோதனைகள் குறித்தும், தங்கள் பொருட்களில் புற்றுநோய் காரணிகளான கார்சினோஜென் இருப்பது குறித்தும் எந்த ஒரு விவரமும் தெரிவிக்கப்படவில்லை என்கிறார்கள்.
சொல்லவில்லை
அதோடு இந்தியாவின் மத்திய மருந்து சோதனைச் சாலைகளில் Johnson and Johnson நிறுவன பொருட்களை சோதனைக்கு கொடுத்திருக்கிறார்களாம். அந்த முடிவுகளுக்காக காத்திருக்கிறார்களாம். ஆகையால் Johnson and Johnson நிறுவன பொருட்களைப் பரிசோதனைச் செய்யும் போதும் சரி, செய்த பின் நாடு முழுக்க Johnson and Johnson பொருட்களுக்கு தடை விதிக்கச் சொல்லும் முன்பும் சரி தங்களுக்கு முறையாக தெரியப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் கொந்தளிக்கிறார்கள்.
100% பின்பற்றுகிறோம்
அதோடு இந்திய அரசு சொல்லி இருக்கும் அனைத்து விதிமுறைகளையும் Johnson and Johnson 100% பின்பற்ரி இருக்கிறது எனவும், Johnson and Johnson நிறுவனத்தின் பொருட்கள் பயன்படுத்த பாதுகாப்பானதாகவும் சொல்லி இருக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டில் சொல்லப்படும் விதிமுறைகளை விடவும் Johnson and Johnson பொருட்களில் கூடுதல் தரம் பின்பற்றப்படுகிறது எனவும் சொல்லி இருக்கிறார்கள்.
மற்ற 3 மாநிலங்கள்
இந்தியாவில் ஆந்திரா, ஜார்கண்ட், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம் என நான்கு மாநிலங்களில் இருந்து Johnson and Johnson நிறுவன பொருட்களை பரிசோதனைக்கு எடுத்துச் சென்று இருக்கிறார்களாம். இப்போது ராஜஸ்தான் தவிர மற்ற 3 மாநில முடிவுகளுக்காகவும் காத்திருக்கிறார்களாம்.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications